சென்னை: சுதந்திர தினத்தையொட்டி காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான ரவுடிகள் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்குப் பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சென்னையில் ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் விடிய விடிய ரவுடிகள், சமூக விரோதிகள் வேட்டையி்ல இறங்கியுள்ளனர்.
50க்கும் மேற்பட்ட ரவுடிகள் உள்பட 500 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். பழைய குற்றவாளிகள், நீண்ட காலமாக தேடப்படுவோர் உள்ளிட்டோரைப் போலீஸாகர் கைது செய்து வருகின்றனர்.
இதேபோல தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் ரவுடிகள், சமூக விரோதிகள் வேட்டை நடந்து வருவதாகவும, நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சுதந்திர தினம் வரை இது தொடரும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக