ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

பங்களாதேஷ் எழுத்தாளர் கொலை! மற்றுமொரு சுதந்திர நடுநிலையாளர் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் .....


வங்கதேசத்தில் மதச்சார்பற்ற வலைதளக் கட்டுரையாளர் நிலோய் நீல் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பாக 4 பேர் மீது அந்த நாட்டுப் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதையடுத்து, அந்த நான்கு பேரையும் பிடிப்பதற்காக போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். வீடு வாடகைக்குக் கேட்பது போல் நடித்து, அந்த நால்வரும் நிலோய் நீல் அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் நுழைந்து, அவரை வெட்டிக் கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்தியத் துணைக் கண்டத்துக்கான அல்-காய்தா பிரிவின் வங்கதேச அங்கமான அன்ஸார்-அல்-இஸ்லாம் இந்தப் படுகொலைக்குப் பொறுப்பேற்றுள்ளது. கடந்த 1971-ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின்போது, பாகிஸ்தானுடன் இணைந்து போர்க் குற்றங்களில் ஈடுபட்டோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் "கணஜாகரண் மன்ச்சா' என்ற அமைப்பின் உறுப்பினராக நிலாய் நீல் இருந்து வந்தார். மேலும்,
வலைதளங்களில் மதச்சார்பற்றக் கருத்துகளையும் அவர் பதிவு செய்து வந்தார். அண்மைக் காலமாக அவருக்கு அதிக அளவில் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் நிலோய் நீல் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது திட்டமிடப்பட்ட சதி வேலை என போலீஸார் கூறினர். ஏற்கெனவே வங்கதேசத்தில் அனந்த பிஜோய் தாஸ் (33), அவிஜித் ராய் (45), வாசிக்கர் ரஹ்மான் ஆகிய மதச்சார்பற்ற வலைதளக் கட்டுரையாளர் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், தற்போது நான்காவதாக நிலாய் நீல் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது dinamani.com

கருத்துகள் இல்லை: