ஞாயிறு, 26 மே, 2024

பிரகாஷ் ராஜ் : மோடி தெய்வமகன் கிடையாது.. டெஸ்ட் டியூப் பேபி’’.. விசிக விழாவில் ஆவேச பேச்சு

 tamil.oneindia.com  - Nantha Kumar R  :   சென்னை: ‛‛பிரதமர் மோடி தெய்வமகன் எல்லாம் கிடையாது.
அவர் ஒரு டெஸ்ட் டியூப் பேபி'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி விருது வழங்கும் விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மேலும் அவர் இந்த மேடையில் தொடர்ந்து பிரதமர் மோடியை ஒருமையில் விமர்சனம் செய்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
தொல் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது.



Modi is not the son of a god he is the test tube baby says Prakash Raj in Thol Thirumavalavan VCK Award function

இந்த விழாவில் நடிகர் பிரகாஷ்ராஜ்-க்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. அதேபோல் திராவிடர் கழக பிரச்சார செயலாளரும், வழக்கறிஞருமான அருள்மொழிக்கு பெரியார் ஒளி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது வழங்கப்பட்டது.

மேலும் இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்துக்கு காமராசர் கதிர், பேராசிரியர் ராஜ் கௌதமனுக்கு அயோத்திதாசர் ஆதவன், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.என். சிக்கந்தருக்கு காயிதேமில்லத் பிறை, கல்வெட்டியலறிஞர் எ.சுப்பராயலுவுக்கு செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்த விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியதாவது: நான் திருமாவளவன் போன்ற நீண்ட அரசியல் பயணம், கொள்கை போராட்டம் நடத்தியவன் இல்லை. வரும் 4ம் தேதிக்கு பிறகு தெய்வ மகன் போன பிறகு எனக்கு வேலை இருக்கிறதா என்பது பற்றி தெரியாது. அம்பேத்கர் இந்த அரசியலமைப்பு சட்டத்தை எழுதாமல் இருந்தால் இந்த நாடு எப்படி இருக்கும் என்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது. அவரதுது சிந்தனை என்பது தாங்கி கொண்ட அவமானத்தின் வழியாக பிறந்தது. தேர்தல் சமயத்தில் கர்நாடகாவில் வாடி என்ற ஊருக்கு சென்னறன். அங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் ரயிலில் வந்து இறங்கி நின்றார். அங்கு இலக்கியவாதிகள் மேடைகள் சார்பில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

திறந்த ஜீப்பில் என்னை அழைத்து சென்றனர். மார்க்கெட் தெருவில் சென்று கொண்டிருந்தேன். என்னை தொட வேண்டும் பேச வேண்டும் என மக்கள் கூறினார்கள். என் அருகே இருந்தவர் வேண்டாம் என்று கூறினார். ஆனால் நான் அவர்களை சந்தித்தேன். அப்போது கறிக்கடைக்காரர் கை கொடுத்தபோது கறி மனம், அவரது வியர்வை வந்தது. பூவிக்கிற தாய் கைத்தந்தபோது மென்மை தெரிந்தது. இரும்பு கடைக்காரரின் கையில் ரப்னஸ் தெரிகிறது.

‛‛நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு விருது''.. பெருமைப்படுத்திய திருமா.. ‛பாசிசத்துக்கு எதிரானவர்' என புகழாரம்‛‛நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு விருது''.. பெருமைப்படுத்திய திருமா.. ‛பாசிசத்துக்கு எதிரானவர்' என புகழாரம்

சின்ன குழந்தைகள் செல்லம் செல்லம் என கூறி ஆர்வமாக பார்த்தனர். அந்த இடத்தில் எனக்கு அம்பேத்கர் தெரிந்தார். அப்போது நான் இந்த தெய்வமகனை (மறைமுகமாக பிரதமர் மோடியை குறிப்பிடுகிறார்) நினைத்தேன். அவன் ஒரு புஷ்ப விமானத்தில் வருவார். தேரில் நிற்பார். எல்லோரும் பூ போடுவார்கள். மக்கள் வேலிக்கு அந்த பக்கம் தான் நிற்கிறார்கள். அவனுக்கு எப்போது மக்களின் பசி தெரியும். வலி புரியுமா அவன் தெய்வமகன் அல்ல. டெஸ்ட்டியூப் பேபி.

அடுத்ததாக மன்னார் வருவார் என்ற பயம் எனக்கு இல்லை. அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே என்பவன் நான். நம்முடைய பயம் தான் அவனோட பலம். சர்வாதிகாரி ராட்சசனாக இருக்கிறான். நம்மை ஜெயிக்க யாரும் இல்லை என நினைப்பவன் மனதிலும் மனிதன் இருப்பான். அந்த சமயத்தில் தோற்கப்போகிறோம் என்ற மனநிலை வந்தவுடன் ராட்சசனாக மாறுகிறான். அதற்க நாம் தயாராக வேண்டும்.

கோர்ட் நீதிபதி ரிட்டையர்மென்ட் தேதியில் ஆர்எஸ்எஸ்ஸில் இருந்து வந்தவன் என சொல்கிறான் என்றால் அவன் கொடுத்த தீர்ப்புகள் எப்படி இருக்கும் என்பது நமக்க தெரியாதா? இது நிரந்தரமா போராட்டம். அம்பேத்கர், பெரியார் பற்றி பேசினால் இப்போது புரியாது. அம்பேத்கர் தலித், ஏழையாக இருக்கலாம். ஆனால் நல்ல உயர்ந்த எண்ணம் கொண்டவர். மெஜாரிட்டியின் பொறுப்பு மைனாரிட்டியை பார்த்து கொள்வது தான். ஆனால் நிலை அப்படியானதாக இல்லை.

அரசியல்வாதிகள் வருவார்கள் போவார்கள். அரசியலில் எதிர்க்கட்சிகள் ஜெயிக்காது. ஆளும் கட்சி தான் தோற்றுப்போகும். அடுத்த 5 முதல் 10 ஆண்டுகள் அவர்கள் மீண்டும் வர முடியாத அளவுக்கு மீண்டும் செயலில் ஈடுபட வேண்டி உள்ளது. நம்முடைய வலி தெரிந்த நபரை மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை: