சனி, 8 பிப்ரவரி, 2014

கேப்டனின் அல்லது தினமலரின் கனவு கூட்டணி கணக்கு

'பிரதமர் கனவில் உள்ள ஜெயலலிதாவை, வீழ்த்தும் வகையில், தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., இடையே கூட்டணி அமைய வேண்டும்' என, விஜயகாந்த் விரும்புகிறார். இதுதொடர்பாக, சில யோசனைகளையும், அந்தக் கட்சிகளின் தலைமைக்கு தெரிவித்து உள்ளார் என, தகவல்கள் வெளியாகி உள்ளன. லோக்சபா தேர்தலுக்கு, விஜயகாந்தின் தே.மு.தி.க., உடன் கூட்டணி அமைக்க, பா.ஜ.,வும், தி.மு.க.,வும் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனாலும், கூட்டணி தொடர்பாக, உறுதியான முடிவு எதையும் அறிவிக்காமல், இரு கட்சிகளுக்கும், போக்கு காட்டி வருகிறார் விஜயகாந்த்.காரணம் என்ன?அதேநேரத்தில், லோக்சபா தேர்தலில், ஜெயலலிதாவை வீழ்த்தி விட வேண்டும் என்பதில் குறியாக உள்ள விஜயகாந்த், தேர்தல் கூட்டணி தொடர்பாக, புதுகணக்கு ஒன்றை போட்டு வருகிறார். அதுவே, அவரின் கூட்டணி அறிவிப்பு வெளியாக, தாமதமாவதற்கு காரணம் என, அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


இதுதொடர்பாக, தே.மு.தி.க., வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றாலும், அந்தக் கூட்டணி உடைந்த பின், அனுபவித்த கஷ்டங்கள் மற்றும் சந்தித்து வரும் அவதூறு வழக்குகளுக்கு, தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என, விஜயகாந்த் விரும்புகிறார்.அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளையும் பிடித்து விட வேண்டும் என, கனவு காணும், ஜெயலலிதாவை வீழ்த்த, பலமான கூட்டணி அவசியம் என, விஜயகாந்த் நினைக்கிறார்.


தயார் தான்:



அப்படி ஒரு பலமான கூட்டணி என்றால், அது, தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., சேர்ந்து அமைக்கும் கூட்டணியாகவே இருக்கும். தற்போதுள்ள சூழ்நிலையில், பா.ஜ., - தே.மு.தி.க., உடன் கூட்டணி அமைக்க, தி.மு.க., தரப்பில் தயார்தான்.ஆனால், பா.ஜ.,வினர் தான், தி.மு.க., மீது, குறிப்பாக, ஸ்பெக்ட்ரம் ஊழல் புகழ், முன்னாள் அமைச்சர், ராஜா மீது, ஊழல் குற்றச்சாட்டு இருப்பதை காரணம் காட்டி, கூட்டணிக்கு தயக்கம் காட்டுகின்றனர்.அவர்களின் தயக்கத்தைப் போக்கவும், இந்த மூன்று கட்சிகள் இடையே கூட்டணி அமையவும், விஜயகாந்த் புது யோசனை தெரிவித்து உள்ளார்.அந்த யோசனை யாதெனில், ஊழல் புகாரில் சிக்கியுள்ள, முன்னாள் அமைச்சர், ராஜாவுக்கு, வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட, தி.மு.க., 'சீட்' தரக்கூடாது. அதற்கு பதிலாக, அவருக்கு பின்னாளில், ராஜ்யசபாஎம்.பி., பதவி தரலாம். அப்படி செய்தால், தி.மு.க., உடன் கூட்டணி அமைக்க, பா.ஜ.,விற்கு தயக்கம் இருக்காது. அப்போது, விஜயகாந்த் எதிர்பார்க்கும் மூன்று கட்சிகளின் கூட்டணி அமைந்து, லோக்சபா தேர்தலில், பெரு வெற்றி விடும்.மாநிலத்தில், தற்போது ஆட்சியில் இல்லாத, தி.மு.க., மத்தியில், மீண்டும் செல்வாக்கு பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதை, ராஜாவிடம், அவரிடம் கட்சித் தலைமை எடுத்துக் கூறினால், அவரும் கட்சி நலனுக்காக, தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வார்.


வெளியேறலாம்:



அத்துடன், எதிர்காலத்தில், ஊழல் வழக்கு விவகாரத்தில், அவருக்கு பா.ஜ., தரப்பில் இருந்து தொந்தரவும் இருக்காது. இந்த கூட்டணியால், தி.மு.க., கூட்டணியில், தற்போதுள்ள சில கட்சிகள் வெளியேற முற்படலாம். ஆனாலும், அவர்களில் சிலரை, கருணாநிதி சமாளித்து விடுவார். மற்றவர்களால் பெரிய அளவில், கூட்டணிக்கு பாதிப்பு இருக்காது.எனவே, தன் யோசனை பற்றி, பரிசீலிக்க வேண்டும் என, தி.மு.க., - பா.ஜ., தரப்பில், கூட்டணி தூது வருபவர்களிடம், விஜய காந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, அக்கட்சி தலைமைகளிடம் இருந்து என்ன பதில் கிடைக்கும் என்பது, தெரியவில்லை.இருந்தாலும், விஜயகாந்தின் யோசனை யை, அவர்கள் பரிசீலித்து வருவதாக தெரிகிறது. இதுவே, விஜயகாந்த் கூட்டணி அறிவிப்பை வெளியிட, தாமதம் காட்டுவதற்கு காரணம்.இவ்வாறு, தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவித்த
தினமலர்.com 

கருத்துகள் இல்லை: