அரசாங்கத்திற்கு தமிழர்களின் காணிகளை அபகரித்துக் கொள்ளும் திட்டம் கிடையாது என மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். வன்னித் தமிழ் மக்களின் காணிகளை அரசாங்கம் கைப்பற்ற முயற்சிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு மற்றும் முருகண்டி பகுதியில் பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் அபகரித்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு அரசாங்க அதிபர் காரியாலயத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க அதிகாரிகள் தம்மை சொந்த இடங்களில் மீள் குடியேறுவதற்கு அனுமதிக்கவில்லை என முருகண்டி பிரதேச இடம்பெயர் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
காணிகளை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும் குறித்த காணிகளுக்கு பதிலாக வேறும் இடங்களில் காணிகள் வழங்கப்படும் எனவும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக