ஞாயிறு, 16 ஜூலை, 2023

கோகா-கோலா போன்றவற்றால் புற்றுநோய் – எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்

தேசம் நெட் - அருண்மொழி :  நாம் அன்றாட எடுத்துக்கொள்ளும் மென் பானங்களில் ‘அஸ்பார்டேம்’ என்னும் செயற்கை இனிப்பூட்டியை கழிக்கின்றனர்.
அது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ‘கார்சினோஜன்’ எனப்படும் பொருளின் கீழ் வகைப்படுத்தப்படலாம் என்று உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு நிபுணர் குழுக்கள் வெள்ளிக்கிழமை அறிவித்தன.
இது பாதுகாப்பற்றது என்று ஏற்கனவே அறிவித்திருந்தது,
தற்பொழுது, அந்தப் பொருள் தீங்கு ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்பதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிகிறது,
ஒரு குழு. மற்றொரு குழு, அந்தப் பொருள் எவ்விதத் தீங்கை ஏற்படுத்தும் என்பதை மதிப்பிடுகிறது.

இதனை தொடர்ந்து,  உலகின் மிகப் பிரபலமான இனிப்பூட்டிகளில் அஸ்பார்டேமும் ஒன்று. இது கோகா-கோலா’ பானங்கள், ‘மார்ஸ் சூயிங்கம்’ போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
 இறுதியாக செயற்கை இனிப்பூட்டிகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் ஊட்டச்சத்துத் துறைத் தலைவர் டாக்டர் பிரான்செஸ்கோ பிரான்கா பேசினார்.

அப்பொழுது ஒரு செய்தியாளர் அவரிடம் “உணவில் சீனியைச் சேர்க்க வேண்டுமா இனிப்பூட்டியைச் சேர்க்க வேண்டுமா என்ற சந்தேகத்தில் உள்ளவர்களுக்கு, மூன்றாவது தீர்வு ஒன்று வழங்கப்படவேண்டும்” என்றார். அதற்கு அவர்கள் “அவற்றுக்குப் பதிலாகத் தண்ணீரை அருந்தவேண்டும்” என்று கூறினார். மேலும், ஒருநாளில் 40 மில்லிகிராமுக்கும் குறைவான அளவிலே ‘அஸ்பார்டேமை’ ஒருவர் உட்கொள்ள வேண்டும் என்று அது பரிந்துரைத்துள்ளது.

கருத்துகள் இல்லை: