புதன், 31 ஜூலை, 2024

இலங்கைக்கு கடத்தப்பட்ட திரைப்பட காப்பிகள்! - இயக்கங்களின் முன்னோடிகளான கடத்தல் பேர்வழிகள்!

ராதா மனோகர் : இலங்கையில் 1970 ஆம் ஆண்டு   மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பதவிக்கு வந்த ஸ்ரீ மாவோ அம்மையாரின் பதவிக்கு வந்தார்
இவரது ஆட்சியில் இலங்கை திரைப்பட வளர்ச்சிக்கு என  சில புதிய நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டன .
அதில் முக்கியமான விடயம் தமிழக திரைப்படங்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தியமை ஆகும் 

May be an image of 2 people, people smiling and text
May be an image of 1 person and text


ஏழெட்டு பிரதி முதல் சுமார் பதினைந்து பிரதிகள் வரை அப்போது இறக்குமதி ஆகிக்கொண்டிருந்த திரைப்பட பிரதிகளை வெறும் மூன்று பிரதிகளாக கட்டுப்படுத்தினார்
இதன் மூலம் உள்ளூர் திரைப்படங்களின் வெளியீடுகளுக்கு போதிய திரை அரங்குகள் கிடைத்தன.
அந்நிய செலாவணியை மீதப்படுத்துதல் போன்ற பல நோக்கங்களை கொண்டு இந்த கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது.
எந்த கட்டுப்பாட்டையும் உடைத்தெறியும் சட்டவிரோதிகள் சும்மா இருப்பார்களா?
இந்த பின்னணியில் எனது பழைய பதிவு ஒன்றை இங்கு மீள் பதிவு செய்கிறேன்.


   
இலங்கை தமிழர்களின் போராட்டம் பற்றி நடுநிலையில் நின்று ஆய்வு செய்தால் அது பலருக்கும் கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும்.
ஆனாலும் வரலாறு முக்கியம் அல்லவா?
புலிகள் இயக்கத்திற்கும் எம்ஜியாருக்கும் ஏற்பட்டதொடர்புகள் பற்றிய தெளிவான விபரங்கள் ஊடகங்களில் பெரிதாக வரவில்லை.
எம்ஜியாருக்கு இலங்கையில் பல நண்பர்கள் இருந்தார்கள் .
 வெளிப்படையாக தெரிந்தவர்கள் சிலர் மட்டுமே!
புலிகளோடு எம்ஜியாருக்கு ஏற்பட்ட விசேட தொடர்புக்கு இலங்கையில் எம்ஜியாரின் திரைப்படங்களை  விநியோகம் செய்தவர்களும் ஒரு முக்கிய காரணியாக இருந்திருக்கிறார்கள் ..
இலங்கையில் மூன்று பெரிய திரைப்பட நிறுவனங்கள் இருந்தன .
நான்காவதாக ஒரு தியேட்டர் முதலாளியும் சிறு சிறு படங்களை வாங்கி திரையிட்டு கொண்டிருந்தார்.
அவர் எம்ஜியார் மிக நெருங்கியவர்  என்று அறியப்பட்டு இருந்தவர்.
எம்ஜியார் சுடப்பட்டு மருத்தவ மனையில் இருந்தபோது அருகில் சென்று பார்த்தவர்.    அது மட்டுமல்ல காவல் காரன் படத்திற்கு ஒரு அட்வான்ஸ் தொகையையும் தந்தவர்.
 
அவருக்கும் எம்ஜியாருக்கும் இடையில் ஏற்பட்ட தொடர்பினால் எம்ஜியார் பெரிய மூன்று விநியோகஸ்த்தர்களையும் தவிர்த்து விட்டு தனது பிரமாண்ட வெற்றி படங்களின் விநியோக உரிமையை இந்த சிறு தியேட்டர் முதலாளிக்கு கொடுத்தார்.
ஸ்ரீமாவோ ஆட்சிகாலத்தில் தமிழ் படங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
அதுவரை ஏழு முதல் பத்து பிரதிகள் வரையில் இறக்குமதி செய்து கொண்டிருந்தவர்கள் இனி மூன்று பிரதிகள மட்டுமே இறக்குமதி செய்யலாம் என்று உத்தரவு பிறப்பிக்க பட்டது.
பெரிய இக்கட்டில் தியேட்டர் முதலாளிகள் சிக்கினார்கள். ஏழு எட்டு பிரதிகள் ஓடவேண்டிய இடத்தில வெறும் மூன்று பிரதிகள் மட்டுமே!
அவை மீண்டும் மீண்டும் ஓடி களைத்து காய்ந்து அறுந்து பீஸ் பீசாக பிய்ந்து ஒட்டி காட்ட வேண்டிய நிலையில் இருந்தது.
இந்த இக்கட்டில் இருந்து மீள்வதற்கு தியேட்டர் முதலாளிகளுக்கு கள்ளகடத்தல்காரர்கள் பேருதவி புரிந்தனர்.
சாதாரண படங்களை மூன்று பிரதிகள் மட்டுமே ஒருவாறு ஓடி முடிந்தன.
பிரமாண்ட வெற்றி படங்கள்ன் பிரதிகள் அதிகம் தேவைப்பட்டது.
பழுதடைந்த பிரதிகளை அப்படியே மறைத்து விட்டு அதே இடத்தில்  கள்ளகடத்தல் வள்ளங்களில் வந்து சேரும் புத்தம் புது   பிரதிகளை கொண்டு படம் காட்டினார்கள் .

இதில் குறிப்பாக எம்ஜியார் படங்கள்தான் அதிகம் தேவை பட்டனவாக இருந்தது.
காவல்காரன் ஒளிவிளக்கு  நீரும் நெருப்பும்.போன்ற படங்கள் இப்படியாக கள்ளக்கடத்தல் காப்பிகள் வந்து சேர்ந்ததாக செய்திகள் உண்டு.
மேற்குறிப்பிட்ட மூன்று படங்களும் அந்த புதிய விநியோகஸ்தர் படங்களாகும்.
வழமையான பெரிய நிறுவங்களில் ஒன்றான சினிமாஸ் லிமிடெட்டின் குமரிகோட்டம்  கள்ள கடத்தல் காப்பி பிடிபட்ட பின்தான் பெரிய நிறுவனங்களும் இதே வேலையை செய்திருக்கிறார்கள் என்று தெரியவந்தது.

இந்த திரைப்பட ( + கள்ளகடத்தல்)  கோஷ்டிக்கும் எம்ஜியாருக்கும் உள்ள தொடர்பு பிரசித்தமானது
இதே பின்னணியில்  இருந்த்துதான் புலிகள் இயக்கம் உருவானது.
ஈழ விடுதலை போராட்டம் வெடிக்கும் முன்பே இந்த தொடர்பும் பரிச்சயமும்   எம்ஜியாருக்கு இருந்தது.

ஏனைய இயக்கங்கள் அரசியல் ரீதியான கலந்துரையாடல்கள் மூலம் மக்களை அரசியல் மயப்படுத்தி கொண்டிருந்த வேளை,
 இந்த கள்ளகடத்தல் மாபியாக்கள் எம்ஜியரோடு ஏற்கனவே இருந்த தொடர்பையும் வர்த்தகத்தையும்  அரசியல் ரீதியாக் விரிவு படுத்தும் முயற்சியில் ஈடு பட்டுகொண்டிருந்தனர் .

தனது  திரைப்படங்களின் விற்பனை விநியோகம் போன்ற வியாபார விவகாரங்களில் திரு எம்ஜியார்  மிகவும் புத்திசாலியாக இருந்தார்.
தமிழகத்தையும் தாண்டி இலங்கையில் எப்படி தனது படங்கள ஓடவேண்டும் என்பதில் அவரின் கூர்ந்த மதி நுட்பம் பாரட்ட படவேண்டியதே.

இலங்கையில் எம்ஜியாரின் ஆஸ்தான பட விநியோகஸ்தராக அந்த புது தியேட்டர் முதலாளி மாறி இருந்தார்.
வடபகுதியில் முதல் முதலில் டபிள் சைஸ் போஸ்டர் ஒட்டியது காவல்காரன்   படத்திற்குதான் . அதன் பின்பு தொடர்ச்சியாக எல்லா எம்ஜியார் படங்களுக்கும்  அது தொடர்ந்தது.
ஏனைய மூன்று பெரிய விநியோகஸ்தர்களும் எல்லா படங்களையும் ஒரே மாதிரித்தான் விளம்பரங்கள் செய்வார்கள்.
ஆனால் நமது எம்ஜியாரின் ஆளோ இரண்டு படத்திற்கு செய்யவேண்டிய அளவு விளம்பரத்தை செய்வார்.
யாழ்ப்பாண மக்களுக்கு பெரிய அளளவில் கட்டவுட்டுக்களை முதல் முதலில் காட்டியவர் அவர்தான்.  
இதன் மூலம் அவர் எம்ஜியாரின் செல்ல பிள்ளையாகவே மாறி இருந்தார்.
 

இந்த முதலாளிக்கு தனது  இறக்குமதி லைசன்ஸை ஒரு சதம் கூட வாங்காமல் தமிழரசு தலைவர்கள் கேட்டு கொண்டார்கள் என்பதற்காக இனமாகவே கொடுத்தார் சினிடோன் நிறுவன அதிபர் திரு  கி துரைசிங்கம்  அவர்கள்.- 

இவரது நிறுவனம் எம்ஜியார் நடித்த அந்தமான் கைதி விநாயக சதுர்த்தி போன்ற சில படங்களை விநியோகித்தது
இவர் தமிழரசு கட்சியின் நிறுவனர்களில் ஒருவர்.
 நல்லூர் பிரதேச சபை தலைவர் , யாழ் மாநகரசபை உறுப்பினர் .
இவரது செல்வாக்கு வளர்வதை பொறுக்காத தமிழரசு கட்சியின் நல்லூர் எம்பியும் செல்வநாயகத்தின் சம்பந்தியுமான திரு இ எம் வி நாகநாதன் அவர்கள் தமிழரசு கட்சியின் அமைச்சர் திரு மு திருச்செல்வத்தை கொண்டே கலைத்தார் .
தன்சொந்த கட்சி தலைவரையே முதுகில் குத்திய வரலாறு தமிழரசு கட்சிக்கே உரியது!   

அப்போது சிவாஜி முகாமில் இருந்த கோவை செழியன் தனது  குமரிகோட்டம் (எம்ஜியார் நடித்த படம்)  படத்தை எம்ஜியாரின் ஆஸ்தான முதலாளிக்கு விற்கவில்லை.
குமரிக்கோட்டம் படத்தின் நாலாவது கள்ள கடத்தல் காப்பி வடமராட்சி கடற்கரையில் போலீசாரிடம் பிடிபட்டது.
கள்ள கடத்தல் காரர்களுக்கே உரிய தொழில் போட்டி காட்டி கொடுப்பு என்பது அப்போதே இருந்த நடைமுறைதான்.
ஈழ விடுதலை போராட்டமாக  உருவான போது எம்ஜியாரின் ஆஸ்த்தான தியேட்டர் முதலாளி அரசியல்வாதி ஆக புரோமோஷன் பெற்று இருந்தார்.
அவருக்கு இருந்த கள்ள கடத்தல் தொடர்புகள் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தேன் அல்லவா.
அவர் புலிகளோடு நெருங்கிய தொடர்பை பேணியவர் .
எம்ஜியாரின் திரைப்பட +
எம்ஜியாரின்  ஆஸ்த்தான இலங்கை விநியோக முதலாளி  +
எம்ஜியாரின்  ரசிகர் மன்றங்கள் (பிரைவேட் ஆர்மி) +
புலிகளின் பிரைவேட் ஆர்மி இவைகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று நன்றாக பொருந்தி போனது
தேனோடு சேர்ந்த குளிர் தென்றல் . கோல நிலவோடு சேர்ந்த சிங்கரவேலர்கள்
பிறகென்ன  சங்கீத கச்சேரி ஆரம்பமானது
 இது என்ன பெரிய விடயமா என்ற ரீதியில் முழு மூச்சாக எம்ஜியாரும் புலிகளும் .  பிரைவேட் ஆர்மியை பலப்படுத்தி கலைஞரையும் திமுகவையும்  ஈழ போராட்டத்தில்  இருந்து ஓரங்கட்டுவதே தமது தலையாய
பணியாக வேலை பார்த்தனர்.
புலிகளை பிரைவேட் ஆர்மி என்பது ஏனெனில்  அவர்களின் ஒவ்வொரு அங்கத்தவரும்  உறுதி மொழி  எடுத்து கொள்ளும் போது ஈழத்துக்காக என்றோ அல்லது தமிழுக்காக  என்றோ உறுதி மொழி கூறுவதில்லை .
நான் என்றும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு உண்மையாக  இருப்பேன்  என்றுதான் உறுதி மொழி எடுப்பார்கள்
ஒரு தனி மனிதனுக்கு மட்டும் உண்மையாக இருப்பேன் என்று உறுதி மொழி எடுத்தால் அது அந்த மனிதனின் பிரைவேட் ஆர்மிதானே?
எம்ஜியார் மட்டும் என்ன குறைந்தவரா?
ஒவ்வொரு அதிமுககாரரும் கையில் பச்சை குத்தி கொள்ளவேண்டும் என்ற உத்தரவிட்டவர்தானே?
ஒரு அரசியல் கட்சியின் ஆதரவு எனபது மாறக்கூடியது . மாறவும் வேண்டும் அதுதான் ஜனநாயகம் .
கொள்கையில் மாறுபாடு என்று கருதினால் கண்டிப்பாக அந்த கட்சிக்கான ஆதரவை மறு பரிசீலனை செய்யவேண்டும் .
கையில் நிரந்தரமாக பச்சை குத்தி விட்டால் கதை முடிந்தது .
அடிமைதான் . யாருக்கு ? எம்ஜியாருக்கு .
ஒவ்வொரு அதிமுககாரரும் எம்ஜியாரின் பிரைவேட் ஆர்மியாக பச்சை குத்தப்பட்டனர் .
எம்ஜியாருக்கும் பிரபகரனுகும் இருக்கும் பாசிச வியாதி மிகவும் வெளிப்படையாகவே தெரிந்தது.
ஆனாலும் சுயநலம் கருதி பலரும் இந்த பிரைவேட் ஆர்மிகளின் எடுபிடிகளாக காலத்தை ஓட்டினார்கள்
இந்த இருவரின் சுயநலத்தினால்   மொத்த தமிழரின் வாழ்வும் ஒரு அவல நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது

May be an image of 3 people and text

கருத்துகள் இல்லை: