புனர்வாழ்வளிக்கப்பட்ட சுமார் ஐநூறு முன்னாள் புலி போராளிகள் தென்னிலங்கையில் கதிர்காமம் வரை சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இம்மாதம் எட்டாம் திகதி முதல் 11 ஆம் திகதிவரை இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக ஓமந்தையிலிருந்து கொழும்பு கோட்டை வழியாக களுத்துறை வரை இவர்கள் விசேட புகையிரதத்தில் அழைத்துச் செல்லப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் விசேட பேருந்துகள் மூலமாக காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களிற்குச் சென்று இறுதியாக கதிர்காமம் செல்லவுள்ளனர்.
இவர்கள் பல்வேறு சமய வழிபாடுகள், கலாசார மற்றும் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், தென்பகுதியில் உள்ள சிறப்பிடங்களையும் இவர்கள் பார்வையிட உள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக