புதன், 30 மார்ச், 2011

மீண்டும் ஆங்கில அறிவில் கொடிகட்டிப்பறக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை

ஆங்கிலமொழி அறிவு மக்களுக்கு நல்வாழ்வை அளிக்கும்
இலங்கையில் சமாதானமும், அமைதியும், இன ஐக்கியமும் திரும் பிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், எங்கள் நாடு இரண்டு பாரிய சவால்களை எதிர்நோக்கியிருக்கின்றது. அதில் ஒன்று பொருளாதாரத் துறையை கைத்தொழில் மயமாக்கல் மூலமும், உணவு உற்பத்தியின் பசுமைப்புரட்சியின் மூலமும் மேற்கொள்ளவேண்டிய ஒரு பாரிய சவாலாகும். இரண்டாவது சவாலாக இருப்பது இந்நாட்டின் கல்வித் துறையை குறிப்பாக, உயர்கல்வித்துறையை மேம்படுத்துவ தற்கு மீண்டும் ஆங்கில அறிவை எமது மாணவ, மாணவிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான பெரும் பொறுப்பாகும்.
இலங்கை 1948 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை பெற்ற போதிலும், சுதந்திர இலங்கையின் நிர்வாகம் கோட் சூட், தொப்பி அணிந்த ஆங்கிலேயர் பாணியில் வீட்டிலும் ஆங்கி லம் பேசும் ஏகாபத்திய வாதிகளின் கைப்பிள்ளைகளின் பொறுப்பி லேயே விடப்பட்டிருந்தது. இதனால், அன்று தேசிய இன உணர்வு அந்தளவுக்கு வலுப்பெற்றிருக்கவில்லை.
இத்தகைய காலகட்டத்தில் பதவியிலிருந்த அரசாங்கம் மேற்கொண்ட முத லாளித்துவ கொள்கைகளினால், அன்று, வலுப்பெற்றிருந்த இடதுசாரி அமைப்புக்களின் அரசாங்கத்திற்கு எதிரான ஜனநாயக பாரம்பரியத்தி ற்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட பொது வேலை நிறுத்தங்கள் போன்ற அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உச்சகட்டத்தை அடைந்து, நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டது.
இத்தகைய சூழ்நிலையில் இலங்கையின் தேசியத்துவத்திற்கும் மக்கள் ஆட்சிக்கும் ஒரு சிறந்த அடித்தளத்தை அமைப்பதற்காக 1951 ஆம் ஆண்டில், அன்றைய அரசாங்கத்தில் தான் வகித்து வந்த சிரேஷ்ட அமைச்சர் பதவியை இராஜினாமா செய்து, முன்னாள் பிரதமர் அமரர் எஸ்.டபிள்யூ.
ஆர்.டி. பண்டாரநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஸ்தாபித்தார். அன்று, அமரர் பண்டாரநாயக்காவின் வலது கரமாக இருந்தவர் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தந்தை டி.ஏ. ராஜபக்ஷ ஆவார்.
எங்கள் நாட்டில் ஒரு அரசியல் புரட்சியை ஏற்படுத்தி, மக்கள் ஆட்சியை மலரச் செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் உயர் பட்டம் பெற்று, கோட்டும், சூட்டும் அணி ந்து, நாடு திரும்பிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, அந்த ஆடை களை களைந்தெறிந்து விட்டு, தேசிய உடையை அணிந்து, தேசிய உடைக்கு பெருமை தேடிக் கொடுத்தார்.
அவர், பஞ்சமகாசக்தியான விவசாயிகள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மகாசங்கத்தினர் மற்றும் சுதேச வைத்தியர்களின் பூரண ஒத்துழைப்பு டன் தேர்தல்களத்தில் குதித்து, மிகவும் பழைமைவாய்ந்த இலங்கை யின் முதலாவது கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை படுதோல்விய டையச் செய்து, இலங்கையில் மக்கள் அரசாங்கம் ஒன்றை உருவாக் கினார். அன்னாரது இந்த முயற்சிக்கு தற்போதைய மக்கள் ஐக்கிய முன் னணியின் தலைவரும், அமைச்சருமான தினேஷ் குணவர்த்தனவின் தந்தை பிலிப் குணவர்த்தனவும், முன்னாள் பிரதம மந்திரி கலாநிதி டபிள்யு. தஹாநாயக்கவும் உறுதுணை புரிந்தனர்.
24 மணி நேரத்தில் சிங்கள மொழியை அரச கரும மொழியாக ஏற்ப டுத்துவேன் என்று தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பத் தில் எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்க அன்று அளித்த வாக்குறுதி எமது நாட்டின் கல்வித்துறையை சீர்குலைத்ததுடன், இலங்கையில் வலு வாக நிலை கொண்டிருந்த தமிழர் மற்றும் சிங்களவர்களுக்கு இடையி லான நட்பு பாலத்தையும் சின்னாபின்னமாக்குவதற்கு அடித்தளமாக அமைந்தது.
வாகனங்களுக்கு சிங்களத்தில் ஸ்ரீ சின்னத்துடனான இலக்கங்களை கொடு க்கும் முறையை நடைமுறைப்படுத்தியதும், நாட்டின் இன ஐக்கியம் சீர்குலைவதற்கு அன்று, அடித்தளமாக அமைந்தது.
பிரதம மந்திரி எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்க தமது ஆதரவாளர் களை திருப்திப்படுத்துவதற்காக, சுயபாஷை கல்வியை நாடெங்கிலுமு ள்ள பாடசாலைகளில் தீவிரமாக அமுலாக்க ஆரம்பித்தார். இது ஆர ம்பித்தது முதல் இலங்கையில் ஆங்கிலக்கல்விக்கு நிரந்தர பாதிப்பு ஏற்பட்டது.
1956ற்கு பின்னர் குறிப்பாக சொல்வதானால் 1960 ஆம் ஆண்டிற்கு பின் னர் பல்கலைக்கழகங்களுக்கு செல்வோரினதும் பட்டம் பெற்று சமூக த்தில் சங்கமிப்பவர்களும் போதியளவு ஆங்கில அறிவு அற்றவர்க ளாக இருப்பதற்கு இந்த சுயபாஷை கொள்கையும் ஒரு பிரதான கார ணமாகும். இதனால், இலங்கைக்கு பாரம்பரியமாக வெளிநாடுகளில் இருந்து வந்த மதிப்பு குறைய ஆரம்பித்தது. அன்று, இலங்கைப் பல் கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஒருவருக்கு வெளிநாட்டில் எவ்வித பிரச்சினையின்றி, உடனடியாக உயர்பதவிகளை பெறுவதற்கான வாய்ப்பு காத்திருந்தது.
1956ஆம் ஆண்டிற்கு முன்னர், ஓரே வகுப்பில் தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கி இன மற்றும் மலாய் இன, சீன இன மாணவர்களும் சகோதரர் களாக அமர்ந்து கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு இருந்தது. அதனால், அன்று, இந்நாட்டு மக்களிடையே இன பேதமோ, மத பேதமோ, பிர தேச பேதமோ இருக்கவில்லை. தமிழ் அல்லது சிங்கள பாடத்திற்கு மாத்திரமே இந்த ஒரு வகுப்பு மாணவர்கள் பிரிந்து வெவ்வேறு வகு ப்புகளுக்கு சென்றார்கள்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் நாட்டில் கல்வித்து றையை மேம்படுத்தி, ஆங்கில கல்வியின் முக்கியத்துவத்தை எமது பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நிலைகொள்ளச் செய் வதற்கு இப்போது நல்ல பல திட்டங்களை வகுத்திருக்கிறார். அவரது இந்த முயற்சி பூரண வெற்றி பெற்று, நம்நாட்டு மக்கள் மீண்டும் ஆங்கில அறிவில் கொடிகட்டிப்பறக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்ற நற்செய்தியை ஞாபகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை: