ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

தழுவல்! சந்தேகமே வேண்டாம். படத்தின் போஸ்டரைப் பார்த்தாலே


ரசிகர்களே உஷார்! தமிழ்சினிமாவின் அடுத்த தழுவல்!  

         முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கும் விஜய், அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் நடிப்பதும் உறுதியாகி இருக்கிறது. இது ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் என்பதுதான் விஷேசம்.

 
இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான், தாமரை காபினேஷனில் பால்கள் உருவாகின்றன. படத்தை தமது போட்டோன் கதாஸ் நிறுவனம் சார்பில் கௌதம் வாசுதேவ் மேனனே தயாரிக்கிறார். 

கௌதம் மேனன் தற்போது ப்ரதீக் பாப்பர், எமி ஜாக்சன் ஆகியோரை வைத்து 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தினை இந்தியில் இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்து விட்டு விஜய்யுடன் இணைகிறார். அஜித்திற்கு என்று தயார் செய்யப்பட்ட 'துப்பறியும் ஆனந்த்' கதையினை விஜய்க்கு ஏற்றவாறு சிறு மாற்றம் செய்து இருக்கிறாராம் கௌதம். படத்தின் தலைப்பை ‘யோஹன்’ என மாற்றி உள்ளார் கௌதம்.   

அஜீத்திடம் கால்ஷீட் கேட்டு கௌதம் காத்துக்கிடந்ததும், பின் சில உரசல்களுடன் இனி அஜீத்துக்காக நான் காத்திருக்க முடியாது என்றும் கௌதம் சொல்லியிருந்தார். இப்போது அஜீத்துக்கான கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு விஜய் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த 2012யில் துவங்குகிறது. 

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிக்கும் நண்பன் கடைசி கட்ட படப்பிடிப்பில் உள்ளது. நண்பன் படத்தை விரைவாக எடுத்தது போல இயக்குனர் ஷங்கர் எந்த படத்தையும் எடுத்தது இல்லையாம்.
 
அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸூடன் இணைந்து எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக 'உதயன்' பட நாயகி ப்ரணிதா ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது. 

இது எந்த ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேஷன்? அதுதானே உங்கள் கேள்வி... சந்தேகமே வேண்டாம். படத்தின் போஸ்டரைப் பார்த்தாலே இது 2008யில் வெளிவந்த ‘லார்கோ வின்ச்’ என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்று சொல்லமுடியும். லார்கோ வின்ச் ஒரு துப்பறியும் கதை என்பது குறிப்பிடதக்கது. 

ரசிகர்களே உஷார் உஷார்!

கருத்துகள் இல்லை: