திங்கள், 2 ஜனவரி, 2017

வெங்கையா நாயுடு : ஜெயலலிதா மரணத்தில் மர்மம் ஏதுமில்லை! "அந்த 75 நாட்கள்" மர்மப்படத்தை ரிலீஸ் செய்யவேண்டியதுதானே?

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகிறது. நடிகை கவுதமி இது பற்றி இரண்டு முறை பிரதமருக்கு கடிதம் எழுதினார். வழக்கமாக இம்மாதிரி விவகாரங்களில் பரபரப்பாக கருத்துக் கூறும் சுப்பிரமணியன் சுவாமி கூட “ மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஆதாரம் இல்லாமல் தான் வலியுறுத்த முடியாது” எனக் கூறினார்.ஆனால் தீபா ஜெயக்குமார், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா, உள்ளிட்ட சிலர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள்.இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதியே தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறினார்.இந்தக் கருத்துக்களை அடியொற்றி பாமக தலைவர் ராமதாஸ் அவர்களும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களும் அறிக்கை வெளியிட்டனர்.
இந்நிலையில் இன்று சென்னை வந்த பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான வெங்கய்யா நாயுடு ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் போது “மாநில அரசின் உள்விவகாரங்களிலோ, அவர்களின் முடிவுகளிலோ மத்திய அரசு தலையிடாது.சர்வதேச தரத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சையால் உடல் நிலை தேறி வந்த ஜெயலலிதா திடீர் என மரணமடைந்தார். லண்டன் மருத்துவர் ரிச்சர் பீலே, எய்ம்ஸ் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையளித்தனர். அந்த அறிக்கையில் கூறை கூற ஒன்றும் இல்லை. ஆதாரமின்றி ஜெயலலிதாவின் மரணத்தை சந்தேகிப்பது தவறு. பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்வது அருவருக்கத்தக்கது” என்றார் வெங்கய்யா நாயுடு.மின்னமம்பலம்

கருத்துகள் இல்லை: