வியாழன், 25 மே, 2023

புது நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா.. புறக்கணிக்கும் கட்சிகள்- முழு லிஸ்ட்

tamil.oneindia.com - Shyamsundar  : டெல்லி: டெல்லியில் திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் பலவும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
டெல்லியில் மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் பிரதமர் இல்லம் கட்டப்பட்டு வருகிறது. ரூ. 20,000 கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா திட்டம் கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்டு வருவது மக்கள் இடையே எதிர்ப்பு அலையை சந்தித்தது.
2019ல் இதற்கான பணிகள் தொடங்கின. 2021, 2022 கொரோனா காலத்திலும் இதற்கான பணிகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கொரோனாவை எதிர்கொள்ள போதிய நிதி இல்லாத போது மத்திய அரசு புதிய நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் இல்லம் கட்ட இவ்வளவு கோடியை செலவு செய்வது விமர்சனங்களை சந்தித்தது.  இந்த நிலையில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கான கட்டுமானத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.

வழக்கு:ஆனால் இதை மத்திய அரசு அத்தியாவசியமான பணி என்று கூறியது. அதோடு மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க முடியாது, இது அத்தியாவசிய பணி, அதனால் பணிகள் தொடர்ந்து நடக்கலாம் என்று டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து சென்ட்ரல் விஸ்டா அவென்யூவை கடந்த வருடம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிலையில் அங்கு தற்போது புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட உள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைக்காமல் பிரதமர் மோடியே இந்த கட்டிடத்தை திறப்பதை எதிர்க்கட்சிகள் எதிர்த்து உள்ளன.

இதனால் 19 கட்சிகள் இந்த நிகழ்வை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது. இந்த நிகழ்வு ஒரு ஜனநாயக படுகொலை. சரியாக சாவக்கார் பிறந்த நாளான 28ம் தேதி இந்த நிகழ்வை நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். ஜனநாயகத்தை அழிக்கும் விதமாக மோடி இந்த செயலில் ஈடுபடுவதாக 19 கட்சிகள் கூட்டு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

பாஜக தவிர்த்து நாடாளுமன்றத்தில் 3 பெரிய கட்சிகளான காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் இந்த நிகழ்வை புறக்கணிக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தங்களது எதிர்ப்பையும், புறக்கணிப்பையும் தெரிவித்துள்ளன. இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓபிரையன் கூறுகையில், "நாடாளுமன்றம் என்பது பேறும் புதிய கட்டடம் மட்டும் இல்லை. பாரம்பரியம், மாண்புகள், மரபுகள் மற்றும் முன்னுதாரணங்கள் நிறைந்த அமைப்பு அது. நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் அடித்தளமாகும். அதை மோடி சீரழித்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் கட்சிகள்:

1 காங்கிரஸ்
2 திமுக
3 டிஎம்சி
4 ஐக்கியஜனதா தளம்
5 ஆம் ஆத்மி
6 என்சிபி
7 உத்தவ் தாக்ரே சிவசேனா
8 கேரளா காங்கிரஸ்
9 புரட்சிகர சோசியலிஸ்ட்
10 விசிக
11 மதிமுக
12 ராஷ்டிரியலோக் தள்
13 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
14 சமாஜ்வாதி
15 ராஷ்டிரியஜனதாதளம்
16 இந்திய கம்யூனிஸ்ட்
17 ஐயுஎம்எல்
18 ஜார்க்கண்ட் முக்தி மோர்சா
19 தேசியமாநாட்டுகட்சி

New Parliament inauguration: List of parties attending, boycotting the event

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கட்சியினர்

1 சிரோமணி அகாலி தளம் (SAD)
2 யுவஜன ஷ்ரமிகா ரைத்து காங்கிரஸ் கட்சி (YSRCP)
3 தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி)
4 பிஜு ஜனதா தளம் (பிஜேடி)
5 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக)

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள] வாய்ப்புள்ள கட்சிகள்

1 சிவசேனா (ஷிண்டே பிரிவு)
2 பகுஜன் சமாஜ் கட்சி (BSP)
3 லோக் ஜனசக்தி கட்சி (LJP-ராம் விலாஸ்)
4 இந்திய குடியரசுக் கட்சி (RPI)

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

English summary

கருத்துகள் இல்லை: