Vasu Sumathi : சமஸ்திபூர், பீகார்: நேற்று தர்பங்காவில் இருந்து புதுடெல்லி நோக்கி பயணித்த பீகார் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் என்ஜினில் இருந்து பெட்டிகள் ஓடிக்கொண்டிருக்கும் போதே,
இரண்டு பகுதிகளாக பிளவுபட்டது. நல்ல வேலை அந்த நேரத்தில் வேறு ரயில்கள் வராததால் ஒரு பெரிய ரயில் விபத்து மயிரிழையில் தவிர்க்கப்பட்டது.
குழப்பத்திலுள்ள ரயில்வே பாதுகாப்பு: மீண்டும் மீண்டும் ரயில் விபத்துக்கள் பயணிகளின் பாதுகாப்பு குறித்து ஆபத்தான பல கேள்விகளை எழுப்புகின்றன. இந்த விபத்துகளுக்கு யார் பொறுப்பேற்பது?
இதற்கு முழு காரணம் நாட்டில் இவ்வளவு பேர் பயணிக்கும் இவ்வளவு பெரிய ரயில் நெட்ஒர்க்கிற்கு அளிக்கப்படும் பராமரிப்பு நிதிஒதுக்கீடு போதவில்லை மற்றும் சம்மந்தமே இல்லாத அளவிற்கு பணியாளர் எண்ணிக்கை குறைப்புமே.
சீராக போய்ககொண்டிருந்த ரயில்வேயை நிதியிழப்பில்லாமல் ஓட்டுவதற்கு திறமை இல்லாத இந்த அரசு கடைபிடித்த பல குறுக்கு வழிகளில் ஒன்று வந்தே பாரத் என்ற பெயரில் அதே சேவைக்கு அதிக கட்டணம் வாங்கியது.
இரண்டாவது யார் கேட்டது புல்லட் ட்ரெயின். குஜராத்திலிருந்து மும்பைக்கு ஒருவர் வேகமாக வரவேண்டும் என்றால் விமானத்தில் வரலாமே. எதற்காக பல லட்சம் கோடிகளை அந்த திட்டத்தில் வீணாக இறைக்க வேண்டும். குறித்து வைத்துக்கொள்ளுங்கள் புல்லட் ட்ரெயின் நம்ம நாட்டில் வராது. அப்படி வந்தாலும் விரைவில் மூடுவிழாதான்.
இது தெரிந்தே ஏன் இத்தனை லட்சங்களை அங்கு வாரி இறைக்கிறார்கள்? பின்னே அதானியும் அம்பானியுமா கொட்டுவார்கள். இவர்கள் பல லட்சம் கோடிக்களை கொட்டி சில ஆயிரம் கோடிகளுக்கு அவர்களுக்கு தூக்கி கொடுக்க நடத்தப்படும் அயோக்கியதனமே இது என்று குழந்தைக்கு கூட தெரியும் ஒன்றுமே செய்ய முடியாத கையறு நிலைமையில் உள்ளோம்.
அந்த நிதியும் வந்தே பாரத்துக்கு செலவிட்ட நிதியும் புதிய ரயில்கள் வாங்குவதற்கும், இருக்கும் வழிதடங்களை முறையாக பராமரிப்பதற்கும் செலவிட்டிருந்தால் indru எவ்வளவு விபத்துக்கள் நடந்து இருக்காது பல உயிர்களையும் நாம் இழந்திருக்க மாட்டோம்.
இந்த ரயில் மந்திரி வந்ததிலிருந்து எத்தனை விபத்துகள். அவரது தோல்விகளை உணர்ந்து அவர் ராஜினாமா செய்யப்போவதில்லை. அப்படி செய்தாலும் இன்னொரு மனித நேயமுள்ள பொறுப்பான இன்னொரு மந்திரி வரப்போவதில்லை. அதுவரை..
கூடுமான வரை வட இந்தியாவில் ரயில் பயணங்களை தவிர்த்துவிடுங்கள் என்ற என் வாழ்வில் நான் சொல்லுவேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. வேதனை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக