வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

மோடி கூட்டத்தை வைகோ புறக்கணிக்க முடிவு ! தொகுதி பங்கீடு கடும் பிரச்னை ?

10 கேட்டா 5 தான்னு பதில் வருது! வண்டலூர் மோடி கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என வைகோ முடிவு? வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் மதிமுக கூட்டணி வைப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் ஜனவரி 1ஆம் தேதி செய்தியாளர்களை அழைத்து தெரிவித்தார்.  இதைத்தொடர்ந்து பாஜக மூத்த தலைவர்கள் முரளிதர ராஜ், ராஜ்நாத் சிங், பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோரை வைகோ சந்தித்தார். இரு தலைர்களும் இரு கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
சனிக்கிழமை சென்னை வண்டலூரில் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில், தானும், மதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் பங்கேற்போம் என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி அலை வீசுகிறது. இதில் மதிமுக 10 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று வைகோ பேட்டி அளித்தும், மேடைகளில் பேசியும் வந்தார்.
இந்தநிலையில் மோடியின் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று வைகோ
முடிவெடுத்துள்ளதாக மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக கூட்டணியில் மதிமுகவுக்கான இடங்கள் உறுதியாகாமல் இருப்பதால் வைகோ இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரிலான பாஜக மேடையில் தற்போது ஏற வேண்டாமென்றும், அப்படி மேடை ஏறினால் அவர்கள் கொடுக்கும் இடங்களைத்தான் பெற்றுக்கொள்ள நேரிடும் என்றும் அவர் கருதுவாக கூறப்படுகிறது.
மதிமுகவுடன் கூட்டணி முடிவாகி உள்ளது. மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. மோடி கூட்டத்திற்கு வரவேண்டும் என்று வைகோவுக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தோம். அவரும் வருவதாக உறுதி அளித்திருந்தார். தற்போது வரப்போவதில்லை என்பது பற்றி எங்களிடம் எந்த தகவலும் சொல்லவில்லை என்று தமிழக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
10 தொகுதிகளை கேட்டு அத்தொகுதிக்கான பட்டியலையும் மதிமுக, பாஜகவிடம் கொடுத்துள்ளதாம். தற்போது பாமக, தேமுதிக ஆகியவை கூடுதல் இடங்கள் கேட்பதால், மதிமுகவுக்கு கொடுக்க வேண்டிய இடங்களை குறைப்பதால்தான் வைகோ டென்ஷனாக காரணமாம்.    
nakkheeran.i

கருத்துகள் இல்லை: