வெள்ளி, 2 ஜூன், 2023

அண்ணாமலை பார்ப்பனர்களுக்கு எதிரி - எஸ் வி சேகர் கடுமையான குற்றச்சாட்டு

 tamil.samayam.com  :  சமீபகாலமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பாஜக நிர்வாகி எஸ்.வி. சேகர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு தன்னை பிராமணர்களின் விரோதி என எஸ்.வி. சேகர் கூறியதற்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
தூத்துக்குடி: பிராமணர்களுக்கு விரோதி என எஸ்.வி. சேகர் பேசியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "நான் கொஞ்சம் திமிரு பிடித்தவன்.. இப்படித்தான் இருப்பேன்; என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது" என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழக பாஜகவில் சமீபகாலமாக பல கோஷ்டிகள் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.


அண்ணாமலை, வானதி சீனிவாசன், ஹெச். ராஜா, பொன். ராதா கிருஷ்ணன் என ஒவ்வொருவருக்கும் ஆதரவாக ஒரு கோஷ்டி செயல்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, அண்ணாமலைக்கு எதிராக பாஜகவுக்கு உள்ளேயே ஒருதரப்பு செயல்படுவதாகவும், அவரை பற்றி பல குற்றச்சாட்டுகளை டெல்லிக்கு அவர்கள் அனுப்பி வைப்பதாகவும் கட்சி நிர்வாகிகளே தெரிவிக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, கடந்த சில மாதங்களாகவே அண்ணாமலையை பாஜக நிர்வாகி எஸ்.வி. சேகர் பொதுவெளியில் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "அண்ணாமலை ஒரு பிராமண விரோதி. பாஜகவில் உள்ள பிராமணர்களுக்கு எதிராக அவர் செயல்பட்டு வருகிறார்" என பகிரங்கமாக குற்றம்சாட்டி பேசினார்.

இந்நிலையில், இன்று தூத்துக்குடிக்கு வந்த அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் இதுதொடர்பாக கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

தாராளமாக எஸ்.வி. சேகரை டெல்லி போக சொல்லுங்க.. என்னை பற்றி கட்சித் தலைமையிடம் புகார் கொடுக்க சொல்லுங்க. டெல்லிக்கு இண்டிகோ விமானத்தில் வெறும் 6 ஆயிரம்தான் கட்டணம். யாருக்குலாம் என்னை பிடிக்கலையோ அவங்க எல்லோரையும் டெல்லிக்கு போ சொல்லுங்க. நான் யாருக்கும் விரோதி அல்ல. ஆனால், என்னை யாராவது பழைய பஞ்சாங்கத்தை வைத்து கட்டுப்படுத்த நினைத்தால், யார் பேச்சையும் நான் கேட்க மாட்டேன். அதுல ரொம்ப தெளிவாக இருக்கேன்.

எங்க அப்பா அவரு. எங்க தாத்தா இவரு. நான் 40 வருஷமா அப்படி இருந்தேன் என்ற பேச்செல்லாம் என்னிடம் செல்லுபடியாகாது. இதெல்லாம் உங்க வீட்டுல வெச்சுக்கோங்க. இதை எஸ்.வி. சேகருக்கு மட்டுமல்ல. அவர் கூட இருக்குற எல்லோருக்கும் சொல்றேன். இந்த பழம்பெருமைகளை பேசி கன்ட்ரோல் பண்ற வேலையெல்லாம் என்னிடம் வெச்சுக்காதீங்க.
பெண் சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றமல்ல.. கர்நாடகா உயர் நீதிமன்றம் பரபர தீர்ப்பு
எனக்கு கொஞ்சம் திமிரு ஜாஸ்திங்கண்ணா. அண்ணாமலை இப்படித்தான் இருப்பான். தலைவரா இருந்தாலும் இப்படித்தான் இருப்பான். தலைவரா இல்லாவிட்டாலும் இப்படித்தான் இருப்பான். ஊர்ல போயி பசு மாட்டை பிடிச்சாலும் இப்படித்தான் இருப்பான். ஆட்டை பிடிச்சாலும் இப்படித்தான் இருப்பான். அண்ணாமலை தலைவரான பிறகு மாறிவிடணும். பாத்து நடந்துக்கணும்னு சொன்னா அது என்னிடம் நடக்காது. தொண்டர்களுக்காக இருக்கக்கூடிய தலைவன் நான். பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கூடிய தலைவன் நான். இந்த பாலிஸா போறது எல்லாம் என்னிடம் நடக்காது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

கருத்துகள் இல்லை: