ஞாயிறு, 15 ஜூன், 2025

ஈரான்! கைகோர்த்த மதவாதிககளும் சி ஐ ஏயும் .. Iran Before and after 1979

ராதா மனோகர் : ஈரான் .. கல்வியும் செல்வமும் மகிழ்ச்சியும் காணமல் போன கதை .
.கைகோர்த்த மதவாதிககளும் சி ஐ ஏயும் .. Iran Before and after 1979
ஒரு பூலோக சொர்க்கம் போலிருந்த தேசம்தான் ஈரான் . செல்வமும் கல்வியும் நல்ல பண்பும் வரலாற்று பாரம் பரியம் கொண்டிருந்த அறிவார்ந்த மக்களின் தேசம் அது .
அமெரிக்காவுக்கே கடன் கொடுத்த தேசம் அது. மத்திய கிழக்கு நாடுகள் எல்லாம் வெளிநாட்டு தொழிலாளர்களை பணிக்கு அழைக்கு முன்பே அதை ஆரம்பித்து வைத்த தேசம் அது. .. அதுவும் நல்ல சம்பளத்தில் கௌரவமாக பண்பாக நடத்தினார்கள்.
படிக்கும் மாணவர்கள் எல்லோருக்கும் அவர்கள் விரும்பிய நாடுகளுக்கு பணம் கொடுத்து அரசாங்கமே உயர்படிப்புக்கு அனுப்பியது .
அப்படி படிக்க போன மாணவர்கள் மேற்கு நாடுகளின் மாய வலையில் விழுந்து இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக நாடு திரும்பி நாட்டையே சின்னாபின்னமாக்கினர் .


ஈரான் மன்னர் ஷா பல்லவியின் ஆட்சியில் பெண்களின் கல்வியில் அரசு முழு முதல் அக்கறை காட்டியது .
ஈரான் ஒரு மத சார்பற்ற நாடாக விளங்க வேண்டும் என்பதில் மன்னர் ஷா மிகவும் உறுதியாக இருந்தார்.
பெண்கள் எல்லாவிதத்திலும் ஆண்களுக்கு நிகராக இருக்கவேண்டும் என்பதற்காக பல புரட்சிகரமான சட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தார்.
பெண்கள் நலம் மற்றும் குடும்பம் ,குழந்தைகள் பராமரிப்புக்கு என தனி சட்டமும் அதற்கு உரிய நீதிமன்றங்களும் அமைத்தார் .
அதனால் அந்த விடயங்களில், குறிப்பாக மணமுறிவு போன்றவற்றில் பெண்களின் சுதந்திரம் உறுதிப்படுத்த பட்டது .
மணமுறிவு விடயத்தில்  ஆண்களுக்கு இருக்கும் அதே உரிமை பெண்களுக்கும் வழங்கப்பட்டது .
மதவாதிகளின் எதிர்ப்பையும் மீறி பெண்களின்திருமண வயதை 15 இல் இருந்து 18 ஆக உயர்த்தினார்.
பெண்களுக்கு கரு சிதைவு செய்துகொள்ளும் உரிமையை வழங்கினார். குடும்ப கட்டுப்பாட்டு திட்டமும் அறிமுகப்படுத்த பட்டது .


வேலை செய்யும் பெண்களின் குழந்தைகளுக்கான சிறுவர் day care center கள் அமைக்கப்பட்டன.
இவைதான் இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் எதிர்ப்பை மன்னர் ஷாவுக்கு வாங்கி கொடுத்த நல்ல திட்டங்களாகும்.
பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்கவேண்டும் என்பதில் மிகவும் உறுதியான நடவடிக்கைகளை தொடர்ந்து மன்னர் ஷா எடுத்து கொண்டே வந்தார் பெண்களின் கல்வி வளர்ச்சியும் சுதந்திர சிந்தனையும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளை மேலும் மேலும் வெறுப்புக்கு உள்ளாக்கியது .

அந்த மதவாதிகளின் எதிர்ப்புக்கு தலைமை தாங்கினார் அயதுல்லா கொமேனி. அவர்கள் நாட்டில் தொடர் கலவரங்களையும் வேலை நிறுத்தங்களையும் உண்டாக்கி கொண்டே இருந்தனர்.
இந்த இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கு அளவற்ற விளம்பரத்தையும் போதிய வசதிகளையும் மேற்கு நாடுகள் தாராளமாக வழங்கின.
பெற்றோலிய உற்பத்தி விற்பனை ஒப்பந்தங்கள் எதிலும் மேற்கு நாடுகளை திருப்தி செய்யும் நோக்கம் மன்னர் ஷாவுக்கு இருக்கவில்லை .
இன்னொரு சவுதியாக ஈரான் ஒருபோதும் இருக்காது என்பதுதான் மன்னர் ஷாவின் நிலைப்பாடு.
நாட்டை விட்டு வெளியேற்ற பட்டிருந்த கொமேனியின் உரைகளை காசெட்டுகள் மூலம் கேட்டு கேட்டே ஒரு முட்டாள் பயங்கரவாதிகளின் கூட்டம் ஈரானில் உருவாகியது.
ஒரு நரேந்திரமோடியை போல அல்லது சீமான் போலவே வாயால் வடை சுடும் கலையில் அயதுல்லா கோமேனி வல்லவர்.

எங்கும் அரசுக்கு எதிரான எதிர்ப்பு அரசியானால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உருவானது.
ஈரானின் ஆயில் உற்பத்தியால் வெறுப்புற்றிருந்த அமெரிக்க சவுதி அரசுகள் ஈரானின் அழிவுக்கு தங்களால் ஆன எல்லா கருமங்களையும் ஆற்றி கொண்டே இருந்தன,
மறுபுறத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அமெரிக்க பிரான்ஸ் பிரிட்டன் சவூதி போன்ற நாடுகளின் உதவிகளை பெற்று கொண்டே அவர்களையும் எதிர்ப்பதாக நாடகம் ஆடிக்கொண்டே ஷாவின் ஆட்சியை தூக்கி எறிந்து ஆட்சியை பிடித்தனர்.
அதுவரை அவர்கள் மக்கள் விரும்பும் காதலர்கள் போல காட்சி அளித்தனர். ஈரானின் ஆட்சி அதிகாரம் அவர்களின் சுயரூபம் வெளிப்படதொடங்கியது.

முதல் அடி விழுந்தது பெண்களுக்கு. முகத்தை மூடுதல் உடலை மூடுதல் எல்லாம் கட்டாயமாக்கப்பட்டது.
மதுபானங்கள் தடை செய்யபட்டது.
மேற்கத்தைய இசை முற்றாக தடை செய்யப்பட்டது.
பெண்கள் பாதுகாப்பிற்கான The Family Protection Act சட்டம் ரத்து செய்யப்பட்டது. மன்னர் ஷாவின் ஆட்சியில் பெண்கள் பெற்றிருந்த அத்தனை பாதுகாப்பு சட்டங்களும் பறித்து எடுக்கப்பட்டன.
 பெண்களின் திருமண வயது 18 என்று இருந்ததை 8 வயதாக குறைக்கப்பட்டது. 

கொமேனியின் இஸ்லாமிய சட்டம். மணமுறிவுக்கு பின் குழந்தைகள் மீதான முழு உரிமையும் தந்தைக்கே வழங்க புதியசட்டம் உருவானது.
பொது பேருந்து ரயில் போன்றவற்றில் பெண்கள் தனியான பிரிக்கப்பட்ட பகுதிகளிலே பயணிக்கவேண்டும் என்றானது .
அதுவும் மிகவும் சிறிய அளவிலேயே வழங்கப்பட்டது. அதாவது பெண்களுக்கு பயணங்கள் நல்லதல்ல என்ற நோக்கத்தில். இதன் காரணமாக எராளமான பெண்கள் தங்கள் வேலைகளை துறந்தனர்.
உயர்ந்த பதவிகளில் இருந்த பெண்கள் நெருக்கடியால் வேலைகளை தாமாகவே துறக்கும் படி கவனிக்கப்பட்டனர். இந்த காணொளியில் இரானின் பழைய வாழ்க்கையை நினைவூட்டும் காட்சிகளும் அதை வேதனையோடு விளக்கும் வரிகளும் உள்ளன. இதன் இசையும் பாடுபவரின் குரலும் கேட்போரை உலுக்குகிறது

 இனி ஒரு போதும் அந்த நாடு இழந்த பெருமையை உயர்வை பெறாது .. 
அந்த அளவுக்கு மதவெறி வேரூன்றி பாழ்படுத்தி விட்டது . 
மீள்பதிவு  22 மார்ச், 2019

கருத்துகள் இல்லை: