வியாழன், 13 அக்டோபர், 2022

திராவிடர்களின் சதிர் நாட்டியத்தை பரதநாட்டியம் என்று மடைமாற்றிய வரலாறு

May be an image of text that says 'Bharat India Natyam Dance Hence Bhavam (expression) Ragam (music) Talam (rhythm) Natyam (dance) = BhaRaTaNatyam Bharatanatyam Bharatanatyam Sourc: Govt. of India Website http://ndianuture.gov.in/stories sadir-attam-bharatanatyam Dream 1 தமிழ்நாடு'
May be an image of 3 people and people standing

ராதா மனோகர்  சதிர் கச்சேரியை பரதநாட்டியம் என்று  நம்மவர்களே நம்புவதை என்ன சொல்வது?
நாங்கள் திராவிடர்கள்  We Dravidians  என்ற முக நூல் போராளிகளே பரதநாட்டியம் என்றால் பாவ ராக தாள நாட்டியம் என்று வார்த்தை விளையாட்டில் ஈடுபடுவதை பார்க்கையில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை!
1935 (தைத்திங்கள் முதலாம் நாள் ) இல் அருண்டெல் என்ற வெள்ளைக்காரரின் தமிழ் பார்ப்பன மனைவியான ருக்குமணி என்பவர் இந்த சதிர் கச்சேரியை பரதநாட்டியம் என்று பெயர் மாற்றினார் -  எனது சின்னஞ்சிறு பராயத்தில் கோயில் திரு விழாக்களில் சதிர் கச்சேரி அல்லது சின்னமேளம் என்ற சொற்களை கேட்டிருக்கிறேன் ..
புத்தூர் செட் .. ஆவரங்கால் செட் . கைதடி செட் என்று பெரியவர்கள் பேசிக்கொள்வார்கள் .


இரவு திருவிழாக்களில் ஏராளமான மின்னல்களை ஆடை அணிகலன்களாக அணிந்த நடனமணிகள் ஏதோதோ பாடலகளுக்கு துள்ளி குதித்து ஆடுவார்கள்.
பின்பு அந்த சொற்களே மறைந்து போய்விட்டது .
சினிமா பாடல்கள் நாட்டு பாடல்கள் போன்றவற்றிக்கு நடனமாடியவர்கள் மெதுவாக கடவுள் வழிபாட்டுக்கு ஆட தலைப்பட்டார்கள் .
காலப்போக்கில் சதிர்கச்சேரி போய் ஒரே சாமி கச்சேரி ஆனது. அதன் பெயரையும் பரதநாட்டியம் என்று கூறிக்கொள்ள தொடங்கினார்கள்.
அது ஏதோ பரதமுனிவர் என்பவர் கண்டு பிடித்த நடனம் என்று வழக்கம்போல பார்ப்பனர்கள் பொய்யை அவிழ்த்து விட்டார்கள் .
காலகாலமாக திராவிடர்களின் டி என் ஏயோடு கலந்து இருந்த கலையை அப்படியே களவெடுத்து கதை பின்னி வைத்துள்ளார்கள்  

இந்த வரலாற்றை கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம்
1935 ஆம் ஆண்டு தை திங்கள் முதலாம் நாள் முதல் முதலாக தேவதாசிகளின் சதிர் கச்சேரியை மியுசிக் அகடெமியில் மேடை ஏற்றினார்கள் .
அதுவரையில் வெறும் இசை நிகழ்ச்சி மட்டுமே அங்கு நடக்கும்.
அங்கு அன்று மேடை ஏறிய  சதிர் கச்சேரி பின்பு ருக்மணி அருண்டேல் என்ற பார்ப்பன பெண்ணின் கைங்கரியத்தால்  மெல்ல மெல்ல அதன் பெயர் மாற்றம் பெற்று
இன்று  பரதநாட்டியம் என்று ஆயிற்று .. பெயரை திரித்தார்கள்  வரலாறை திரித்தார்கள்...
அதன் ஜனரஞ்சக தன்மையை அப்படியே அமுக்கி விட்டு அதை ஒரு பார்ப்பனீய இந்து மத புராணங்களை பிரசாரம் செய்யும் கலையாக மாற்றினர் ...

பெயரை திரித்தார்கள்  வரலாறை திரித்தார்கள்...
அதன் ஜனரஞ்சக தன்மையை அப்படியே அமுக்கி விட்டு அதை ஒரு பார்ப்பனீய இந்து மத புராணங்களை பிரசாரம் செய்யும் கலையாக மாற்றினர் ...

திருமதி ருக்மணி என்ற பார்ப்பன பெண் அருண்டெல் என்ற வெள்ளைக்காரரை திருமணம் செய்துகொண்டார்
இவர் 1933 இல், மெட்ராஸ் மியூசிக் அகாடமியின் வருடாந்திர மாநாட்டில்,  முதன்முறையாக சதிர் கச்சேரி ஒன்றை கண்டார்
இந்த சதிர் நடனத்தினால் கவரப்பட்ட ருக்மணி தேவி  பின்னர்  மயிலாப்பூர் கௌரி அம்மா என்பவரிடம் கற்றுக்கொண்டார்,
பின்னர் 1935 இல் பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை' அவர்களிடமும் கற்றுக்கொண்டு அதே ஆண்டு .
தனது முதல் பொது நிகழ்ச்சியை தியோசாபிகல் சொசைட்டியின் வைர விழாவில் அரங்கேற்றினார்

ஜனவரி 1936 இல், இவர் தனது கணவருடன் சேர்ந்து , சென்னை  அடையாறில்   கலாக்ஷேத்ரா என்ற நடனம் மற்றும் இசைக்கான அகாடமியை நிறுவினார்.

அன்றைய மாநில ஒன்றிய அரசுகளின் உதவியோடு பெரும் அளவில் வளர்ந்த கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உள்ளது, மேலும்
1962 இல் சென்னை திருவான்மியூரில் 100-ஏக்கர் (0.40 கிமீ2) வளாகத்தில் அதன் புதிய வளாகத்தில் அமைந்துள்ளது.
அதன் குறிப்பிடத்தக்க மாணவர்களில் ராதா பர்னியர், சாரதா ஹாஃப்மேன், அஞ்சலி மெஹர், கமலாதேவி சட்டோபாத்யாய், சஞ்சுக்தா பாணிக்ரஹி, சி வி சந்திரசேகர், யாமினி கிருஷ்ணமூர்த்தி மற்றும் லீலா சாம்சன் ஆகியோர் அடங்குவர்.
அசல் திராவிட சதிர் ஆடல் கலையை பரத நாட்டியம் என்று பெயர் மாற்றம் செய்ததில் இவர்கள் வெற்றி பெற்றார்கள்
பண்டைய தமிழி எழுத்தை எப்படி பிராமி என்று பெயர் மாற்றினார்களோ
அதே போன்று திராவிட மக்களின் பாரம்பரிய ஆடல் கலையான சதிர் நடனத்தை பரத நாட்டியம் என்று பெயர் மாற்றி விட்டார்கள் .
பிராமி பரதம் என்ற இரு சொற்களும் அவர்கள் காலகாலமாக கைக்கொள்ளும் திரிபு தந்திரங்களின் உதாரணங்கள்தான்

கருத்துகள் இல்லை: