திங்கள், 10 ஆகஸ்ட், 2015

தயாநிதி மாறனின் முன் ஜாமீன் ரத்து ! விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லையாம்!

விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்தால் தயாநிதி மாறனுக்கு அளிக்கப்பட்டிருந்த முன் ஜாமீனை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். மாறன் சகோதரர்கள். சகோதரருக்கு உதவினார் என தயாநிதி(இடது) மீது குற்றச்சாட்டு அவர் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது சட்டத்துக்கு விரோதமாக தனது இல்லத்தில் தொலைபேசி இணைப்பகத்தை வைத்திருந்தார் என அவர் மீது மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ குற்றஞ்சாட்டியது. அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் இணைப்புகளை அவர் முறைகேடாகப் பயன்படுத்தி அவரது சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும் சன் குழுமத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு உதவினார் என்று அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து நடைபெற்றுவரும் விசாரணைகளுக்கு அவர் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்று, சிபிஐ சென்னை உயர்நீதிமன்றத்தில் வைத்த வாதத்தை ஏற்று அவருக்கு வழங்கியிருந்த முன் ஜாமீனை ரத்து செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
அடுத்த மூன்று நாட்களுக்குள் தயாநிதி மாறன் மத்திய புலனாய்வு அமைப்பினரிடம் சரணடைய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவை என்றும் கூறி, அவர் முன்னதாக நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றிருந்தார். bbc.com/tamil

கருத்துகள் இல்லை: