செவ்வாய், 12 ஏப்ரல், 2016

மதேமுதிக சந்திரகுமார் : கூட்டணி தீர்மானம் பிரேமலதாவும் வைகோவும்தான் ...பிரேமலதா பாஜகாவுடன் கூட்டணி வைக்கவே விரும்பினார்

எந்தக் கேள்வி கேட்டாலும் உடனடியாக அவரிடமிருந்து வெளிப்பட்ட பதில்களை நேரலையாகப் பார்த்த பலருக்கும், சந்திரகுமார் சொல்வதில் நியாயம் இருக் கத்தானே செய்கிறது என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனாலும், மக்கள் நலக் கூட்டணியோடு கைகோர்த்ததை எதிர்த்து, போர்க்கொடி  தூக்கியதால் வெளியேற்றப்பட்ட தே.மு.தி.க கொ.ப.செ.சந்திரகுமாரிடம் கேட்பதற்கான கேள்விகள் நிறைய இருப்பதால் அவற்றை முன்வைத்தோம்.

நக்கீரன் :  மக்கள் நலக் கூட்டணியோடு தே.மு.தி.க. கூட்டணி வைத்து; 13 நாட்கள் கழித்து எதிர்ப்புக் குரலை எழுப்பியது சரியா?
சந்திரகுமார் :;நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி அது.
மார்ச் 23-ந் தேதி காலை, கட்சியின் தலைமை அலுவலகத்துக்குப் போன போதுதான், இது பற்றித் தெரிய வந்தது. அதற்கு முன்புவரை கட்சித் தொண்டர்களின் விருப் பத்திற்கு ஏற்ப,  தி.மு.க. கூட் டணியில் சேரப்போகிறோம் என்ற எண்ணத்தை எங்கள் மனதில் பதிய வைத்திருந்தார் கேப்டன். அவர் மீதான விசுவாசத்தால், உடனடியாக எண்ணத்தை வெளிப்படுத்தாமல் கட்டுப்பட் டோம். ம.ந.கூ.வின் ஐந்தாம் கட்டப் பிரச்சாரப் பயணத்தில், கட்சியின் சார்பில் என்னைக் கலந்துகொள்ளச் சொன்ன நிலை யில், கேப்டனை சந்தித்தேன். அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற நமது தொண்டர்கள்-நிர்வாகிகள் விருப்பப்படி தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்று ஒரு கடிதம் கொடுத்தேன். அதைப் படித்துப்பார்த்த கேப் டன், "கவலைப்பட வேண்டாம். வேட்புமனுவை வாபஸ்பெறும் நாள்வரை நமக்கு டைம் இருக் கிறது' என்று பிரச்சாரத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால் நான் திரும்பிவந்தபிறகு கேப்டன் என்னிடம் பேசுவதைத் தவிர்த் தார். அதன்பிறகுதான்  தொண் டர்களின் குரலை பகிரங்கமாக எதிரொலிக்கத் தொடங்கினோம்.

நக்கீரன் : கட்சியைப் பிளவுபடுத்தும் உங்கள் செயல் பாட்டின் பின்னணியில் தி.மு.க. இருக்கிறது என்று குற்றம் சாட்டப்படுகிறதே?
சந்திரகுமார் : ஜெயலலிதாவை ஆட்சியில் மீண்டும் அமரவிடமாட்டேன். அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்வேன் என்று எங்கள் கேப்டனே சொன்னாரே, அப்படியென்றால் அவரையும் தி.மு.க.தான் இயக்கியதா? தி.மு.க.வோடு கூட்டணி பேச, முக்கியமானவர்களை கேப்டன், விருப்பமில்லாமலா போய் சந்தித்தார்? எங்களை இயக்குவது தி.மு.க. அல்ல;  ஜெயலலிதா ஆட்சியை அகற்ற நினைக்கும் 95 சத தே.மு.தி.க.வினர்தான்.

நக்கீரன் : தொண்டர் களின் விருப்பத்திற்கு மாறான முடிவை விஜயகாந்த் ஏன் எடுக்கவேண்டும்?
சந்திரகுமார் : இப்படி யொரு கூட்டணி முடிவை எடுத்தவர் அண்ணி பிரேமலதா தான். இதன் பின்னணியில் இருந்தவர் வைகோ. அந்த வைகோ பின்னிய சதிவலையில், கேப்டன் சிக்கவைக்கப்பட்டி ருக்கிறார். அவருக்கு இந்தக் கூட்டணியில் விருப்பமே இல்லை. மாற்று அணி என்ற முயற்சி கடந்த எம்.பி. தேர்தலில் அமைக்கப்பட்டு, அதனால் பெரும் இழப்பை சந்தித்தது தே.மு.தி.கதான். இது எங்க ளுக்கும் தெரியும். கேப்டனுக்கும் தெரியும்.

நக்கீரன் : வைகோ சொல் வதை பிரேமலதா ஏற்றாக வேண்டிய அவசியமென்ன?
சந்திரகுமார் : அங் கேதான் ஆதாய பலன் இருக் கிறது. அண்ணி பிரேமலதா பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவே விரும்பினார். ஆனால் அவரது டிமாண்டுக்கு பா.ஜ.க. உடன்படவில்லை. இதை அறிந்த தும், அ.தி.மு.க.வின் ’பி’ டீமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் வைகோ, உங்கள் விருப்பம் இங்கே நிறைவேற்றப்படும் என்று திரைமறைவாய், பிரேமலதாவை சிலரோடு பேசவைத்தார்.
இவையெல்லாம் அண்ணன் திருமா போன்ற கூட்டணித் தலைவர்களுக்குக் கூடத் தெரியா தது பரிதாபத்திற்குரியது.  அண்ணி பிரேமலதாவின் எதிர் பார்ப்பு நிறைவேறியதால், அ.தி.மு.க. வெற்றிக்கு அனு சரணையாக கூட்டணி அமைந் தது. 10 ஆண்டுகளாக வைகோ எங்கள் கட்சியை அழிக்கத் திட்டமிட்டு சதி செய்து செயல் படுத்தியிருக் கிறார்.

நக்கீரன் : எந்த அடிப் படையில் இதைச் சொல்கிறீர்கள்?
சந்திரகுமார் :தி.மு.க., அ.தி.மு.க.விற்குப் பிறகு ம.தி.மு.க. பெரிய கட்சியாக பார்க்கப்பட்ட நிலையில்,  தே.மு.தி.க. உருவான பிறகு ம.தி.மு.க. தலைகுப்புறக் கவிழ்ந்தது. மூன்றாவது பெரிய கட்சி என்ற அளவிற்கு தே.மு. தி.க. வளர்ந்து நிற்கிறது.  அதை வைகோவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. தே.மு.தி.கவையும் விஜயகாந்த்தையும் அவர் விமர்சித்துப் பார்த்தார். நேரடியாக மோதி விஜயகாந்த் தை வீழ்த்தமுடியாது என்பதைப் புரிந்துகொண்ட வைகோ,  இப்படி ஒரு கூட்டணியை உருவாக்கி, கட்சிக்குள் குழப்பம் உண்டாக்கி, தே.மு.தி.கவின் எதிர்காலத்தைக் கேள்விக்குறி ஆக்கிவிட்டார்.

நக்கீரன் : பல குற்றச் சாட்டுகளை சுமத்தி வெளியேறி யிருக்கும்  நீங்கள் தனி அணி யாக நிற்கப்போகிறீர்களா? தி.மு.க.வில் சேரப்போகிறீர் களா?

சந்திரகுமார் : தமிழகம் முழுதும் இருக்கும் தே.மு.தி.க நிர்வாகிகளிடமும் தொண்டர் களிடமும் பேசிக்கொண்டிருக் கிறோம். அதே சமயம் கேப்ட னின் தே.மு.தி.க.விற்கோ அவரது முரசு சின்னத்திற்கோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தமாட் டோம். தனி அணியாக நின்று தி.மு.க.வை ஆதரிப்பதா? அல்லது தி.மு.க.வில் இணைவதா? என்று தொண்டர்களின் கருத்தறிந்து முடிவுசெய்           வோம்.
கேப்டன் செயற் குழுவைக் கூட்டி, சட்டரீதியாக எங்களை நீக்குவதாக அறி விக்கலாம். அதற்கெல்லாம் கவலைப்படவில்லை.

இப்போதைக்கு எங்கள் ஒரே இலக்கு, ஜெ.’வையும் வைகோ வையும் ஒருசேர வீழ்த்து வதுதான். "
;ஜீவா தங்கவேல்<>படம் : அசோக்  nakkheeran.in

கருத்துகள் இல்லை: