வியாழன், 15 டிசம்பர், 2022

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அனைத்துக்கட்சிகளையும் அழைக்கிறார்

தினத்தந்தி  : இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அனைத்துக்கட்சிகளையும் அழைக்கிறார்
கொழும்பு, இலங்கையில் பெரும்பான்மையாக வாழும் சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வருகிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே திட்டமிட்டு உள்ளார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில்,
அதற்கு முன் இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதற்காக அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றை நேற்று முன்தினம் அவர் நடத்தினார்.
இதில் இலங்கை தமிழர்களின் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சிங்கள கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வை வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் 13ஏ தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இந்த சட்ட திருத்தம், இந்தியா-இலங்கை இடையே கடந்த 1987-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் ெகாண்டு வரப்பட்டது ஆகும்.
மாகாண தேர்தல் இந்த 13ஏ சட்ட திருத்தத்தை அமல்படுத்த அதிபர் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் ஒப்புக்கொண்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், '13ஏ சட்ட திருத்தம், அரசியல் சாசனத்தின் ஒரு பகுதியாக ஏற்கனவே இருக்கிறது. இது பெரும்பாலான கட்சிகள் ஒப்புக்கொண்ட ஒரு விஷயமும் ஆகும்' என கூறினார்.

13ஏ சட்ட திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் சுயாட்சிக்கான உறுதியை மக்களுக்கு வழங்கும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாகாண சபைத்தேர்தலை உடனடியாக நடத்துமாறு அவர் இலங்கை அரசையும் வலியுறுத்தி உள்ளார். சி.வி.விக்னேஸ்வரன் இதைப்போல மாகாணங்களுக்கு ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை உறுதி செய்யுமாறு அனைத்துக்கட்சி கூட்டத்தில் கேட்டுக்கொண்டதாக இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்-மந்திரி சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

மேலும் அவர், 'தமிழர் பகுதிகளில் அரசின் நில ஆக்கிரமிப்பு பிரச்சினையை கூட்டத்தில் எழுப்பினோம். அரசு துறைகளின் கீழ் மக்களின் நிலங்களை அவர்கள் கையகப்படுத்துகின்றனர். இதை நிறுத்துவதுடன், நில உரிமையை மாகாண கவுன்சில்களுக்கு வழங்க வேண்டும்' என்றும் கேட்டுக்ெகாண்டார். இதைத்தவிர கொடூரமான பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதித்ததாக அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: