ஞாயிறு, 21 மார்ச், 2010

தமிழ் பிரதிநிதித்துவம் பறிபோகப்போகிறது

தமிழ் பிரதிநிதித்துவம் பறிபோகப்போகிறது,பறிபோகப்போகிறது தமிழ் வாக்காளர்களே விழிப்பாக இருங்குள் என்று கூப்பாடு போட்டு தமிழ் மக்களின் பரந்த சிந்தனையை கட்டிப்போடும் வேலையை சில ஊடகவியலாளர்கள் செயு;து வருவதுதான் கவலையான விடயமாகும். ஒரு ஊடகவியலாளன் என்பவன் அரசிலுக்கு அப்பாற் பட்டவன் அப்படி அவன் அரசியல் சாயத்துடன் எழுத முற்பட்டானானால் ஒரு ஊடகவியளாளனாக இருக்க முடியாது.அவனிடம் மனிதநேயம் இருக்க வேண்டும், அநியாயம் எவன் செய்தாலும் தங்களது பேனாவை செய்பவனுக்கு எதிரான  ஆயுதமாக  அதனை பாவிக்கவேண்டும். .

ஒரு அரசியல் கட்சியில் உள்ளவர் போல் அவர்கள் தொடர்ந்தும் எழுதுவதன் மூலம் அவர் இன்ன கட்சியின் ஊடகவியலாளர், அவர் எழுதினால் அப்படித்தான் எழுதுவார், பேசினால் அப்படித்தான் பேசுவார்.அவரை ஒரு நியாயமான, நடுநிலையான ஊடகவியரலளர் என எடுத்துக் கொள்ள மனம் இடம் கொடுக்கப் போவதில்லை

இலங்கையில் இனவாதம் உள்ளது, தமிழர்கள் காலம் காலமாக இரண்டாம் தர பிரiஐகளாக நடத்தப்படுகிறார்கள், அதனால் அகிம்சை ஆயுதமாக மாறி இப்போ மீண்டும் அகிம்சை வழிதான,; வேறு வழி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏன் இலங்கையில் ஒற்றுமையும் நியாhயத்தன்மையும் இல்லை என்பதே ஆகும்.

ஒரு நாட்டில் ஐனநாயகம் nஐhலிகக் வேண்டும் அதற்கு பல கட்சி அரசியல் என்பது இருக்க வேண்டும் ஒரு கட்சிதான் என்ற நிலை இருந்தால் அந்நாட்டில் ஐனநாயகம் வளர வாய்ப்புகள் குறைவாக இருக்கும். தற்போது நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலில் பலகட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் என்பன போட்டியிடுகின்றன இது ஐனநாயகம் வளர ஒரு வடிகாலாக அமையலாம்.

தமிழர்கள்  ஏதாவது ஒரு தமிழ் கட்சிக்கு போடவேண்டும் ஊடகவியலாளர்கள் அப்படி எழுதினாலும் அவர்களது விருப்பம் தமிழ் தேசிய கூட்டமைப்பாகத்தான் இருக்கிறது.(அது தான் தமிழர்களின் விடுதலைக்கு பாடுபடுகிறதாம்) அதற்கு போட்டாலே தமிழர்கள் பிரதிநிதித்தவம் காக்கப்படும், சிங்களவர் பெரும்மைபான்மையாக உள்ள சிங்கள கட்சிக்கோ, முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள முஸ்லீம் கட்சிக்கோ வாக்களிக்கக் கூடாது,  என்றும் ஊடகவியலாளர்கள் சிலர் எழுதிவருவதில் எந்தளவு நியாயங்கள் இருக்க முடியும். அவர்கள் (ஒரு ஊடகவியலாளன்) அப்படி எழுதலாமா? இதன் மூலம் இனங்களுக்கிடையே ஒற்றுமை வளருமா, ஒற்றுமையில் குரோதத்தை ஏற்படுத்தாமல் சகஐநிலமையை ஏற்படுத்துவதும் ஒரு ஊடகவியலாளனின் தலையாய கடமை அல்லவா? இலங்கையில் இன முரன்பாடு என்பது வளர்ந்து இருக்கிற நிலையில் அதை தணிக்க நாம் பாடுபட வேண்டும். தமிழர்களின் கட்சி, முஸ்லீம்களின் கட்சி, சிங்களவர்கள் கட்சி என்று பாhப்பதே ஒரு தப்பான விடயமாகும்.

இலங்கையில் பிரதான கட்சிகளான ஐக்கியதேசியகட்சியில், சிறிலங்கா சுதந்திரகட்சியில் காலம் காலமான தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். தமிழரசுகட்சி தூண், ஐக்கியதேசிய கட்;சி தூண், சிறிலங்கா சுதந்திரக்ட்சி தூண் என்று ஊர்களில் இருந்தவர்கள் அந்த நாட்களில் சொல்லும் வார்த்தை நினைவுக்கு வருகிறது. 1983க்கு முன்னர் தேர்தல் வந்தால் தமிழர்கள் வீடுகளில் தங்களுக்கு விருப்பமான கட்சிகளின் வண்ணங்களை தங்களது வீடுகளின் ஐன்னல், கதவு என்பவற்றில் துணிகளாக போடுவதும், தமிழ் அரசு கட்சி தொண்டன் பச்சை, மஞ்சல் சிவப்பு கலரில் சட்டை அணிவதும (எங்கள் ஊரில் ஒருவர் தைத்து போட்டது ஞாபகத்துக்கு வந்தது அவர் ஒரு கூட்டணி தூண்) இயல்பானது அது அவர்களின் ஆர்வம் சம்பந்தமானது அதில் ஒருவர் இன்னொருவர் மீது களங்கத்தை ஏற்படுத்தக் கூடாது.

இலங்கை, இனிவரும் நாட்களில் பிரதேச கட்சிகளும்,  தேசிய கட்சிகளினதும் சங்கமாகவே இருக்கும். தேசிய கட்சியில் இருப்பவன் காட்டிக்கொடுப்பவனுமல்ல, பிரதேச கட்சியில் இருப்பவன் தேசத்துரோகியுமல்ல  அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
தமிழ் பிரதிநிதி;துவம் பறி போகிறது, பறி போகிறது எனச் சொல்லும்,எழுதும் ஊடகவியலாளர்களின் கருத்துகளைப் பார்த்தால் தமிழ் மக்கள் எல்லோரும் தமிழ் தேசிய கூடு;ட்டமைப்பின் பின்னால் நிற்கவேண்டும் என்றே கூறுகிறார்கள் போல, அப்போதான் தமிழர்களுக்கு கூட்டமைப்பினர் சுயநிர்ணய உரிமைக்காக போராடுவார்கள்,  அவர்களது போராட்டம் உலகம் அறிந்ததே

இம்முறை சுயேட்சைக் குழுக்கள் அதிகமாக களத்தில் இறங்கியுள்ளது. இது நல்லதொரு ஆரம்பம் என்றுதான் பார்க்க வேண்டியுள்ளது. இதைத்தான் மேலே குறிப்பிட்ட ஐனநாயகம் வளர நல்லதொரு வடிகால் என குறிப்பிட்டேன்.
 


கருத்துகள் இல்லை: