ஞாயிறு, 28 ஜூலை, 2024

செவிலியர் லோகநாயகி அவர்களை பணி நீக்கம் செய்து உத்தரவு

May be an image of 1 person and text

Vel Mohandas : கோவை மாவட்டத்தில் செவிலியர் உரிமைகளை மீட்க தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அடிப்படையில் செவிலியரும்... இடைநிலை சுகாதார பணியாளருமான(MLHP NURSE)
செவிலியர் லோகநாயகி அவர்களை பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளது வருந்தத்தக்கது....
மேலும் செவிலியர்கள் உரிமைகளை மீட்டெடுக்க போராடுபவர்களுக்கு இது தான் முடிவு என்றால் *செவிலியர்கள் உண்மையில் அடிமைகள்* தான் என்று இந்த அதிகாரிகள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.....
அவரின் பணி‌நீக்கத்தை எம் ஆர் பி செவிலியர்கள் நலச் சங்கத்தின் சார்பில் *வன்மையாக கண்டிக்கிறோம்*...
பணி நீக்க ஆணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்....
சமூக நீதியை நிலைநாட்டவும் , பெண் செவிலியர்கள் உரிமைகளை பேசி மீட்டெடுக்கவும் இந்த அரசு துணை நிற்கும் என்று நம்புகிறோம்! 

நன்றி
இவண்
*தமிழ்நாடு அரசு எம் ஆர் பி செவிலியர்கள் நலச் சங்கம்*

நிர்மல் குமார்   :  கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியில் ஒப்பந்த பணி அடிப்படையில் செவிலியராக பணிபுரிந்து வந்த #லோகநாயகி Loganayaki Lona அவர்களை பணி நீக்கம் செய்துள்ளீர்.
எதனால் செய்தீர்கள்?,
யார் பேச்சைக் கேட்டு செய்தீர்கள்,
செவிலியர் பணியை அர்ப்பணிப்போடு செய்து வந்ததற்கு அரசு கொடுக்கும் தண்டனையா?, திராவிட மாடல் அரசு சொல்லும் சுயமரியாதை , சமத்துவம் சகோதரத்துவத்தை வாழ்வியலாகக் கொண்டு பணியாற்றுபவர் தான் லோகநாயகி.
வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியில் வாழும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆரம்ப சுகாதார நிலையத்தை  நாடியவர்களிடம் லோகநாயகி அவர்களைப் பற்றி சான்றிதழ்களை கேளுங்கள். தருவார்கள்..
அந்த மக்கள் தான் தரவும் வேண்டும்.
அதை விடுத்து மக்களுக்கும் பணியாளர்களுக்கும் அரசு தரும் பணத்தை திருடி அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி கொண்டிருக்கும் சில மேலதிகாரிகளின் பிழைப்புக்கு இடையூறாக லோகநாயகி இருக்கிறார் என்பதால் புகார் கொடுத்தார்கள் .
ஆர்ப்பாட்டம் செய்தார்கள்..
ஆனால் கள நிலவரம் உண்மையா? பொய்யா?
என்று விசாரித்தீர்களா? அநியாயமாக ஒரு முன் மாதிரியான செவிலியரை இப்படி பணிநீக்கம் செய்து விட்டீர்களே .
"கடைசியாக நடந்த சட்டமன்ற உரையில் மருத்துவர் MLA எழிலன் அவர்கள் கூறியது போல் நம் திட்டங்களை செயல்படுத்துவதில் அக்கறையுள்ளவர்களை நியமித்தால்தான் அந்த நல்ல திட்டங்கள் முறையாக நடக்கும் என்று பேசினார்..
பணி நீக்கத்தை ரத்து செய்து லோகநாயகி அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தி ஏராளமான லோகநாயகிகளை உருவாக்கி ஏழை எளிய மக்களின் நலனை மேம்படுத்துங்கள். மேம்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன்..
நிர்மல் குமார் தோழரின் பதிவு..

 

கருத்துகள் இல்லை: