வியாழன், 15 டிசம்பர், 2022

தமிழின் முதல் தர கவிஞர் கண்ணதாசனா? பாரதியா? பட்டுகோட்டையா? வாலியா? பாரதிதாசனா......

 ராதா மனோகர் : இலங்கை  இடது சாரிகள் மற்றும் முற்போக்குவாதிகளுக்கு ஒரு கவிதையை உதாரணமாக  காட்டும் தேவை ஏற்படும் போதெல்லாம்  பாரதியின் கவிதை வரிகளை மட்டுமே  எடுத்து முன்வைப்பார்கள்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாரதியை குறிப்பிடுவது (உ ம் பாலச்சந்தர் மணிரத்தினம் கமல் வகையறாக்கள்) பார்ப்பனர்களின் வழக்கம்
அது அவர்களின் இரத்த பாசம் அதை தவறென்று கூறவும் இல்லை
ஆனால் இலங்கை இந்திய இடதுசாரிகளுக்கு பாரதியை தவிர வேறு எந்த புலவரும் ஞாபகத்தில் வருவதில்லையே ஏன்?
பாரதி  தாசன் கண்ணதாசன் வாலி பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் உடுமலை நாராயண கவி  .மருதகாசி புலமை பித்தன் பிறைசூடன் கவிஞர் கா மு ஷெரிப் கவிஞர் காமராசன்  கவிஞர் இன்குலாம் கவிஞர் அப்துல் ரஹ்மான் கவிஞர் சுரதா   இன்னும் எவ்வளவோ  மாபெரும் கவிஞர்கள்  இருந்தாலும் ,
பாரதியாரை இடதுசாரிகள் குறிப்பிடுவது ஒரு தற்செயலான நிகழ்வல்ல.
இலங்கை இடது சாரிகளுக்கு தமிழக பார்ப்பனரை குளிர செய்ய பாரதி லேகியம் தேவை!

Durai Ilamurugan  : தமிழ் நாட்டின் நிலையும் அதேதான்

Kalai Selvi  :  மாயவநாதன் குமா பாலசுப்ரமணியம் கூட

Durai Ilamurugan  :  ஆயினும் நீங்கள் கூறிய கவிஞர்களில் பாரதிதாசன் தவிர ‌மற்றவர்கள் பாரதியோடு ஒப்பிடக் கூடியவர்கள் அல்ல.
பாரதியின் கவிதாவிலாசம் மேன்மையானது என்பதில் ஐயமில்லை
ஆனால் ‌இடது சாரிகள் அவரை எந்த வித விமர்சனமும் இல்லாமல் புகழ்வது தான் ‌இடிக்கிறது.



Radha Manoharr  : Duraiswamy பாரதியின் கவிதையை குறை கூறவில்லை ஆனால் எனக்கென்னவோ கண்ணதாசன் , பட்டுகோட்டை, வாலியின் மீதெல்லாம் சினிமா கவிஞர்கள் என்று முத்திரை குத்தப்பட்டது ஒரு பார்ப்பன உள்குத்து போலத்தான் தோன்றுகிறது
பல சினிமா பாடல்களின் தரம் பாரதியின் கவிதைகளை விட எவ்வளவோ மேன்மையானது என்றுதான் எண்ணுகிறேன்

Durai Ilamurugan  : Radha Manohar அதுவும் உண்மை தான்

Duraiswamy  :  Radha Manohar வாலியை அந்த பார்ப்பனர்களின் உள்குத்து என்ற கணக்கில் சேர்க்க முடியாதது தானே.
பாரதி நீங்கள் கூறியவர்களுக்கு எல்லாம் ஆதர்ஷமாக இருந்தவர் என கூறலாம். பாரதி கவனத்தில் கொண்ட பலவேறு கூறுகளையும் இவர்கள் தொட்டதாக கூற முடியாது.
திரை கவிஞர்களின் பாடல்களில் கவிதைகளில் அழகியல் சிறப்பாக உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

Duraiswamy  :  Rajendra Babu அது தங்கள் எண்ணமாக இருக்கலாம்.
பாரதி நூறு வருடம் சென்ற பின்னும் வலுவாக இன்னும் நிற்பது போன்று திரை இசை என்ற மிக கவரும் பின்னணி இருக்கும் போதும் இசை தான் நிற்கும் ஒழிய அவர்கள் நிற்க வாய்ப்பு இல்லை என்பது என் கருத்து.
பட்டுக்கோட்டை,கண்ணதாசன் வாலி மற்றும் சிறந்த திரைப்பட பாடல் எழுத்தாளர்களின் வரிகள் நீடித்து நிலைக்க வேண்டும் என நான் உண்மையில் ஆசைப்பட்டாலும் பாரதி போன்று பரவலான மக்களால் போற்றப்பட்டு நீடிக்க வாய்ப்பு இல்லை என நினைக்கிறேன்.

Rajendra Babu  :  Duraiswamy தங்களது கருத்து பாரதி தான் சிறந்தவன் என்று இருந்தால் அதை மட்டும் கூறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அதற்காக மற்ற கவிஞர்களை திரைக் கவிஞர் என்று எழுதுவது நன்றல்ல என்பது என் கருத்து.
நன்றி

Radha Manohar:  கவிஞர்களை திரைக் கவிஞர் என்று எழுதுவது   நன்றல்ல🌹

Duraiswamy  :  Rajendra Babu திரைப்பாடல்கள் வழியாக மக்கள் அறிந்தவர்களை அப்படித்தானே கூற முடியும்! அவர்களைக் குறை கூறுவது என் நோக்கம் அல்ல.

Rajendra Babu  : Duraiswamy தென்றல் பத்திரிக்கை, கண்ணதாசன் என்று ஒரு மாதவியல் புத்தகம், போன்ற ஊடகங்களில் அவர் எழுதியது நீங்கள் படிக்கவில்லை என்று நினைக்கின்றேன்.
நீங்கள் உங்கள் கருத்துடன் நில்லுங்கள். நாங்கள் எங்கள் கருத்துடன் நிற்கின்றோம், நன்றி

Duraiswamy :   Rajendra Babu ஒவ்வொரு எழுத்துக்கும் குறை கண்டுபிடிப்பது என்றால் நான் தயாராக இல்லை.
வாழ்க நலமுடன்.

கருத்துகள் இல்லை: