-கற்சுறா-
நாம் எதிர் கொள்ளும் சமூகத்தின் புற நிலைகளையும் பொதுமையான வாழ்வில் அடங்கிக் கொள்ளாத வாழ்வுமுறைகளையும் எவ்வாறு விளங்கிக் கொள்ள முடியும் என்றும் அதற்கான எல்லை எந்தளவு தூரம் நமக்கு விரிந்து கிடக்கிறது. என்பதையும் பேசுவதே எனது கட்டுரையின் நோக்கம்.
இங்கே அகநிலை என்பதற்குள் நான் அடக்க நினைக்கும் -நாம்- என்ற பதத்தின், சொல்லின் வன்முறை அடையாளத்தை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இதில் தற்போது நமக்கு அண்மித்திருக்கும் அல்லது நாம் பேசுவதற்கு அதிகம் நினைக்கும் ஒருபாலுறவு அதாவது தற்பாலுறவு, ஹோமோசெக்சுவல், லெஸ்பியன், என்ற இன்னோரன்ன தகமைபெற்ற வார்த்தைகளாலும் கம்பி சாப்பை சைக்கிள்  புரி ரொட்டி புல்லு வெட்டுற மிசின் என்ற மிக அதிகளவான கொச்சைத்தனமான வார்த்தைகளாலும் அழைக்கப்படுகின்றவர்கள் குறித்தே இங்கு பேசுகிறேன்.
மிக இறுக்கமான காலாசாரவழிமுறைகளாலும் தேசிய வெறியூட்டப்பட்ட சூழல்களாலும் சுற்றிவளைக்கப்பட்டுள்ள நமது சமூகத்தால் அதற்குப் புறநிலையிருக்கும் தனது தாக்கத்தை மெதுவான முறையில் உள்நுழைக்க முயற்சிக்கும் மிகப்பெரிய – அதிர்ச்சியூட்டக் கூடிய தற்பாலுறவுக் கோட்பாட்டை அல்லது ஒட்டுமொத்த புறநிலையில் இயங்கும் ஙரநநச கோட்பாட்டை எதாவது ஒரு தருணத்தில் உள்வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்குமா நமது சமூகம் என்பதை நாம் பேசத்தானே வேண்டும்.
மிக மிக அதிகமான பாலியல் இச்சைகளுடனும் மிக அதிகளவாக பெண்களில் விருப்பும் கொண்ட ஒரு ஆண் தனத்திலிருப்பதாக உணரும் கற்சுறாவாகிய நான்- தற்பாலுறவு குறித்தஅரசியலையும் அழகியலையும் அதன் உள்ளும் புறமும் இருக்கின்ற  முரண்பாடுகளையும் நாங்கள் எவ்வாறு விளங்கிக் கொள்ள முடியும், இதற்குள் எவ்வாறு உள்நுழைய முடிகிறது என்றும் பார்க்கும் எனது ஆரம்பநிலை அணுகலே இது.
பொதுவாக தமிழ் இனத்தின்; மானமாகவும் புனிதமாகவும் போற்றப்படுகின்ற ஒழுக்கம் என்ற பாலியல் சார் நடவடிக்கை மீதான கண்காணிப்பு என்பது மிக முக்கியம் வாய்ந்ததொன்று. இந்தப் பாலியல் பற்றிய கவனமென்பதே ஒவ்வொரு தனிநபரையும் அச்சப்படுத்திக் கொண்டிருக்கும் ஒன்றாக வாழ்நாள் ப+ராவும் இருந்து வருகிறது. தனிநபர்களது பாலியல் விருப்பு என்பதை எமது சமூகம் ஒருபோதும் ஒத்துக் கொள்வதி;ல்லை. அதை சமூகத்தின் விருப்பாக  ஒரு இனத்தின் விருப்பாக ஒவ்வொரு தனிநபர்கள் மீதும் திணித்து விடுகிறது. பொதுவாக கல்வி, உடை, உழைப்பு, வேலை மற்றும் அனைத்து விதமான இருத்தல்களையும் விருப்புக்களையும் சமூகத்தின் விருப்பாக நமது சமூகம் கொண்டிருந்தாலும் எதிர்பார்த்தாலும் பாலியல் பற்றிய தெரிவில் அனைத்தையும் மீறிய வன்முறையைச் செலுத்தி தனிநபர் விருப்பை நிராகரித்து விட்டு  இனத்தின் தெரிவாக சமூகத்தின் தெரிவாக முன்நிறுத்தகிறது.
புலம்பெயர் சமூகத்தில் பாலியல் பற்றிய அறிவுடனும் தெரிவின் உரிமையுடனும் நமது குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் பாலியல் பற்றிய மிக நூதனமான கண்காணிப்புக்களிலிருந்து இன்னும் விடுபடவில்லை. இங்கே இந்த இரண்டு பிரிவுக்குமிடையில் வளர்ந்து வரும் மிகப்பெரிய இடைவெளி குறித்து அதற்குள்ளிருக்கும் ஆபத்துக் குறித்து நாம் அவ்வளவு அக்கறைப்படுவதேயில்லை.
அண்மையில் கனடாவில் சாதிமாறிக் காதலித்ததற்காக காரினால் அடித்துத் தன் பிள்ளையைக் கொல்ல முயன்ற ஈழத்தமிழ்த் தகப்பன் பற்றிய சம்பவம் அறிந்திருப்பீர்கள். இதுதான் இன்று 30வருடத்தின் மேலாகப் புலம் பெயர்ந்து வாழும் நமது இனத்தவர்களது மனநிலை. இதற்குள் தற்பாலுறவு குறித்த அறிவு அல்லது புரிதல் எப்படி நிகழும் ? எங்கே சாத்தியம்?
ஆனாலும் நாம் கட்டிவைத்த புனிங்கள் நம் கண்முன்னாலேயே தகர்ந்து போய்க்கொண்டிருக்கும் காலம் இது. அத்தோடு தகர்க்க வேண்டிய காலமும் கூட. மதங்களின் பெயரால் போதிக்கப்பட்ட ஒழுக்கங்களும் விடுதலையின் பேரால் போதிக்கப்பட்ட ஒழுக்கங்களும் நீதியன் பெயரால் போதிக்கப்பட்ட ஒழுக்கங்களும்
தகர்ந்து போனதைக் கண்டுகொண்டிருக்கிறோம். ஒழுக்கத்தின் பெயரால் போதிக்கப்பட்ட பாலியல்  உறவும் அதன் மீதான கண்காணிப்பும் தகரும் தருணம் தான் அடுத்து நடக்கப்போவது.
தற்பாலுறவு பற்றிய அறிவு எதுவுமற்ற வயதில் அதாவது பதின்மங்களில் எனது கிராமத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்களால்  அவர்களின் பாலியல் இச்சைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறேன். அதாவது சிறிய வயதில் கம்பியடிக்கப்பட்டவன் நான். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் நான்  பேசுகின்ற விடையமும் அதனைப் புரிந்து கொள்ளலுக்கும் இடையே ஊடாடப் போவது இதுதான்.
to be continue