திங்கள், 10 அக்டோபர், 2022

உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால் வெளிப்படையாக தெரியும் சில அடையாளங்கள்

 zeenews.india.com   -RK Spark  :  ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கம் மற்றும் சுறுசுறுப்பற்ற மோசமான வாழ்க்கை முறை தான்.  கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் பல்வேறு ஆரோக்கிய சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியது வரும், அதிகமான கொலஸ்ட்ரால் மிகவும் ஆபத்தானவை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.  
கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என்று இருவகைகளுண்டு,
கெட்ட கொலஸ்ட்ரால் மிகவும் ஆபத்தானவை.  உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால் மாரடைப்பு, பாக்கவாதம் மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது.  
நமது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்திருப்பதை மருத்துவமனை சென்று பரிசோதித்து தான் அறிய வேண்டும் என்பதில்லை நமது உடல் வெளிப்படுத்தக்கூடிய சில அறிகுறிகளை வைத்தும் கண்டறிய முடியும்.  


இப்போது அதிக கொலஸ்ட்ராலால் நமது தோல் வெளிப்படுத்தப்படும் சில முக்கியமான அறிகுறிகளை இங்கே பார்க்கலாம்.

1) ஒருவர் உடலில் அதிகமான அளவில் கொலஸ்ட்ரால் இருக்குமேயானால் அவரது சருமத்தின் நிறம் மாற ஆரம்பிக்கும், முகம் லேசாக கருமையாகும், கண்களைச் சுற்றி சிறிய பருக்கள் தோன்ற ஆரம்பிக்கும்.  இதுபோன்ற அறிகுறிகளை நீங்கள் கவனித்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

2) சாதாரணமாக இருக்கும்போது முகத்தில் நீண்ட நேரம் அரிப்பு ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் இருக்குமானால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி கொலஸ்டராலின் அளவை சரிபார்த்து கொள்வது நல்லது.  முகம் சிவந்துபோதல் மற்றும் அரிப்பு ஏற்படுதல் அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறியாகும்.

3) பொதுவாக கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் பருக்கள் தோன்றும்,  குறிப்பாக முகத்தில் சிறு பருக்கள் வர ஆரம்பிக்கும்.  மேலும் கண்கள் மற்றும் மூக்கைச் சுற்றி சிறியளவில் சிவப்பு நிறத்தில் சில பருக்கள் போன்று தோன்றும்.

4) உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருக்கும்போது ​​முகத்தில்  தடிப்புகள் ஏற்படும், இதனை சிலர் வியர்வையால் தோன்றும் தடிப்புகள் அல்லது வெப்பத்தால் தோன்றும் தடிப்புகள் என்று கவனிக்காமல் விட்டுவிடுவார்கள்.  உடலில் அதிகமாக கொலஸ்ட்ரால் இருந்தாலும் இதுபோன்ற தடிப்புகள் முகத்தில் ஏற்படும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

கருத்துகள் இல்லை: