tamil.goodreturns.in - Prasanna Venkatesh : அமெரிக்க அரசின் கடன் வரம்பை அதிகரிப்பதில் நாடாளுமன்ற ஒப்புதலுக்காக அந்நாட்டின் பொருளாதாரம் வாழ்வா, சாவா போராட்டத்தில் இருக்கும் வேளையில்,
2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் அதிபர் தேர்தலுக்கான அதிரடிகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.
2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டெமாக்ரடிக் கட்சி சார்பாக மீண்டும் ஜோ பைடன் போட்டியிடும் வேளையில், குடியரசு கட்சி சார்பாக டொனால்டு டிரம்ப் உட்பட சில இந்திய அமெரிக்கர்களும் போட்டிப்போட உள்ளனர்.
குடியரசு கட்சி அதன் அதிபர் வேட்பாளர் யார் என்பதை இதுவரையில் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் Donald Trump 2024 ஆம் ஆண்டு மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாக கிடைக்கும் குடியுரிமையை ரத்து செய்ய முற்படுவேன் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.
ட்விட்டரில் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட வீடியோவில் பிறப்புரிமை குடியுரிமை அதாவது birthright citizenship விளக்கத்தை திருத்தி எழுத அரசு அமைப்புகளுக்கு உத்தரவிடுவேன் என்று கூறினார். டிரம்ப்-ன் இந்த அறிவிப்பு எளிதாக நடக்க கூடியது இல்லை, இதில் சட்டரீதியான சவால்கள் அதிகம் உள்ளது.
பிறப்புரிமை குடியுரிமை சட்டம் எங்கிருந்து உருவானது தெரியுமா..?அமெரிக்க உள்நாட்டுப் போர் மூலம் அமெரிக்கா முழுவதும் கறுப்பின மக்களை அடிமைப்படுத்தும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1868 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசியலமைப்பின் 14 வது திருத்தத்தில் பிறப்புரிமை குடியுரிமை உருவானது.
இந்தத் திருத்தம் மூலம் அமெரிக்காவில் பிறந்த அனைத்து நபர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது. இதில் முன்பு அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின மக்கள் உட்பட, அந்நாட்டில் பிறந்த குழந்தையின் பெற்றோர்கள் சட்டப்பூர்வமாக நாட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த விதியை தான் குடியரசுக் கட்சி சார்பாக அதிபர் வேட்பாளர் போட்டியில் இருக்கும் டொனால்டு டிரம்ப் திருத்தி எழுத உத்தரவிடுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து டொனால்டு டிரம்ப்-ன் பிரச்சார அறிக்கையில் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் பிறப்புரிமை மூலம் குடியுரிமை ரத்து.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பால் NRI-கள் ஷாக்..!
1868 ஆம் ஆண்டில் திருத்தி எழுதப்பட்ட பிறப்புரிமை குடியுரிமை விதியில், தற்போது அமெரிக்காவில் ஒரு குழந்தை பிறந்தாலே குடியுரிமை வழங்கப்படும் என்ற அளவில் உள்ளது. இதை குழந்தையின் ஒரு பெற்றோராவது அமெரிக்க குடிமகனாகவோ அல்லது ஒரு பெற்றோர் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்று இருந்தாலோ அந்த குழந்தைக்கு பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும் என்ற வகையில் சட்டத்தை திருத்த உள்ளதாக அறிவித்தார்.
2018 ஆம் ஆண்டிலேயே டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக இருக்கும் பிறப்புரிமை குடியுரிமை வழங்குவதில் சில அளவீட்டை நிர்ணயம் செய்ய அதாவது லிமிட்-ஐ செட் செய்ய உத்தரவு அளிப்பதாக அறிவித்தார், ஆனால் அது நடக்கவில்லை. தற்போது இதையே அடிப்படையாக வைத்து 2024 அதிபர் தேர்தலில் போட்டிப்போட உள்ளார்.
இது கட்டாயம் என்ஆர்ஐ-களுக்கு அதிர்ச்சியாகவே இருக்கும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக