சனி, 1 மே, 2010

புத்தர் சிலை அமைப்பது தொடர்பில் குழப்பநிலை ஏற்பட்டது.

யாழ் பிரதான வீதியில் புத்தர் சிலை அமைப்பது தொடர்பில் குழப்ப நிலை தோன்றியுள்ளது.

யாழ் மாநகரசபையில் நேற்று இடம்பெற்ற மாதாந்த கூட்டத்திலேயே, யாழ் பிரதான வீதியில் புத்தர் சிலை அமைப்பது தொடர்பில் குழப்பநிலை ஏற்பட்டது. பிரதான வீதியில் புத்தர் சிலை அமைக்க எண்ணியுள்ள இடத்தில் வீதிக் குறியீடுகள் பொருத்த மாநகரசபை தீர்மானிக்கிறது என்ற சொற்பிரயோகத்தை அடுத்தே, குழப்ப நிலை ஏற்பட்டது.

புத்தர் சிலையை அமைக்க யாழ் மாநகரசபை எண்ணவில்லை என்பதுடன், இவ்வாறான சொற்பிரயோகம் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினையை தோற்றுவிக்கும் எனவும் எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டனர். இந்த நிலையில், இவ்வாறான சொற்பிரயோகத்தை பிரேரணையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் யாழ் மாநகரசபையின் எதிர்க்கட்சியினர் கோரியிருந்தனர்.

இதற்குப் பதிலளித்த யாழ் மாநகரசபை முதல்வர் அதனை மாற்றியமைக்க முடியாது என்று கூறியதை அடுத்து குழப்ப நிலை ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை: