இலங்கையின் உள்நாட்டு இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நிர்வாகத்துடன் நேரடியாக செயற்படுவதற்காக இந்தியா விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்கவுள்ளது. மிக விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த நியமனத்தை பெறும் இந்திய பிரதிநிதி நீண்ட கால அடிப்படையில் இலங்கையில் இருந்து செயற்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்படாமையை அடுத்தே இந்த முடிவை இந்தியா எடுத்துள்ளது.
இதேவேளை, பிரதான வெளிநாடுகளான அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன, இலங்கை அரசாங்கம், இனப்பிரச்சினை தீர்வுக்காக விரைவில் அமைக்கவுள்ள நாடாளுமன்றக் குழுவின் முன்னிலையில் முதலில் தமது தீர்வு திட்டத்தை முன்வைக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. அரசாங்கம். மற்றவர்களின் தீர்வு திட்டத்தை அறிவிக்க கோர முன் தமது தீர்வு திட்டத்தை முதலில் முன்வைக்கவேண்டும் என்று இந்த அரசாங்கங்கள் கேட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக