உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசாங்கத் தரப்புக்கு அதிக வாக்குகள் அளித்து வெற்றி பெறச்செய்த நெடுந்தீவு மக்களுக்கு சகல வசதிகளுடன் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி பணித்துள்ளார்.
இதனை நெடுந்தீவில் நேற்று நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்குமாகாணஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அமோக வெற்றியைப் பெற்றுக் கொடுத்தவர்கள் நெடுந்தீவு மக்கள்.
குறிப்பாக அம்பாந்தோட்டையிலும் பார்க்க அதிக விகிதா சாரத்தினால் ஆளும் கட்சி வெற்றி பெற்றது நெடுந்தீவு பிரதேச சபைத் தேர்தலிலேயே. எனவே நெடுந்தீவு மக்களுக்கு சகல வசதிகளுடன் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார் என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக