ஞாயிறு, 19 மார்ச், 2023

இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்களுக்கு ஒரு நிமிடம்கூட அனுமதி இல்லை - மந்திரி டக்ளஸ் தேவானந்தா

 மாலைமலர் :     இந்திய ஊடகவியலாளர்கள் இங்கே நேரடியாக வந்து செய்திகளை சேகரிக்க வேண்டும் என கூறினார்.
கொழும்பு: இலங்கை மீன்வளத்துறை மந்திரி டக்ளஸ், வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு மீனவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது. பாஸ் நடைமுறையும் இல்லை.
தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவரிடம் அரசாங்க ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்திய ஊடகவியலாளர்கள் இங்கே நேரடியாக வந்து செய்திகளை சேகரித்து நிலமைகளைப் பார்த்துவிட்டு செல்லட்டும். அப்போதுதான் இந்தியாவில் உள்ள மக்களுக்கு இலங்கை நிலவரம் புரியும் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: