சனி, 5 மே, 2012

மதுரை ஆதீனத்தில் Tax RAIDவிசாரணை நகைகள், பல கோடி ரொக்கத்துக்கு கணக்கு எங்கே?

 It Officials Grilled Madurai Aatheenam

. மதுரை ஆதீன மடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
மடத்தில் உள்ள பல கோடி மதிப்புள்ள நகைகள், தங்க கிரீடங்கள், செங்கோல்கள் மற்றும் ரொக்கப் பணத்துக்கு கணக்கு தருமாறு மதுரை ஆதீனம் அருணகிரியிடம் விசாரணை நடந்து வருகிறது.
மண்டல இணைக் கமிஷனர் தலைமையில் 5 அதிகாரிகள் குழு இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட சென்றபோது மதுரை ஆதீனம் ஸ்ரீஅருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரம்மாச்சார்யா மட்டுமே இருந்தார். இளைய ஆதீனம் நித்யானந்தா இல்லை.

நித்யானந்தா பெங்களூர் சென்று விட்டதால், அவரது சீடர்கள் சிலர் மட்டுமே ஆதீன வளாகத்தில் இருந்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள், ஆதீனத்தில் இருந்த யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. அதுபோல வெளியில் இருந்து யாரும் உள்ளே வர அனுமதிக்கவில்லை. எல்லா கதவுகளையும் மூடிக்கொண்டு சோதனை நடத்தினார்கள்.
மதுரை ஆதீனம் 2 மாடி கட்டிடம் மற்றும் வளாகத்தை கொண்டது. அந்த வளாகம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் சோதனை செய்து கொள்ளுங்கள் என்று அருணகிரி அனுமதி கொடுத்தார்.

இதையடுத்து ஆதீனம் முழுக்க ஒவ்வொரு அறையாக சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதிகாரிகள் 2 குழுவாகப் பிரிந்து இந்த சோதனையை மேற்கொண்டனர்.

நித்யானந்தா இளைய ஆதீனமாக பொறுப்பு ஏற்றபோது அவருக்கு தங்க கிரீடம் சூட்டப்பட்டது. கையில் தங்க செங்கோல் கொடுக்கப்பட்டது. அதுபோல பெரிய ஆதீனமும் தங்க கிரீடம் மற்றும் கையில் தங்க செங்கோலுடன் காணப்பட்டார்.

ஸ்ரீஅருணகிரி ஞானசம்பந்தரும், நித்யானந்தாவும் ஏராளமான தங்க ஆபரணங்களும் அணிந்திருந்தனர். அந்த நகைகள் குறித்து வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

நகைகள் தவிர ஆதீனத்தில் பல கோடி பணம் கையிருப்பு உள்ளது. அந்த பணத்துக்கு முறையாக கணக்கு உள்ளதா? என்றும் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். இது தவிர ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றுக்கு மதுரை ஆதீனம் சார்பில் முறைப்படி வருமான வரி கட்டப்பட்டுள்ளதா? எவ்வளவு வரி ஏய்ப்பு நடந்துள்ளது? என்று கணக்குகள் சரிபார்க்கப்பட்டு வருகிறது

கருத்துகள் இல்லை: