செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

2 G ஸ்பெக்ட்ரம் முழுக்க முழுக்க வெறும் கற்பனை குற்றச்சாட்டு !

2G ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத்தில் ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டை பொய் என்று திமுக தலைவர் கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை: >திமுக தலைவர் கருணாநிதி: உங்களுக்கு என்ன வேண்டும்? செய்தியாளர்: இன்று ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், பிரசாந்த் பூஷன் அளித்த பேட்டியில், காவல்துறை அதிகாரி ஜாபர் சேட் பேசிய டேப்பை வெளியிட்டிருக்கிறார். கலைஞர் தொலைக்காட்சியின் எம்.டி. சரத்குமார் ரெட்டி, ஆவணங்களையெல்லாம் திருத்தியிருக்கிறார் என்றெல்லாம் சொல்லியிருக்கிறாரே? எல்லாம் பொய். >செய்தியாளர்:>உங்கள் மீது குற்றச்சாட்டு சொல்லியிருக்கிறாரே? நீங்கள் எல்லாம் செய்தியாளர்கள் தானே? சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்று நடைபெறுகிறதே! அதிலே சம்பந்தப்பட்டவர்களிடம் சென்று நீங்கள் இவ்வாறு கேள்வி கேட்க முடியுமா? முதல் அமைச்சரைச் சென்று இதைப் போல நீங்கள் காண முடியுமா? பவானிசிங் என்ற வழக்கறிஞரே தொடர வேண்டுமென்று கேட்பது முறையா என்று யாராவது கேட்டீர்களா? அவர் குற்றவாளிக்கு எதிராக வாதாட வேண்டியவர், ஆதரவாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே, அதைப் பற்றி யெல்லாம் யாராவது கேட்டீர்களா?

ஜெயா தொலைக்காட்சி செய்தியாளர்: உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு கூறும்போது, மற்றவர்கள் மீது குற்றஞ்சாட்டுவது சரியா?
தமிழ்நாட்டில் ஒரு சில செய்தியாளர்கள் இப்படி நடந்து கொள்கின்ற காரணத்தினால், அவர்களின் கலாச்சாரம் இந்த அளவிற்கு ஆகி விட்டதால் நான் இதைக் கேட்க நேர்ந்தது.
ஜெயா தொலைக்காட்சி செய்தியாளர்: நீங்களும் ஒரு நிருபராக இருந்தவர் ஆயிற்றே, இப்படி சொல்லலாமா?
அதனால் தான் இதுவரை உங்களை மதித்து நடந்து கொண்டு வருகிறேன். இப்போது மதிக்கிறேன். அதனால் தான் அங்கே நின்று கொண்டிருந்த உங்களையெல்லாம் அருகே அழைத்துப் பேசுகிறேன்.
செய்தியாளர்: தமிழக டி.ஜி.பி. ராமானுஜம் அவர்களின் பதவிக் காலத்தை நீடித்திருக்கிறார்களே, என்ன காரணம்?
அது பற்றி எனக்குத் தெரியாது.
செய்தியாளர்: மூன்றாவது அணியின் சார்பில் ஜெயலலிதா, இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அவர் வெற்றி பெற்றால் பிரதமர் ஆவார் என்றும் சொல்லப்படுகிறதே?
ஆனால் சந்தோஷம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்ப   முழுக்க முழுக்க வெறும் 

கருத்துகள் இல்லை: