ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

கனடாவில் இலவசமாக வெளியிடப்படும் உதயன் பத்திரிகை அலுவலகம்தாக்கப்பட்டதை கண்டித்தும் கருத்துசுதந்திரத்தை வலியுறுத்தியும்தேடகத்தினால் கண்டன கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டிருந்தாலும் குறிப்பாக ஊடகவியலாளர்கள்என்று ஒரு சிலரே கலந்து கொண்டதுடன்இ உதயன் வாசகர்கள் என்றும்கலந்து கொண்டவர்களைக் காணக்கூடியதாக இல்லை. குறிப்பாக தேடகஅமைப்பை சேர்ந்தவர்களுடன், திரு கனகமனோகரன் அவர்கள், திரு. கனகசபாபதி, அவர்கள், திரு. கந்தவனம் அவர்கள் முக்கியமாக கலந்துகொண்டனர். இது உதயன் ஆசிரியர் கடந்த காலங்களில் விட்ட தவறுகள், ஊடகத்தன்மையை புதைகுழி தோண்டி புதைத்தமைக்கு ஓர் மக்களின்தீர்ப்பா அல்லது என்ன நடந்தாலும் நமக்கேன் வம்பு, இலவச பத்திரிகைஉதயன் ஆசிரியர் ஆச்சு, அவர் வளர்த்தவர்கள் இன்று அலுவலகத்தைஉடைப்பார்கள், நாளை ஒன்று சேர்வார்கள் என்றோ, தெரியவில்லை.

இங்கு உரையாற்றிய இன்னொரு புலியின் குரலான "கீதவாணி" நடா. இராஜ்குமார் அவர்கள் பேசும்போது குறிப்பிடார், "இங்கு ஆறுவானொலிகள், பதினைந்திற்கு மேற்ப்பட்ட பத்திரகைகள், பல சஞ்சிகைகள், பல இணைய தளங்கள் இருந்தாலும் ஒருவரும் இங்கு இல்லை". இதில்இவரின் ஆதங்கம் தெரிந்தது. மேலும் அவர் பேசும்போது தனது நிலையைவிளக்கும் பொது, தான் புலிப்பாட்டு பாடி இவ்வளவு நாளும் இருந்ததை, "ஒவ்வொரு மனிதனிற்கும் ஒவ்வொரு கொள்கை விருப்பு, வெறுப்புஉள்ளது" என்பதி சூசகமாக எடுத்துரைத்துடன், தான் உதயன் ஆசிரியரைஉடன் பேட்டி கண்டு தனது வானொலியில் போட்டதற்கு தனக்கு பலஅச்சுறுத்தும் தொலைபேசிகள், மின்னஞ்சல்கள் வருவதாகவும், அத்தொலைபேசி எண்களை தன்னுடன் தற்போதும் வைத்திருப்பதாகவும், இப்படி அச்சுறுத்தல்களுக்கு கனடாவில் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்என்பதயும் நினைவுபடுத்தி ஊடக
சுதந்திரத்தை வலியுறுத்தினார்.

அடுத்ததாக உரையாற்றிய Canadian Tamil Broadcasting Corporation (CTBC ) னின்புலிக்குரல் "தென்புலோலியூர்" கிருஸ்னலிங்கம், "ஊடக சுதந்திரம்; ஜனநாயகம்; கருத்தை கருத்தால் சந்திக்க வேண்டும்" என்றுவலியுறுத்தியதுடன், "வன்முறையால் சந்தித்ததை நந்திக்கடலில்பார்த்தோம்" என்று கூறியதுடன், உதயன் பத்திரிகை அலுவலகத்தைதாக்கியவர்கள் இன்னும் யார் என்று தெரியவில்லை (இனம்-தெரியாதவர்கள்) என்று குறிப்பிட்டதுடன், "இந்த அமைதி பூங்காவை குழப்பபோகிறோமா? கனடிய பாதுகாப்பு அமைச்சரே பாதுகாப்பு இல்லாமல் உள்ளார்", என்றுகுறிப்பிட்டு இவரும் யார் அலுவலகத்தை தாக்கியவர்கள் என்பதைசொல்லாமல் நழுவிவிட்டார்.

இதன்பின் உரையாற்றிய தமிழர் விடுதலை கூட்டணியின் மூத்தஉறுப்பினரும், பொதுநலவாதியும், சட்டத்தரணியுமான திருகணகமனோகரன் அவர்கள் பேசும்போது, தனது அனுபவங்களை, தான்சந்தித்தவைகளை நினைவு கூறுமிடத்து, தனது பன்னிரண்டு வருட பழையகாரை புது கார்களில் திரிபவர்கள் உடைத்ததையும், ஓர் முறை தனதுஆக்கம் ஒன்று உதயனில் வந்ததையிட்டு தான் உதயன் அலுவலகத்திற்குதொடர்பு கொண்ட போது, உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கத்தின்மனைவி தொலைபேசியை எடுத்தவிடத்து, தான் லோகேந்திரலிங்கத்தைகேட்க, "அவர் வெளியில் நிற்கிறார், உலகத்தமிழர் பிரதம ஆசிரியர் கமல்வெளியே கூட்டிக்கொண்டே கதைக்கிறார்" என்றும் தனது ஆக்கத்தால்உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அச்சுறுத்தப்பட்டதை நினைவுகூர்ந்ததுடன், ஓர் சுவாரசியமான... உண்மையான விடயம் ஒன்றும்பகிர்ந்தார் அதாவது தான் ஈழவேந்தன் அவர்களை சந்திக்கும் பொது "அமிரின்சிலையையும் உடைத்துப் போட்டான்கள்" என்று சொல்ல, "அமிருக்கு எங்கேசிலை இருந்தது?" என்று ஈழவேந்தன் கேட்டாராம்.

கடைசியாகப் பேசிய உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம், தனது ஆரம்பபத்திரிகை துறையை நினைவு கூர்ந்தவிடத்து, எண்பதுகளில்ஈழத்திலிருந்து வெளிவந்த தனது "மாற்று" சஞ்சிகை பற்றி கூறுமிடத்து, அக்காலத்தில் விடுதலை அமைப்பினர் தனது சஞ்சிகை வாங்குவதுமட்டுமல்லாமல் இந்தியாவிற்கும் வள்ளத்தில் கட்டிஅனுப்புவார்களேன்ரும் ஒரு முறை, கிட்டு தலைமையிலானவர்கள் TELO வை அடிக்கும் போது TELO வினர் இருந்த ஓர் வீட்டில் "மாற்று" சஞ்சிகைஇருப்பதை பார்த்துவிட்டு தன்னை விசாரித்தவிடத்து, அப்போ நல்லூருக்குபொறுப்பாக இருந்தவர், "இது ஒரு சஞ்சிகை இவரை விடுங்கள்" என்றுகேட்டதற்கு இணங்க கிட்டு விட்டதை நினைவு கூர்ந்து, அவ் நல் மனிதர்தற்போது கனடாவில் இளம் சட்டத்தரணியாக இருப்பதையும் நினைவுகூர்ந்தார்.

மேலும் அவர் பேசும் பொது இன்று தனது அலுவலகம் உடைக்கப்பட்டது, கருத்திற்க்காக வில்லை என்றும், வர்த்தகப் போட்டியாலேயே என்றும்கூறியதோடு, தனக்கு ஓர் விளம்பரம் 1000 டொலருக்கு எடுக்கக்கூடியதாகஉள்ளதென்றால், மற்றவர்கட்க்கு 100 டொலருக்கு எடுக்கக்கூடியதாகஉள்ளது என்று கூறியதுடன், "பலர் இங்கு வரவில்லை; பலர்சமூகமளிக்கவில்லை; ஊடகம் புனிதமான தொழில்; ஊடகம் அறிவோடுசம்பந்தப்பட்டது; ஆனால் இங்கு ஒருவரும் இல்லை" என்று தனதுஆதங்கத்தை கூறினார்.

அத்துடன் தனது அலுவலகம் உடைத்ததை சொல்லும் போதும், இனம்-தெரியாதவர்களேன்றே அப்படியே அதை விட்டதுடன், உலகத்தமிழர்பத்திரிகை பிரதம ஆசிரியர் கமலுடன் தான் தொடர்பில் உள்ளதாகவும், தினசரி பேசுவதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது, வயிற்றுவலி தனக்கு தனக்குவந்தால் தான் தெரியும்" இங்கு உரையாற்றிய உதயன் ஆசிரியர்லோகேந்திரலிங்கம் உட்பட மூன்று ஊடகவியலாளர்களும் இதுவரை இங்குபுலம் பெயர்ந்த நாட்டில் வாழும் மக்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளைப் பற்றி ஓர் தவறானா செய்தியை கொடுத்தது மட்டுமல்லாமல்ஓர் மாயையை உருவாக்கி வைத்ததற்கு பெரும் வகித்துள்ளார்கள். அத்துடன்இவர்களுக்கு இன்னும் ஒன்று விளங்க வேண்டும், இங்குஜனநாயகத்திக்காக குரல் கொடுக்க சக பத்திரிகயர் ஒருவரும்இக்கூட்டத்திற்கு நேரடியாக சமூகமளிக்கவில்லை என்பதையும், தமக்குமக்கள்.... வாசகர்கள் மத்தியில் இருக்கும் மரியாதையும். இன்று உதயன்ஆசிரியர் லோகேந்திரலிங்கம் உட்பட மூன்று ஊடகவியலாளர்களும்புரிந்திருக்கும், தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களை அழைத்திருந்தால்வயது வித்தியாசமின்றி கூட்டம் அலை மோதியிருக்கும்.

இச் சம்பவத்திற்கு ஒரு மாதம் முன் இதே Canada , Toronto வில் 1982 ம் ஆண்டுயாழ் சித்திரா அச்சகத்தில் வைத்து இதே அமைப்பின் தலைவரால் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்-சுழிபுரம் "புதியபாதை" ஆசிரியர், சதாசிவம்சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) அவர்களின் 28வது நினைவு தினத்தைமுன்னிட்டு, ஜனவரி 16ம் திகதி தமிழ் ஊடகத்துறையினர் மத்தியில்விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகஊடகங்களின் தவறான செய்திகள், ஆய்வுகள் உரிமை போராட்டத்தை எவ்வளவு தூரம் பின் நகர்த்தியுள்ளதுஎன்ற கருப்பொருளில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தது. இக்கருத்தரங்கிற்கு எத்தனை ஊடகவியலாளர்கள் சமூகமளித்திருந்தார்கள்என்பது கேள்ளிவிக்குறியே.

ஆனால் அக்கருத்தரங்கு ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவர் புளொட்உறுப்பினர் திரு. நிலாநேசன் அவர்கள் இக்கண்டனக் கூட்டத்தில்சமூகமளித்திருந்தது காணக்கூடியதாக இருந்தது.

மேலும் தேடகம் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இவ் உதயன்பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்தும் கருத்து சுதந்திரத்தைவலியுறுத்தியும் கண்டன கூட்டம் பலரின் ஊடகங்களுக்கானஅடக்குமுறைகள், ஜனநாயகத்திர்க்கான மறுதலிப்புகள் முதலியவற்றின்கருதுப்பரிமாறல்களுடன், மே 18 இன் பின் நடந்த முதல் ஊடகத்திற்கெதிரானதாக்குதல் என்று பேசப்பட்டதுடன் முன்பு உதயன் பத்திரிகை போன்றுமஞ்சரி பத்திரிகை ஆசிரியர் தாக்கப்பட்டு அப்பத்திரிகை தடைசெய்யப்பட்டதையும், "தாயகம்" பத்திரிகை தடை செய்யப்பட்டதையும்நினைவு கூர்ந்தார்கள்.

இதிலிருந்து உண்மையை உண்மையாக எழுதாமல், உண்மைகளை மறைத்து, திறுத்தி எழுதும் ஊடகவியாளர்கள் இனியாவது திருந்துவார்களா?

ஊடகம் என்பது, மக்களுக்காக; மக்களுக்கு செய்தியை சொல்வதற்காக; ஊடகங்கள் மக்களின் ஓர் அங்கம்; காலையில் எழுந்தவுடன் தினசரிபத்திரியையில் என்ன தலைப்பு செய்தி என்று பார்க்கிறோம்; தொலைக்காட்சியில் என்ன செய்தி என்று உடன் பார்க்கிறோம்; வானொலியை திருகி என்ன செய்தியென்று கேட்கிறோம்; ஊடகங்களையேநம்புகிறோம்; இன்று இப்பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதற்கு தனியதமிழ் ஊடகங்களோ, கனடிய ஊடகங்களோ குரல் கொடுக்கவில்லை, ஊடகதர்மத்திர்க்காக அனைத்து ஊடகங்களும் குரல் கொடுத்துள்ளன. இவற்றைஉண்மைகளை திரித்து எழுதும் உதயன் பத்திரிகை போன்றவர்கள்இத்தருணத்திலாவது உணர்ந்து திருந்துவார்களா?

எல்லாவற்றிக்கும் மனிதாபிமானமும்; மனித நேயமும் வேண்டும்!

- அலெக்ஸ் இரவி.

மேலும் தொடர்பான முன்னைய செய்திக்கு:
http://www.athirady.info/archives/62056
http://www.athirady.info/archives/59404

கருத்துகள் இல்லை: