ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

ஆம் ஆத்மி கட்சியில் எழுந்தது அதிருப்தி அலை ! அதுக்குள்ளே அலம்பலை ஆரம்பிச்சுட்டாங்களா?'

புதுடில்லி : ஆம் ஆத்மி கட்சி, டில்லியில் ஆட்சியில் அமர்ந்து, ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் செய்யும், அலம்பல்கள் தாங்க முடியவில்லை என்றும், அவர்களை தொடர்பு கொள்ளவே முடியவில்லை என்றும், கட்சியின், இரண்டாம் கட்ட தலைவர்கள், அதிருப்தி குரல் எழுப்பியுள்ளனர்.< ந்தா பேர்வழிகளாக டில்லியில், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. 'ஆம் ஆத்மி' என்ற இந்தி வார்த்தைக்கு, தமிழில், 'சாமானிய மக்களின் கட்சி' என்று, அர்த்தம்.'அரசியல்வாதிகளின், வி.ஐ.பி., கலாசாரத்துக்கு முற்றுப் புள்ளி வைப்பதும், ஊழலை ஒழிப்பதுமே எங்கள் கட்சியின் நோக்கம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சாதாரண மக்கள், தங்களின் பிரச்னைகளுக்காக, எங்களை எப்போதுமே தொடர்பு கொள்ளலாம்' என, இவர்கள் வாக்குறுதி அளித்திருந்தனர். இந்நிலையில், ஆட்சியில் அமர்ந்த, ஒரு மாதத்துக்குள்ளேயே, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர், பந்தா பேர்வழிகளாக மாறி விட்டதாகவும், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அந்த கட்சியின், இரண்டாம் கட்ட நிர்வாகிகளே, புகார் தெரிவித்துள்ளனர்.  தர்ணா என்கிற டிராமா தான் ஜாம் ஆத்மிக்கு ஒத்து வரும்.....அரசாங்க நிர்வாகங்கள் எல்லாம் ஒத்து வராது....


சமீபத்தில், டில்லியில், அந்த கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, பல நிர்வாகிகள், இந்த பிரச்னையை எழுப்பினர். இதுகுறித்து, அந்த கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:மணீஷ் சிசோடியா, யோகேந்திர யாதவ், சஞ்சய் சிங் போன்ற தலைவர்களை, இதற்கு முன், எப்போது வேண்டுமானாலும், தொடர்பு கொள்ள முடியும். ஆனால், கட்சி, ஆட்சிக்கு வந்தவுடன், அவர்களின் நடவடிக்கைகள் மாறி விட்டன.


பதில் வருவது இல்லை:



எவ்வளவு முக்கியமான பிரச்னையாக இருந்தாலும், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. எப்போது அழைத்தாலும், 'நீங்கள் அழைத்த நபர், பிசியாக இருக்கிறார். சிறிது நேரத்துக்கு பின், மீண்டும் தொடர்பு கொள்ளவும்' என்ற, குரல் தான், கீறல் விழுந்த ரிக்கார்டு போல், திரும்ப திரும்ப வருகிறது.எஸ்.எம்.எஸ்., அனுப்பினாலும், அவர்களிடமிருந்து, பதில் வருவது இல்லை. கட்சியின் நிர்வாகிகளான, எங்களுக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்கள், அவர்களை எப்படி தொடர்பு கொள்ள முடியும்?ஒரு மாதத்துக்குள், பதவி சுகத்துக்கு, அடிமையாகி விட்டனரா? இப்படி இருந்தால், சாதாரண மக்களிடமிருந்து, நம் கட்சி, ரொம்ப தூரம், விலகிச் சென்று விடும். இந்த பிரச்னைக்கு, இப்போதே, கடிவாளம் போட வேண்டும் என, பல நிர்வாகிகள், இந்த கூட்டத்தில், வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர்.இதை பொறுமையாக கேட்ட, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என, கூறினார்.இவ்வாறு, அந்த நிர்வாகி கூறினார்

கருத்துகள் இல்லை: