ஞாயிறு, 5 ஜனவரி, 2020

திரௌபதி... மோகன் ஜி போன்றவர்களிடம் இருந்து பெண்கள் விலகி இருப்பதுதான் நல்லது .

Surya Thozhar : சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் திருமணம் செய்து வைக்கப் புரோகிதராகச் செல்கிறார் பிரம்மா.
அவர்கள் இருவரும் ஓமகுண்டத்தைச் சுற்றி வரும்போது பார்வதியின் மடிசார் விலகி அவரது தொடை தெரிகிறது. பார்வதி மீது பிரம்மனுக்கு மோகம் வருகிறது.
உடனே பிரம்மனின் விந்து வெளியேறுகிறது. அந்த விந்து விழுந்த இடமெல்லாம் ரிஷிகள், அரக்கர்கள் என பல பேர் பிறக்கிறார்கள்.
விந்து நிற்காமல் வெளியேறிக் கொண்டே இருப்பதால் கொஞ்சூண்டு விந்தை தடாகத்தில் உள்ள தாமரையில் விடுகிறார் பிரம்மா. அதிலிருந்து பத்மை எனும் சரஸ்வதி பிறக்கிறார்.
சரஸ்வதியின் அழகைக் கண்டு மயங்கிய பிரம்மா அவரோடு உடலுறவு கொள்ள ஆசைப்படுகிறார். நான் உங்கள் மகள் என மறுக்கிறார் சரஸ்வதி.
சரஸ்வதியை ஒத்துக்கொள்ளச் செய்வதற்காக ஒரு மந்திரத்தைச் சொல்கிறார் பிரம்மா.
"மாதரமுபைத்ய கஸாரமுபைதி
புத்ரார்தீத சகாமார்த்தி
நாபத்திரலோகா நாஸ்தீத

ஸர்வம்பரவோ விந்துஹஃ
தஸ்மார்த் புத்ரார்த்தம்
மாதரம், ஹூரஞ்சதி,ரோஹதி"
இதன் பொருள் என்னவென்றால்
புத்ரார்த்த நிமித்தம் (பிள்ளை பெறுவதற்காக) தாய்,தமக்கை,மகள் யாரோடாயினும் கூடலாம் என்பதாகும்.
(ஆதாரம்:-மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி எனும் தந்தை பெரியார் எழுதிய நூல். பக்கம் 3-4)
தந்தை பெரியார் இப்படிச் சுட்டிக்காட்டியதன் நோக்கம் கடவுளை இழிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை என்பதை இந்த நூலைப் படிக்கும் போதே புரிகிறது. கடவுளை இப்படியெல்லாம் இழிவுபடுத்தி எழுதியுள்ளார்களே என்று அறிவுக்கண் கொண்டு அணுகுங்கள் என்கிறார்.
கடவுளை இப்படி இழிவுபடுத்தி எழுதியதற்கு எது காரணமாக இருந்திருக்கும் என்ற கேள்வி எழுகிறது. அதற்கான வரலாற்றுக் காரணங்களை அறிந்திட வேண்டும்.
ஆரியர்கள் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு இந்த நிலப்பரப்பிற்குள் நுழைந்த போது அவர்களோடு பெண்கள் வரவில்லை என்றே வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. இங்கிருந்தவர்களோடு தடையற்ற கலப்பை உருவாக்கும் தங்களின் தாகத்திற்கு ஏற்ப கதைகளை உருவாக்கும் தேவையும் அதற்கு இருந்தது. அந்தக் கதைகள் கடவுள் சார்ந்து கற்பிக்கப்பட்டால் தான் ஏற்புத்தன்மை பெறும் என்றும் அது கருதியது.
தடையற்ற கலப்பின் மூலம் தங்களை பெரும்பான்மையாக்கிக் கொள்வதே அதன் கருத்து. பிரம்மா-சரஸ்வதி சார்ந்த உறவுகள் போன்று, இன்று மட்டுமல்லாமல் எப்போதும் இந்த நிலப்பரப்பில் வாழ்ந்த எந்தவொரு சமூக குழுக்களிலும் தாய்,தங்கை,மகளுடனும் கூட உறவு கொள்ளும் சிந்தனை இருந்ததில்லை. இந்தக் கதையை ஏற்பவர் கூட நடைமுறையில் கடவுள் பெயரால் முயற்சித்தும் பார்ப்பதில்லை.
அவர்கள் இங்கு வரும்போது மக்களிடம் எத்தகைய உறவு முறைகள் இருந்தது என்பதை அறிய புத்தரின் போதனைகளுக்குள் செல்ல வேண்டியுள்ளது. அவர் தான் காலத்தில் மூத்தவர்.
பஞ்சசீலம் என்பது புத்தருடைய தம்ம கோட்பாடுகளில் முக்கியமானது. பஞ்ச சீலம் என்னும் வடமொழிச் சொல்லுக்கு, ஐவகையொழுக்கம் என்று பொருள். புத்தர் ஐவகைக் கொள்கைகளை இல்லறத்தாருக்கும், துறவிகளுக்கும் வகுத்தார். அவை கொல்லாமை, திருடாமை, காம வெறியின்மை, பொய்யாமை, குடியாமை என்பதே.
தர்மர் என்பது புத்தரின் பெயர்களுள் ஒன்று. சங்கம் வைத்து அதன் அதிபதியாக அவர் கருதப்பட்டதால் சபாபதி என்றும், சபாநாயகர் என்றும் அறியப்பட்டார். அவர் இறந்த (அந்தி) மார்கழி மாதம் சங்கம் வைத்து அறம் வளர்த்தவர் அந்திமயமான காலம் என்பதால் சங்கம்+அறர்+அந்தி=சங்கராந்தி என்று கடைபிடித்தனர்.
புத்தரை அவருடைய பஞ்சசீலக் கொள்கையை தகர்த்து, கட்டுப்பாடற்ற கலப்பு என்பதைக் கட்டமைக்க உருவாக்கப்பட்ட ஒரு கதை பாத்திரத்திற்கு தர்மர் என்ற பெயர் வைத்து அவருடைய மனைவியை அவருடைய சகோதரர் அனைவருக்கும் மனைவியாக இருப்பது போல் உருவாக்கப்பட்டது தான் மகாபாரதமும் ஒருத்தி ஐந்து பேருடன் வாழ்ந்தாள் என்ற கதையும்.
இந்திய வரலாறென்பது பௌத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் நடந்த யுத்தமே என்பார் அண்ணல் அம்பேத்கர்.
இந்தியாவிற்கென்று சொந்த வரலாறு என்பது கிடையாது.அதன் வரலாறெல்லாம் அடுத்தடுத்து படையெடுத்து வந்த ஆக்கிரமிப்பாளர்களின் வரலாறே என்பார் மாமேதை மார்க்ஸ்.
மோகன்ஜியிடமிருந்தும், அவர் சார்ந்த கருத்துக் கொண்டோரிடமிருந்தும், அவர்களது சமூகப் பெண்கள் மட்டுமல்லாமல் குடும்பப் பெண்களும் விலகியிருப்பது நல்லது.
Surya Thozhar