புதன், 24 ஜூன், 2015

ஜெயலலிதாவின் விடுதலை ரத்துசெய்யுமாறு கர்நாடகா அப்பீல் !ஒரு அலசல் !

இந்த வழக்கில் பவானிக்கு கொடுத்தது எத்தனை கோடியோ, அவர் அதற்கான வேலையை கச்சிதமாக செய்து விட்டார். அடுத்தது அந்த குமாரசாமிக்கு கொடுத்தது எத்தனை கோடியோ, அவரும் நன்றியுடன் அவர் வேலையை செய்து முடித்து விட்டார். இப்போது உச்ச நீதி மன்றத்தில் என்ன செய்ய போகிறார்கள். அங்கும் ஒரு தத்து இருக்கிறார். ஆனால் தற்போது உள்ள ஆச்சார்யாவின் ஆதாரங்கள் படி. எத்தனை தத்து வந்தாலும் பப்பு வேகாது என்பது ஜெயாவுக்கே தெரியும். ஏனென்றால் அந்த கணக்கு குளறுபடி சிறு பள்ளி மாணவர்களுக்கே தெரியும். மேலும் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வாதாட பவானிக்கு எப்போது குமாரசாமி அனுமதி கொடுத்தாரோ, அப்போதே கொமாரசாமியின் சாயம் வெளுத்துவிட்டது. இதில் உள்குத்து இருக்கிறது. இவர்கள் மேல் விசாரணை கமிஷன் வைக்கவேண்டும். மேலும் கர்நாடகாவோடு காரியத்தை முடித்து விடலாம் என்று ஜெயா தப்பு கணக்கு போட்டுவிட்டார். அவர்கள் அப்பீல் செய்வார்கள் என்று நினைக்கவில்லை. ஜூலை 7 இல் குரு பெயர்ச்சி. அதில் நல்லதுமுண்டு கேட்டதுமுண்டு. மற்றவர்களை மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் இந்த கெதி தான். தமிழ் நாட்டில் அதிக படியான தலைவர்கள் யாரும் ஜெயாவுக்கு ஆதரவாக பேசவில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
புதுடில்லி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கில், கடந்த, மே 11ல், அவரை விடுவித்து, கர்நாடகா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல் முறையீடு செய்யப்பட்டது.

அதில், 'ஜெயலலிதாவின் விடுதலையை ரத்து செய்ய வேண்டும்; தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்' என, கர்நாடகா அரசு கோரியுள்ளது.வழக்கு:
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 18 ஆண்டுகளுக்கு முன், இப்போதைய, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், ஜனதா கட்சியின் முன்னாள் தலைவருமான சுப்பிரமணியன் சாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கு, கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. சிறப்பு கோர்ட் நீதிபதி குன்ஹா, கடந்த ஆண்டு, செப்டம்பர் 27ல், ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு, தலா, நான்காண்டு சிறை தண்டனையும் விதித்தார்.மேலும், ஜெயலலிதாவுக்கு, நுாறு கோடி ரூபாய் அபராதமும், பிறருக்கு, தலா பத்து கோடி ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.> இதையடுத்து, முதல் வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த ஜெயலலிதா, சிறையில் அடைக்கப்பட்டார். அக்டோபர் 17ல், அவரை ஜாமினில் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது; சிறையிலிருந்து அவர் வெளியே வந்தார். அதே நேரம், தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணையை, மே 12க்குள் முடிக்க, கர்நாடகா உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, கடந்த, மே 11ல் பிறப்பித்த உத்தரவில், ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலா, அவரின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோரை, வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார். இதையடுத்து, ஜெயலலிதா முதல்வராக மீண் டும் பொறுப்பேற்றார். இந்நிலையில், காங்கிரசை சேர்ந்த, முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு, ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல் முறையீடு செய்தது.
வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், கர்நாடகா அரசின் மேல் முறையீட்டு மனுவை, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

அதில், 'ஜெயலலிதா மற்றும் மூவரை விடுதலை செய்து கர்நாடகா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; அந்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்' என, கோரியிருந்தார்.

இந்த மனு, கோடை விடுமுறைக்குப் பிறகு, சுப்ரீம் கோர்ட், ஜூலை 1ம் தேதி கூடும்போது,விசாரணைக்குஎடுத்துக் கொள்ளப்படலாம் என, டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
'வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, கர்நாடகா அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்' என, ஒரு மாதத்திற்கும் மேலாக வலியுறுத்தி வந்த தமிழக அரசியல் கட்சிகள், கர்நாடகா அரசு, நேற்று மேல் முறையீடு செய்துள்ளதை வரவேற்றுள்ளன.>கடன் விவர கூட்டலில் தவறு :
மேல் முறையீட்டு மனுவின் முக்கிய அம்சங்களாவன:
* இந்த வழக்கில், கர்நாடகா விசாரணை அமைப்பு, கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் முன், வாதியாக சேர்க்கப்படவில்லை.
* ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் விவரங்களை, உயர்நீதிமன்றம் தவறாக கணக்கிட்டுள்ளது.
* மொத்த கடன், 10.67 கோடி ரூபாயாக இருக்க வேண்டிய நிலையில், 24.17 கோடி ரூபாய் என, தவறாக கணக்கிடப்பட்டுள்ளது.
* வருமானத்தை விட, 8.12 சதவீதம் அளவிற்கு தான் ஜெயலலிதா சொத்து சேர்த்துள்ளார் என கருதி, நீதிபதி குமாரசாமி அவரை விடுதலை செய்துள்ளார். ஆனால், 76.7 சதவீத அளவுக்கு, வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து சேர்த்துள்ளார்.
* வருமானத்திற்கு அதிகமாக, 16.32 கோடி ரூபாய் சொத்து சேர்க்கப்பட்டுள்ளது; வருமானம், 21.26 கோடி ரூபாயாக நீதிபதியால் கண்டறியப்பட்டுள்ளது.
* 'வருமானத்திற்கு அதிகமாக, 10 சதவீதத்திற்குள் சொத்து சேர்த்திருந்தால், வழக்கிலிருந்து விடுதலை செய்யலாம்' என, சுப்ரீம் கோர்ட் முன்னர் பிறப்பித்திருந்த உத்தரவை, இந்த வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு சாதகமாக ஆக்கியுள்ளது. ஆனால், அவர், 10 சதவீதம் அல்ல; 76 சதவீதம் அளவிற்கு சொத்து குவித்துள்ளார்.
* கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்தமேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், தமிழக அரசின் சிறப்பு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமிக்கும் அதிகாரம், தமிழக அரசுக்கு இல்லை என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை, கவனத்தில் கொள்ளவேண்டும். * முதல்வர் பதவியில் இருந்தபோது, பதவியை தவறாக பயன்படுத்தி, வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்துகளை குவித்துள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் மோசமானவை. அவரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, நீதித்துறையின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும். இவ்வாறு, கர்நாடகா அரசின் மேல் முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது>புது கணக்குப்படி 168 சதவீதம்! 'கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கணக்கு பிழையை சரி செய்தால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின், வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு, 168 சதவீதம் வரும்' என, 'அப்பீல்' மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை, விடுதலை செய்து, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.வருமானத்துக்கு அதிகமான சொத்தின் மதிப்பு, 8.12 சதவீதம் என கணக்கிட்ட, நீதிபதி குமாரசாமி, 'ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பார்த்தால், அது, அனுமதிக்கப்பட்ட அளவு தான்' என, குறிப்பிட்டிருந்தார்.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், சிறப்பு அனுமதி மனுவை (எஸ்.எல்.பி.,), கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பிறப்பித்த உத்தரவில், கணக்கு பிழை இருப்பதாக, சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மனுவில், கூறியிருப்பதாவது:உயர் நீதிமன்ற உத்தரவில் உள்ள பிழையை சரிசெய்தால், வருமானத்துக்கு அதிகமான சொத்தின் மதிப்பு, 16.32 கோடி அளவுக்கு வருகிறது. அது, உயர் நீதிமன்றம் கணக்கிட்ட, 8.12 சதவீதத்துக்கு மாற்றாக, 76.70 சதவீதமாகத் தெரிகிறது. இதனுடன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சொன்னது போல், கட்டடங்களின் கட்டுமான செலவான, 19.90 கோடி ரூபாயைச் சேர்த்தால், சொத்தின் அதீத மதிப்பு, 93.60 சதவீதமாகிறது.இத்தொகையுடன், ஜெயா பப்ளிகேஷன்ஸ் வருமானமான, 22.75 கோடி ரூபாயைச் சேர்த்தால், கூடுதல் வருமானம், 123.50 சதவீதமாகிறது; இதனுடன், சுதாகரனின் திருமண செலவான, 6.16 கோடி ரூபாயைச் சேர்த்தால், வருமானத்துக்கு அதிகமான சொத்தின் மதிப்பு, 168 சதவீதம் ஆகிறது.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. தினமலர்.கம

கருத்துகள் இல்லை: