வியாழன், 14 ஆகஸ்ட், 2014

மியான்மார் தமிழர் திருமணங்களில் அய்யர் இல்லை ! சுயமரியாதை திருமணம்? மியன்மார் தமிழர்களை மறந்ததேன் ?



மியன்மார் தமிழர்களை மறப்பதா?கோ.வேணுகோபாலன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: உலகமே திரும்பிப் பார்க்குமளவில், அண்மையில் கோவையில் நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டின் கவியரங்கம், கருத்தரங்கம், ஆய்வரங்கம் உரை வீச்சு போன்ற அரங்குகள் எதிலுமே, மியன்மார் நாட்டில் வாழும் தமிழர்களைப் பற்றி யாருமே பேசவில்லை.மாநாட்டில் பேசிய, வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உட்பட அனைவருமே, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மட்டுமே தமிழ் மக்கள் வாழ்ந்து வருவதாகவும், தமிழ்மொழியை வளர்த்து வருவதாகவும் பேசினர்.தமிழக முதல்வர் பேசும் போது மட்டும், "காழகம்' என்பது தான் பர்மா என்று கூறி விளக்கினார். பலர், "கடாரம்' என்பது தான் பர்மா என்று நம்பியிருந்ததற்கு, அவர் கூறியது சரியான பதிலாக அமைந்திருந்தது. முதல்வரின் அந்த விளக்கம், மியன்மார் தமிழர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.இலங்கைப் பேராசிரியர் சிவத்தம்பிக்குக் கூட, "மியன்மார்' என்ற நாடு ஒன்று இருப்பது பற்றிய நினைவு இல்லாமல் போய்விட்டது. மியன்மார் தமிழர்கள், முற்றிலுமாக மறக்கப்பட்டுவிட்டனர்.
"மியன்மார்' எனும் அப்போதைய "பர்மா'வில், 1943-45ல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் களம் அமைத்து, இந்தியத் திருநாட்டின் விடுதலைக்குப் போரிட்ட போது, அவரின் ஐ.என்.ஏ., படையில், 60 சதவீதம் தமிழர்கள், இந்திய விடுதலைக்காக, அந்தப் போரில் உயிர்த்தியாகம் செய்தனர்.பொருதடக்கை வாளும், மணிமார்பும் போர் முகத்தே எவர்வரினும் புறங்கொடாத பருவயிரத் தோள்களையும் கொண்டு போராடிய தமிழர்களின் வீரத்தை மெச்சிய நேதாஜி, "எனக்கு இன்னொரு பிறவி இருக்குமாயின், நான் தமிழனாகவே பிறக்க விரும்புகிறேன்' என்று, நெஞ்சம் நெகிழ்ந்துருகக் கூறினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.மியன்மார் என்பதே சரி; மியான்மர் அல்ல. இங்கு 10 லட்சம் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். "தட்டோன்' எனும் பர்மிய நகரில், பல கோடி ரூபாய் செலவில், வள்ளுவர் கோட்டம் கட்டியுள்ளனர். பல்வேறு தமிழ் அமைப்புகள் வாயிலாக, தமிழ்க் கல்வி விழிப்புணர்வு, ஆன்மிகம், பண்பாடு இவைகள் செழித்தோங்க, அரும்பாடுபட்டு வருகின்றனர்.தங்களைக் கவனத்தில் வைத்து, தமிழ்ப்பாட நூல்கள், தமிழாசிரியர்கள் தேவையை நிறைவு செய்ய உதவுமாறு கேட்கின்றனர்.நான் இருமுறை மியன்மார் சென்று நேரில் கண்டதையும், கேட்டதையும் எழுதுகிறேன். செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள அழைக்கப்படாதது குறித்து மிகவும் வருத்தமடைந்து, எனக்கு தொலைபேசியில் தகவல் கூறினர். தொடர்ந்து நடைபெறும் தமிழ் மற்றும் கலை பண்பாட்டு மாநாடுகளில் கலந்து கொள்ள, மற்ற நாட்டுத் தமிழ்ப் பேராளர்களை அழைப்பது போல், மியன்மார் நாட்டுத் தமிழ் ஆர்வலர்களையும் அழைக்க, அரசு ஆவன செய்ய வேண்டும்.dinamalar.com

கருத்துகள் இல்லை: