வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

ஜெயலலிதா வழக்கில் தி.மு.க.வின் அன்பழகனுக்கு எப்படி நம்மீது சந்தேகம் வரலாம்?


வெள்ளிப் பொருட்கள் எப்போது வந்து சேரும்?
வெள்ளிப் பொருட்கள் எப்போது வந்து சேரும்?
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர் பவானி சிங், தாம் ஜெயலலிதா தரப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக வெளியே கூறப்படுவதை மறுத்திருக்கிறார்.
“ஆனால், தி.மு.க. பொது செயலர் அன்பழகன் மற்றும் அக்கட்சியினர், ஆரம்பத்தில் இருந்தே என்னை சந்தேகக் கண்ணுடன் நோக்குகின்றனர்” என்றும் கூறியுள்ளார் அவர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோதே, அவ்வாறு தன்னிலை விளக்கம் கொடுத்தார், அரசு வழக்கறிஞர் பவானி சிங்.

நேற்று நடந்த விசாரணையில், கோர்ட் கைப்பற்றி வைத்திருந்த ஜெயலலிதாவின் வெள்ளிப் பொருட்களை, பாஸ்கரன் என்ற அவரின் உதவியாளர் பெற்றுச் சென்றது குறித்த விவாதம் நடந்தது.
ஜெயலலிதாவின் உதவியாளர் பாஸ்கரன் 1996-ல் சென்னை நீதிமன்ற அனுமதியுடன் பெற்று சென்ற வெள்ளிப் பொருட்கள் அவை. இரு தினங்களுக்கு முன்புதான், அந்த வெள்ளிப் பொருட்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க கோரி அரசு வழக்கறிஞர் பவானி சிங் திடீரென மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பான விவாதம் நேற்று நடந்தபோது, தி.மு.க. பொதுச் செயலர் அன்பழகன் சார்பில், “அரசு வழக்கறிஞர் பவானி சிங் வழக்கு விசாரணையை தாமதப்படுத்த முயற்சிக்கிறார்” என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பவானி சிங் தாக்கல் செய்த மனுவில், “ஆரம்பத்திலிருந்தே என் நேர்மையை அன்பழகன் தரப்பினர் சந்தேகித்து வந்துள்ளனர். என் கடமையை நான் சரியாக செய்கிறேன்” என, குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, பாஸ்கரன் 1996-ல் பெற்று சென்ற ஜெயலலிதாவின் வெள்ளிப் பொருட்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி, சென்னை ஊழல் ஒழிப்பு துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார், நீதிபதி குன்ஹா. விசாரணை, 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சரி.. சென்னை ஊழல் ஒழிப்பு துறை இயக்குனர், முதல்வர் ஜெயலலிதாவின் வெள்ளிப் பொருட்களை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க எவ்வளவு காலம் அவகாசம் எடுப்பார்? அதற்கு பெங்களூருவில் இருந்து எத்தனை ரிமைன்டர்கள் வந்து சேர வேண்டும்?
இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிந்துதானே, அவற்றை ஒப்படைக்க வேண்டும் என பவானி சிங் மனு தாக்கல் செய்திருப்பார்?

viruvirupu.com

கருத்துகள் இல்லை: