புதன், 16 ஆகஸ்ட், 2023

நாங்குநேரி சம்பவத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

 tamil.oneindia.com -   Hemavandhana   : நொடிக்கு நொடி.. "முதல் வெடியை" வீசிய விசிக.. அப்படீன்னா திமுகவில் மொத்தமா மாறுதா.. கவனித்த அறிவாலயம்
சென்னை: திமுக - விசிக கூட்டணி முறிகிறதா? ஏன் விசிக இப்படி ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளது என்ற சந்தேகங்கள் சோஷியல் மீடியாவில் முளைக்க துவங்கிவிட்டன.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவை சேர்ந்த 17 வயது மாணவன் சின்னத்துரை.. 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்..
சின்னத்துரையை அவருடன் படிக்கும் மாணவர்கள், சாதிய பாகுாட்டை காட்டி படிக்கவிடாமல் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அளவுக்கு அதிகமாக அவமானப்பட்ட சின்னத்துரை, ஸ்கூலுக்கு போகாமலேயே இருந்துள்ளார்.


விஷயத்தை கேள்விப்பட்ட பள்ளி நிர்வாகமும், சின்னத்துரையை டார்ச்சர் செய்த மாணவர்களை எச்சரித்தது.. இதனால், சம்பந்தப்பட்ட சில மாணவர்களின் கோபம் சின்னத்துரை மீது திரும்பியது..

பரிதாபம்: சின்னத்துரையின் வீட்டுக்கு சென்று, கண்மூடித்தனமாக அரிவாளால் வெட்டி சாய்த்தனர்.. அதை தடுக்க வந்த, தங்கை சந்திரா செல்வியையும் அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டனர்.. 2 பிள்ளைகளும் ரத்த வெள்ளத்தில் மீட்டகப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இப்போதைக்கு இந்த சம்பவத்தில் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றாலும், ஸ்கூல் பிள்ளைகள் இப்படி ஆக்ரோஷமாகவும், ஜாதி வெறி பிடித்தும், கொடூர காரியத்தை செய்ததை கண்டு தமிழக மக்கள் வெலவெலத்து போய்விட்டார்கள்..

கல்லூரி மாணவர்கள் இடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், அது தொடர்பாக வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளபோதிலும், நாங்குநேரி அதிர்ச்சியில் இருந்து இன்னும் யாருமே மீளவில்லை.

பெருத்த அதிர்ச்சி: அறிவாயுதம் ஏந்த வேண்டிய வயதில், இந்த பிள்ளைகள் இப்படி அரிவாளை தூக்கும் அளவிற்கு சமூகத்தில் சாதிவெறி பரவி விட்டதே என்று பொதுமக்கள் வருத்தங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

மாமன்னன் போன்ற படங்கள்தான், இதுபோன்ற வன்முறைகளுக்கு காரணம் என்று புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட கட்சிகள் காரணம் சொல்லி வருகின்றன.. சின்னகவுண்டர் படத்துல வராத வன்முறையா, மாமன்னன் படத்தில் வந்துவிட்டது என்று சீமான் போன்றோர்கள் அதை மறுத்து பதிலடி தந்து வருகிறார்கள். ஆக, இந்த ஒரு வன்முறை நிகழ்வு, அரசியல், சினிமா என நாலாபக்கமும் பற்றிக்கொண்டு எரிகிறது.

அன்பில் மகேஷ்: இப்படிப்பட்ட சூழலில், திமுக கூட்டணி கட்சியான விசிக முக்கிய பிரச்சனை ஒன்றை எழுப்பியிருக்கிறது. நாங்குநேரி சம்பவத்திற்குப் பொறுப்பேற்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் சங்கத்தமிழன் சொல்லும்போது, "தமிழகத்தை உலுக்கிய நாங்குநேரி சம்பவத்திற்கு பொறுப்பேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும். பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷிடம் பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டன. ஆனால், அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை" என்று அவர் குற்றம் சாட்டியிருக்கிறார் சங்கத்தமிழன்.

தேர்தல் கூட்டணி: தேர்தல் நெருங்கும் சூழலில், கூட்டணி கட்சியான விசிகவின், இந்த குற்றச்சாட்டானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அப்பாயானால் கூட்டணி விரிசலா? கூட்டணி பேரமா? என்றெல்லாம் சோஷியல் மீடியாவில் சலசலப்புகள் கிளம்பி வருகின்றன.

ஒருமுறை திருமாவளவனிடம் செய்தியாளர் ஒருவர், "வேங்கைவயல் விவகாரத்தில் நீங்க திமுககாரர் மாதிரியே பேசுறீங்களே?" என்று கேட்டார். இதைக்கேட்டு திருமாவளவன் ஆவேசமானார்..

"உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கட்டும்.. அதுல ஏதாவது அவசரம் இருக்கா? காலக்கெடு ஏதாவது இருக்கா? இந்த மாதியெல்லாம் பேசுகிற வேலையை வைத்துக்கொள்ளாதீர்கள்... அதை வேறு யாரிடமாவது வைத்துக்கொள்ளுங்கள். இது நாகரிகம் இல்லாத பேச்சு. ஆகையால் நாகரிகம் தவறி பேசாதீர்கள்.

ஆவேசம்: திமுகவை எதிர்த்து எங்களை மாதிரி போராட்டங்களை யாரும் நடத்தவில்லை.. தலித்துகள் பிரச்சனைகளுக்காக இந்த 2 ஆண்டுகளில் 10 போராட்டங்களை நடத்தி உள்ளோம்.. நாளைக்குகூட கிருஷ்ணகிரியில் பேராட்டம் நடத்த போகிறோம்.. அதெப்படி திமுக காரரா? என்று கேட்கலாம்" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
Thirumavalavan DMK Alliance and What did VCK Sangathamizhan say about Anbil Mahesh

அதேசமயம், "திமுக தலைமையிலான கூட்டணி வலுவான கூட்டணி. இந்த கூட்டணியில் எந்த சிக்கலும் கிடையாது. திமுகவிற்கும் விசிகவுக்கம் இடையே இருப்பது நட்புணர்வு, கொள்கை சார்ந்த உறவு. தேர்தல் களத்தில் மட்டும் அல்லாது சமூக நீதிக்கான களத்தில் தொடர்ந்து இணைந்து பயணிக்கக்கூடிய வலுவை பெற்று இருக்கக்கூடிய கூட்டணி.. அதனால் தொடர்ந்து நாங்கள் திமுக கூட்டணியில் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம்" என்று கூறி கூட்டணியை மீண்டும் உறுதி செய்திருந்தார் திருமா.

ஆர்ப்பாட்டம்: ஆக, கூட்டணியிலேயே இருந்தாலும்கூட, இனி கூட்டணியிலேயே தொடர்ந்தாலும்கூட, அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவதுடன், தவறுகளை சுட்டிக்காட்டி, ஆர்ப்பாட்டங்களையும் அவ்வப்போது விசிக முன்னெடுத்து வருகிறது.

இந்த அடிப்படையிலேயே, அன்பில் மகேஷை பதவியிலிருந்து விலக சொல்லி விசிக தற்போது வலியுறுத்துவதாக தெரிகிறதே தவிர, இதை வைத்து கூட்டணி முறிவு என்றெல்லாம் சொல்ல முடியாது என்கிறார்கள்.. ஆனால், நாங்குநேரி சம்பவத்தினால் பொதுமக்கள் கொந்தளிப்பில் உள்ள நிலையில், விசிக இவ்வாறு சொல்லியிருப்பது திமுகவுக்கு இது ஒரு தர்மசங்கடம்தான் என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கருத்துகள் இல்லை: