வியாழன், 24 ஜனவரி, 2013

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை பரிந்துரை

புதுடில்லி :" பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு, அரசின் செயலின்மையே காரணம். இந்த விஷயத்தில், அரசு, போலீஸ் துறை, பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புமே, செயல் இழந்து, உணர்ச்சியற்று இருப்பது, கவலை அளிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சட்டம் தேவை' என, வர்மா கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
AnandaRajan - Singapore,சிங்கப்பூர்

AnandaRajan அவ்வோலோதான். ஏதோ சுட்டுருவங்க, கொன்னுருவங்கன்னு நினைச்சோம் இனிமே ஒருத்தரும் இது பத்தி பேச மட்டங்க. கற்பளிச்சவங்களும், ஒரு நாலஞ்சு மாசம் கழிச்சு வெளிய வருவாங்க. மறுபடியும் கற்பளிப்பங்க. நம்மாள்களும் மறுபடியும் இது மாதிரி கத்துவாங்க நீதியே செத்து போச்சு இந்தியாவுல. பெண்கள் மட்டுமல்ல இனி யாராலும் இந்தியாவுல நிம்மதியா வாழ முடியாது. இப்படியே கமிஷன் போடுவாங்க, அவங்களும் அரசுக்கு சாதகமா ஒரு அறிக்கை குடுப்பனக பேசாம வெல்லைகாரன்கிட்டயெ இந்த நாடு இருந்திருக்கலாம், அவன் கிட்ட இருந்து காப்பாத்தி இந்த குண்டங்க கிட்ட குடுதுட்டங்க போங்கடா நீங்களும் உங்க நீதியும்.

டில்லியில், ஓடும் பஸ்சில், மருத்துவ கல்லூரி மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். நாட்டையே, உலுக்கிய இந்த அதிர்ச்சி சம்பவத்துக்கு, நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.வர்மா தலைமையில், இமாச்சல் பிரதேச ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, லீலா சேத், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல், கோபால் சுப்ரமணியம் ஆகிய, மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், பாலியல் வன்முறையை தடுக்க தேவையான சட்டங்கள், பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, இந்த குழு, ஆய்வு செய்து, 200 பக்கங்களை உடைய அறிக்கையை, உள்துறை அமைச்சகத்திடம், பரிந்துரையாக நேற்று, அளித்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த குழுவின் அறிக்கை குறித்து, நீதிபதி வர்மா கூறியதாவது: டில்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை எதிர்த்து, இளைஞர்கள் நடத்திய போராட்டம், இந்த அறிக்கையை தயாரிப்பதற்கு, எங்களுக்கு உந்து சக்தியாக இருந்தது.இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும், இது தொடர்பாக, ஏராளமான ஆலோசனைகள், கருத்துக்கள், எங்களுக்கு வந்தன. ஒட்டு மொத்தமாக, 80 ஆயிரம் ஆலோசனைகள், எங்களுக்கு கிடைத்தன. இவை அனைத்தையும் ஆய்வு செய்து, இதற்கு ஒரு இறுதி வடிவம் கொடுத்துள்ளோம்.இவ்வாறு வர்மா கூறினார்.

வர்மா கமிட்டி பரிந்துரை:பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு, அரசு நிர்வாகத்தின் செயல்பாடின்மை தான் முக்கிய காரணம். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு, அரசுக்கும், போலீஸ் துறைக்கும் உள்ளது. ஆனால், இந்த விஷயத்தில், அரசும், போலீஸ் துறையும், ஏன் பொதுமக்களும் கூட, செயலற்ற நிலையில் உள்ளனர்.பாலியல் கொடுமைகளை தடுப்பதற்கு, தற்போதுள்ள சட்டங்களை கடுமையாக்கினாலே போதும். ஆனால், ஒட்டு மொத்தமாக, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சட்டம் தேவை.சிறார் சட்ட வயது வரம்பை, குறைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும், கற்பழிப்பு போன்ற, மிக கொடிய குற்றங்களில் ஈடுபடுவோர், சட்டப்படி சிறுவராக இருந்தால், அவர்களின் சட்ட வயது வரம்பை குறைக்கலாம்.கற்பழிப்பு போன்ற பாலியல் பாலியல் பலாத்கார அபாயங்களில் இருந்து, தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக, சம்பந்தபட்ட குற்றவாளிகளை பெண்கள் கொலை செய்ய நேர்ந்தால், அதை, தற்காப்புக்காக செய்ததாக கருதலாம்.

கொடிய பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, அதிகபட்சமாக, ஆயுள் தண்டனை வழங்கலாம். பாலியல் குற்றங்களை கையாளுவதில், போலீஸ் துறை, போதிய ஆர்வம் காட்டுவது இல்லை. எனவே, டி.ஜி.பி., போன்ற, உயர் அதிகாரிகள் நியமிக்கும் நடவடிக்கைகளில் சீர்திருத்தம் தேவை.பாலியல் பலாத்காரம் தொடர்பான, ஒவ்வொரு புகாரையும், போலீசார் முறையாக பதிவு செய்து, உடனுக்குடன் நடவடிக் கை எடுக்க வேண்டும். சிறிய குற்றம், பெரிய குற்றம் என்ற வேறுபாடு பார்க்க கூடாது.சிறப்பு போலீஸ் படை போன்ற, படைப் பிரிவுகளில் உள்ளவர்களால், பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்தால், அந்த வழக்குகளை, பொதுவான சட்டத்தின் கீழ்தான், விசாரிக்க வேண்டும்.இளைஞர்கள், யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதை, பஞ்சாயத்து அமைப்புகள் முடிவு செய்யக் கூடாது. அவர்களுக்கு யார், அந்த அதிகாரத்தை கொடுத்தது.

குற்றவியல் சட்ட திருத்தத்தை, உடனடியாக அமல்படுத்த வேண்டும். பாலியல் பலாத்கார வழக்குகளில் தொடர்புடையவர்கள் குற்றவாளிகள் என, நிரூபிக்கப்பட்டால் தான், தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்ற, அவசியம் இல்லை.விசாரணை முடியும் வரை, அதற்காக காத்திருக்க வேண்டியது இல்லை. குற்றம் செய்திருப்பார் என கருதி, அது தொடர்பான ஆதாரங்கள் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டாலே, சம்பந்தபட்ட நபர், தேர்தலில் நிற்பதற்கு தடை விதிக்கலாம்.பாலியல் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும். குழந்தகளை பாலியல் வன்முறைக்கு பயன்படுத்துவோர், யாராக இருந்தாலும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.இவ்வாறு, அந்த பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளன.இதற்கிடையே, "வர்மா கமிட்டி அறிக்கையை அமல்படுத்த, முன்னுரிமை அளிக்கப்படும்' என, மத்திய சட்ட அமைச்சர், அஸ்வனி குமார் கூறியுள்ளார்.

டில்லி மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தில், கடமை தவறியதற்காக, போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார், மன்னிப்பு கேட்பார் என, எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அந்த நேரத்தில், கமிஷனர் நீரஜ் குமார் சிறப்பாக செயல்பட்டதாக, மத்திய உள்துறை செயலர், ஆர்.கே.சிங், பாராட்டு தெரிவித்திருந்தது, பெரும் அதிர்ச்சியை அளித்தது. உள்துறை செயலர் என்ற, மிக உயர்ந்த பொறுப்பில் இருப்பவரிடமிருந்து, இதுபோன்ற வார்த்தைகளை, நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
ஜே.எஸ்.வர்மா நீதிபதி  dinamalar.com

கருத்துகள் இல்லை: