சனி, 6 மார்ச், 2010

நித்தியானந்தாவிடமிருந்து மீட்டுத்தாருங்கள்:புலிகள்"இயக்க பாணி"யில் அமைந்த சுவாமி நித்தியானந்தாவின் திருவிழையாடல்கள்!!
நித்தியானந்தாவிடம் கல்வி கற்க சென்ற தனது மகன் திரும்பி வரவில்லை என்றும், மகனோடு தொடர்பு கொண்டு பேச முடியவில்லை என்றும் திருச்சி அருகே உள்ள நவலூர் புட்டப்பட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர் இடும்பன் கூறியுள்ளார்.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளரிடம் பேசிய இடும்பன், திருச்சியில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் இருக்கும் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். ஓய்வு பெற்ற தமிழாசிரியரான எனக்கு 4 பெண்கள், ஒரு மகன். எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், இதே ஊரைச் சேர்ந்த சித்த மருத்துவர் கோவிந்தராஜன் என்பவர் மூலம் நித்தியானந்தா சாமியாரிடம் அறிமுகமானேன்.
எனது மகன் சுரேந்தரை, பெங்களூரில் உள்ள நித்தியானந்தா சாமியாருக்கு சொந்த மான "லைப் ப்ரீவ் டெக்னாலஜி" என்ற இலவச படிப்புக்கு அனுப்பினேன். பெங்களூரில் படிக்கும் பையனையும், சாமியாரையும் மாதம் ஒருமுறை நான் சந்தித்து வந்தேன். அப்போது நவலூர் புட்டப்பட்டு கிராமத்தில் ஆசிரமம் ஆரம்பித்தால், உங்களைப் போல் நிறையபேர் பயன் பெறுவார்கள் என்று யோசனைகளை சாமியார் கூறினார்.

சாமியார் பேச்சைக் கேட்டு ரூ.10 இலட்சம் மதிப்புள்ள இடத்தை ரூ.4 இலட்சத்துக்கு எனது மருமகனிடம் இருந்து வாங்கினேன். இதற்கு சாமியாரின் பக்தரான அமெரிக்காவைச் சேர்ந்த தனுஷ்கோடி என்பவர் பணம் கொடுத்தார். அந்த ஆசிரமத்துக்கு என்னை செயலாளராக நியமித்தார் நித்தியானந்தா. நித்தியானந்தா மீது நம்பிக்கை வைத்து எனது சொந்த பணத்தில் ஒன்றரை இலட்ச ரூபாய் செலவு செய்து பாதி ஆசிரமம் கட்டி விட்டேன்.
ஆசிரமம் ஆரம்பித்த சிறிது நாட்களில், அப்பகுதியில் முகாம்கள் அமைக்க பணம் வசூல் செய்யுமாறும், ஆசிரமத்தில் செயலாளராக உள்ளவர்கள் கண்டிப்பாக பணம் வசூலீக்க வேண்டும் என்றும் சாமியார் கட்டளையிட்டார். மேலும், தன்னை சந்திக்க பக்தர்கள் விருப்பப்பட்டால் அவர்களிடமும் பணம் வசூலிக்கும்படியும் அவர் சொன்னார். அப்போதுதான் எனக்கு இவர்கள் ஆசிரமம் நடத்தவில்லை பிசினஸ் செய்கிறார்கள் என்பது தெரிந்தது. இந்த விஷயத்தை என் மகனிடம் சொல்ல முயற்சித்தேன். அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை.
திருச்சியில் கடந்த 2009ஆம் வருடம் ஆகஸ்ட் 1ஆம் திகதி சாமியார் முகாமிட்டு, ஆசிரமம் செயலாளர்களை அழைத்து கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில், பணம் வசூல் செய்யுமாறு நன்கொடை ரசீது கொடுத்தார். நான் அதை வாங்க மறுத்தேன். அப்போது அத்தனை பேரின் மத்தியில் என்னை "வெளியே போ..' என்று அவர் கத்தினார்.
ட்டத்தை விட்டு வெளியே வந்த நான் எனது மகன் சுரேந்தரை தொடர்பு கொண்டேன். ஆனால் பேச முடியவில்லை. தொடர்ந்து போன் செய்தபின் ஒருநாள் சுரேந்தர் பேசினான். அப்போது சாமியாருடைய நோக்கம் பணம் சம்பாதிப்பதுதான் என்றான். அதற்கு நீ அங்கே இருக்காதே, வந்து விடு என்று சொன்னேன். ஆனால் சுரேந்தர், நான் சாமியாரிடம் தான் இருப்பேன் என்றும், என்னை பார்க்க வராதீர்கள் என்றும் கூறினான். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த நான் பெங்களூருக்கு நேரில் சென்று எனது மகனை பார்க்க முயற்சித்தேன். ஆனால் அங்கிருப்பவர்கள் சுரேந்தரை பார்க்க அனுமதிக்கவில்லை என்றார்.
தற்போது சுரேந்தர் தன்னுடைய பெயரை மாற்றி, நித்யபிரபானந்தா என்று வைத்துக் கொண்டதாகவும், நித்தியானந்தா போல நீண்ட முடிகளை வளர்த்துக்கொண்டதாகவும் கூறுகிறார் இடும்பன். எப்படியாவது எனது மகனை சாமியார் நித்தியானந்தாவிடம் இருந்து மீட்டுத் தாருங்கள் என்று கண்ணீர் விடுகிறார் இடும்பன்.

கருத்துகள் இல்லை: