![]() |
ராதா மனோகர் : ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், சைக்கிள் போன்றவற்றின் பின்னால் அமர்ந்து செல்லும் சிறுவர்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாக உள்ளது.
ஒரு சிறிய பெல்ட் இந்த சிறுவர்களின் பாதுகாப்பை ஓரளவாவது உறுதி செய்யும் என்று நம்புகிறேன்
ஆனால் பலருக்கும் இப்படி ஒரு பாதுகாப்பு பெல்ட் இருக்கும் விடயமே இங்கு தெரியாது ,
எதுவித பாதுகாப்பு பெல்டும் அணியாமலே தினமும் ஆயிரக்கணக்கான சிறுவர் குழந்தைகள் மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டரின் பின்னே அமர்ந்து பயணிக்கிறார்கள்.
படத்தில் இருப்பது போல ஒரு சாதாரண பெல்ட் இவர்களது பாதுகாப்புக்கு பெரிய உதவியாக இருக்கும்
நானும் எத்தனையோ பேரிடம் இங்கு இதைபற்றி பேசி பார்த்துவிட்டேன்
யாரும் இது பற்றி போதிய கவனம் எடுப்பதாக தெரியவில்லை
சதா புதிது புதிதாக பலசரக்கு கடைபோட்டு கடனாளியாகும் வியாபாரிகள் கூட இந்த கோரிக்கைக்கு செவி மடுப்பதாக இல்லை.
இதை பார்க்கும் யாராவது தயவு செய்து கொஞ்சம் சிந்தித்து இப்படி பெல்ட்டுக்களை தயாரிக்கலாம் ,
ஏன் இது இன்னும் கட்டாய சட்டம் ஆக வரவில்லை என்றும் தெரியவில்லை.
நான்கு வயது குழந்தை கூட அப்பாவின் அல்லது அம்மாவின் முதுகை கட்டி பிடித்து கொண்டு செல்லும் காட்சி காணும் பொழுதெல்லாம் மிகுந்த பயமாக இருக்கிறது please think before carry your kids
இன்று தாயுடன் ஸ்கூட்டரின் பின்புறம் அமர்ந்து பள்ளிக்குச் சென்ற, பள்ளி மாணவி சவுமியா ஸ்கூட்டரிலிருந்து தவறி விழுந்து, லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்!
கொளத்தூர், பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்தவர் யாமினி.
இவரது 10 வயது மகள் சவுமியா புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த செய்தியை அறிந்த போது முன்பு இது பற்றி எழுதிய பதிவு ஞாபகதிக்ரு வந்தது
அச்செய்தி பின்வருமாறு :
இந்து தமிழ் : தனியார் நிறுவனத்தில் பணி செய்துவரும் யாமினி, வேலைக்கு போகும்போது ஸ்கூட்டரில் மகளை பள்ளியில் விட்டு செல்வது வழக்கம்.
நேற்று காலை பணிக்கு புறப்பட்ட யாமினி, மகளை பின்னால் அமர வைத்து, பேப்பர் மில்ஸ் சாலை வழியே பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.
அதே பகுதி வீனஸ் மார்க்கெட் தாண்டி செல்லும்போது, சாலையில் தடுமாறிய நிலையில், தாயும் மகளும் கீழே விழுந்தனர்.
அப்போது, பின்னால் வந்த தனியார் தண்ணீர் லாரி, சிறுமி சவுமியா மீது ஏறிச் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் தலை நசுங்கி இறந்தார்.
செம்பியம் போலீஸார் விரைந்து சென்று தண்ணீர் லாரி டிரைவரான திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திகேயன் (41) என்பவரை கைது செய்தனர். இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தாய் கண் எதிரே மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியத<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக