செவ்வாய், 6 செப்டம்பர், 2011

அண்ணா ஹசாரேவை ‘என்கவுண்டர் ’ செய்த மங்காத்தா... தல


மங்காத்தாவிற்கும், அண்ணா ஹசாரேவிற்கும் என்ன தொடர்பு? மங்காத்தா எனும் மசாலாப்படம் இதுவரை அறியப்பட்ட தமிழ் சினிமா சென்டிமெண்டுகளை தூக்கி எறிந்ததற்க்கு என்ன காரணம்?
அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் மெழுகுவர்த்தி பிடித்த கையோடு அடுத்த நாள் மங்காத்தாவை முதல் காட்சிக்கு சென்று இரசிக்க முடியுமென்றால் இரண்டில் எது உண்மை? முன்னது ஒரு தர்ம சேவை வீக் எண்ட் என்றால் பின்னது பொழுது போக்கு வீக் எண்ட் என்றும் சொல்லாம். முன்னது அவர்களின் அரசியல் பார்வை என்றால் பின்னது அவர்களின் கலைப்பார்வை என்றும் சொல்லலாம். அதனால்தான் அண்ணா ஹசாரேவின் அரசியலுக்கு பொருத்தமான கலை உணர்ச்சி மங்காத்தாவில்தான் வெளிப்படுகிறது என்பதை நாம் உறுதியாகச் சொல்கிறோம். ஊழல் எதிர்ப்பும் ஒரு ஃபேஷன், பணம் சம்பாதிப்பதும் ஒரு பேஷன். முன்னது நாட்டுக்காக, பின்னது தனக்காக.
இதற்கு மேலும் புரியாதவர்களுக்குத்தான் இந்தத் தலைப்பு:
அண்ணா ஹசாரேவை என்கவுண்டர் செய்த ‘தல’ யின் மங்காத்தா!


கருத்துகள் இல்லை: