minnambalam.com : சன் டிவி குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரது சகோதரரும் மத்திய சென்னை தொகுதி திமுக எம்பியுமான தயாநிதி மாறன், வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். Sun TV: Kalanidhi Maran Receives Legal Notice from Dayanidhi Maran – Who Are the 8 People Named?
சன் டிவி விவகாரங்கள் தொடர்பான இந்த வழக்கறிஞர் நோட்டீஸில் மொத்தம் 8 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸில் இடம் பெற்றுள்ள 8 பேர் குறித்த விவரங்கள்:
கலாநிதி மாறன் – தயாநிதி மாறனின் சகோதரர்
கலாநிதி மாறன் மனைவி காவேரி
ரவி ராமமூர்த்தி
நடராஜன்
சிவசுப்பிரமணியன்
ஶ்ரீதர் சுவாமிநாதன்
சுவாமிநாதன்
ஷரத் குமார்
ரவி ராமமூர்த்தி
2001-ம் ஆண்டு முதல் சன் டிவி நெட் ஒர்க் லிமிடெட் நிறுவனத்தின் செயலாளர் ( முந்தைய பெயர்கள் சுமங்கலி பப்ளிகேஷன்ஸ்/ சன் டிவி லிமிடெட், சன் டிவி பிரைவேட் லிமிடெட்)
நடராஜன்
சன் டிவி நெட் ஒர்க் லிமிடெட் நிறுவனத்தின் நிதித்துறை தலைவர்
சிவசுப்பிரமணியன்
தயாநிதி மாறனின் தாயார் மல்லிகா மாறன் மற்றும் அவரது குடும்பத்தினர், முதல்வர் ஸ்டாலின் தயார் தயாளு அம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஆடிட்டராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிபவர்.
ஶ்ரீதர் சுவாமிநாதன்
2002-ம் ஆண்டு முதல் தற்போது வரை கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன் ஆகியோரது ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி ஆகியோருக்கு நிதி கட்டமைப்பு, முதலீட்டு முடிவுகள், ஆவணங்கள் தயாரிப்பு உள்ளிட்ட வர்த்தக ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் ஆலோசகர்.
சுவாமிநாதன்
நிதி, காப்பரேட் விவகாரங்களில் கலாநிதி மாறன் மற்றும் நடராஜனுடன் இணைந்து செயல்படுபவர்.
ஷரத் குமார்
சன் டிவி நெட் ஒர்க் குழுமத்துக்கு சொந்தமான உதயா டிவி, ஜெமினி டிவி ஆகியவற்றின் பங்குதாரராக இருந்தவர். கலாநிதி மாறனின் கல்லூரி காலங்களில் இருந்தே மிகவும் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர். கலாநிதி மாறனின் வணிக மேம்பாடு, நிதித் திட்டமிடல் உள்ளிட்டவைகளில் முக்கிய பங்கு வகித்தவர். கலாநிதி மாறனின் பணப் பரிமாற்றம், வர்த்தக விவகாரங்கள் குறித்து நன்கு தெரிந்தவர். இந்த ஷரத் குமார் தற்போது சன் டிவி குழுமத்தில் இல்லை. கலாநிதியுடன் முரண்பட்டு கலைஞர் தொலைக்காட்சி தொடங்கியதில் முக்கியப் பங்காற்றியவர்.
இந்த 8 பேரின் பெயர்கள், தயாநிதி மாறன் அனுப்பிய வழக்கறிஞர் நோட்டீஸில் இடம் பெற்றுள்ளன.
>minnambalam.com : கலாநிதி மாறன் மீது குற்றச்சாட்டு... சரிந்த சன் டிவி பங்குகள்! kalanithi maran sun tv shares fall
Selvam
சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் தொலைக்காட்சி நிறுவனங்கள், திரைப்பட தயாரிப்பு, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி, வானொலி ஆகியவற்றை நடத்தி வருக்கிறது. kalanithi maran sun tv shares fall
இந்தநிலையில் சன் நெட்வொர்க் குழுமத்தின் தலைவரும் தனது சகோதரருமான கலாநிதி மாறன் சன் டிவியின் 12 லட்சம் பங்குகளை முறைகேடாக மாற்றி தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக குற்றம்சாட்டி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார் தயாநிதி மாறன்.
இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய அதேவேளையில், வர்த்தக உலகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், இன்று வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில், சன் டிவியின் ஒரு பங்கின் விலை 4%-க்கும் மேல் சரிந்து ரூ.588 ஆக வர்த்தகமானது.
பங்குகள் சரிவை சந்தித்துள்ள நிலையில், மும்பை பங்கு சந்தை, தேசிய பங்கு சந்தைக்கு சன் நெட்வொர்க் நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில், “ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை, ஊகத்தின் அடிப்படையிலானவை. இது சன் நெட்வொர்க்கின் வணிகத்திலோ, அன்றாட செயல்பாடுகளிலோ எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பங்குதாரர்களின் குடும்ப விஷயங்கள் தனிப்பட்ட விவகாரங்களை சார்ந்தவை” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக