வியாழன், 14 ஏப்ரல், 2016

அம்பேத்கர் கொள்கையைப் பரப்புவதைவிட பாதுகாப்பதே மிகவும் அவசியம்: கி.வீரமணி

பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று, அவர்கள் போற்றிய ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு சனாதன எதிர்ப்புக் கொள்கைகளை முன்னெடுக்க உறுதி கொள்வோம் - ஆர்.எஸ்.எஸ். கூட்டம் அம்பேத்கரை அரவணைத்து அழிக்க நினைக்கும் வஞ்சகத்தை முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா இன்று!டாக்டர் அம்பேத்கரின் கருத்துக்களும், கொள்கைகளும் புகழும் இன்று உலகளாவிய நிலைக்கு உயர்ந்து பரவி, விரவி விட்டன!

அய்.நா. மாமன்றத்தில் அவரைப்பற்றி இவ்வாண்டு புகழுரை நிகழ்வு நடைபெறுகிறது என்பது நம்மைப் போன்ற உண்மையான பெரியார் - அம்பேத்கர் தொண்டர்களை தோழர்களை மாணவர்களை மிக்க பெருமைப்பட வைக்கும் தித்திக்கும் இனிப்புச் செய்தியாகும்!
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும்தான் அம்பேத்கர் தலைவரா?இதற்குப் பிறகாவது, இங்குள்ள பல “தேசியத் தலைவர்கள்” என்போரும், ஊடகங்களும் - குறிப்பாக பார்ப்பன ஆங்கில ஊடகங்களும் அவரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர்   (‘ஞிணீறீவீt மிநீஷீஸீ லிமீணீபீமீக்ஷீ’) என்று ஒரு குறுகிய ஜாதி சிமிழுக்குள் அடைத்து வைக்கக் கூடாது.

தந்தை பெரியார் அவர்களைப் போலவே, புரட்சியாளர் அம்பேத்கர் ஒரு உலகத் தலைவர்! மாமனிதர்.>தந்தை பெரியாரின் “மண்டைச் சுரப்பை” சிந்தனைகளை உலகம் ஏற்கும் நிலைபோலவே, அண்ணல் அம்பேத்கரின் அரிய சிந்தனைகளும், சிறந்த புரட்சி மொழிகளும், வழிகளும் உலகத்தில் எங்கெல்லாம், சுதந்திரமின்மை, சமத்துவமின்மை, சகோதரத்துவமின்மை, சமூக அநீதி உள்ளனவோ அங்கெல்லாம் இந்த இரு பெரும் சிந்தனையாளர்களின் சிந்தனைகள் அவர்கள் விடுதலைக்கு வெளிச்சம் காட்டக் கூடியவை ஆகும்!
பெரியாருக்கு அளிக்கப்பட்ட யுனெஸ்கோ விருது<1970 span="">

ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்

ஒரே நாணயத்தின் இரு பக்கங்களான புரட்சியாளர்களுக்கு இந்தச் சிறப்புகள் காலந் தாழ்ந்தேனும் வரத் துவங்கியுள்ளன!

இந்திய நாடாளுமன்றத்தில்கூட அம்பேத்கரின் படம் (பிரதமர் வி.பி. சிங் ஆட்சியில் காலந் தாழ்ந்த நிலையில்தான்) -42 ஆண்டுகளுக்குப் பிறகுதான் திறக்கப்பட்டது.

பிரதமரும் சமூகநீதிக் காவலருமான வி.பி.சிங் நாடாளுமன்றத்தில் கூறும்போது -

“தந்தை பெரியார், ராம் மனோகர் லோகியா முதலிய தலைவர்களின் சேவைபற்றிக் குறிப்பிட்டு விட்டு, கோயில் சிலை வடித்தவன் எப்படி கர்ப்பகிரகத்திற்குள் நுழைய உரிமையற்று நிற்பது போன்றே, அரசமைப்புச் சட்டம் செய்த அம்பேத்கரால் இதுவரை நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடியவில்லை” என்று, மிக பொருத்தமான வர்ணணையோடு நாடாளுமன்றத்தில் பேசினார்!

பிரதமர் வி.பி.சிங், அம்பேத்கருக்கு அளித்த பெருமை - முக்கியத்துவம்

அம்பேத்கர் நூற்றாண்டு விழாக் குழு பிரதமர் வி.பி. சிங் தலைமையில், ராம்விலாஸ் பஸ்வான் செயலாளர், இந்தியாவின் முக்கிய மாநிலங்களிலிருந்து சுமார் 100 பேர்களுக்குமேல் உறுப்பினர் (அதில் நானும் இடம் பெற்றிருந்தேன்) இடம் பெற்று சிறப்பாக ஏற்பாடுகள் நடைபெற்றன.

அம்பேத்கர்மீது பிஜேபி - 
ஆர்.எஸ்.எசுக்குத் திடீர் ‘காதல்’

இன்று பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு டாக்டர் அம்பேத்கர்மீது ‘திடீர்க் காதல், அதி தீவிரப் பாசம்’ பொங்கி வழிகிறது!

எப்படியாவது தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை, தம் வயப்படுத்த கையில் தூண்டில்  முள்ளை தூக்கி நிற்கின்றனர். டாக்டர் அம்பேத்கரைப் பயன்படுத்தி  - அவரை தங்களது ஹிந்துத்துவா முகத்தை மறைக்கும் முகமூடியாக்கிடும்  மோசடிகள் அரங்கேற்றப்படவிருக்கும் நிலையில், உண்மையான அம்பேத்கரின் கொள்கை வழித் தோழர்கள், அவரைப் பரப்புவதைவிட, பாதுகாப்பதே மிகவும்  முக்கியம் என்பதை உணர்ந்து, உண்மைக்கும், ஒப்பனைக்கும் உள்ள வேறுபாட்டைத் தோலுரித்துக் காட்ட வேண்டிய கடமையைச் செய்ய வேண்டும்!

எதிர்த்து அழிக்க முடியாதவர்களை, அணைத்து அழிப்பதே ஆரியத்தின் கைதேர்ந்த உத்தி என்பதை நாம் மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

நாம் காட்டும் உண்மையான மரியாதை எது?

புத்த மார்க்கத்தை இந்தியாவிலிருந்து - அது பிறந்த மண்ணிலிருந்து - விரட்டியதும்  இதே முறையான ‘அணைத்து ஊடுருவி  உள்ளே புகுந்துதான்’ தங்கள் வேலைகளைக் காட்டினர்  என்பதை மறவாமல் நினைத்து, அம்பேத்கரின் ஜாதி தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை, ஹிந்து பார்ப்பன மத சனாத ஒழிப்புக்குப் பாடுபடுவதே அவரது பிறந்த நாளில், அவருக்கு நாம் செய்யும் உண்மை மரியாதையாகும்.  nakkheeran.in

கருத்துகள் இல்லை: