என்னை சந்தித்த ஈழத் தம்பி, எங்கே குத்தினால் என்ன நெல்லு அரியாக வேண்டும் அவ்வளவுதானே. திருமா பேச்சு
தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில், தமிழ் ஈழமே தீர்வு என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
திருமாவளவன் பேசியதாவது: தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகள். அதிமுகவில் ஒரு கோடி பேர் உறுப்பினர்கள் என்று சொல்லப்படுகிறது. திமுகவில் அதைப்போலவே ஒரு கோடி பேர் உறுப்பினர்கள் என்று சொல்லப்படுகிறது. ஏறத்தாழ இரண்டு கோடி பேர் அமைதி. ஈழம் தொடர்பாக வாய் திறக்க முடியாது. பேச முடியாது. புலிகளை ஆதரிக்க முடியாது. தமிழ் ஈழம்தான் தீர்வு என்று களம் இறங்கி போராட முடியாது. இரண்டு கம்யூனிஸ்ட்டுகள் தமிழ் ஈழம் கூடாது என்கிற நிலை. காங்கிரஸ் எதிரிகள். தமிழ்நாட்டில் என்ன ஆதரவை நாம் வென்றெடுத்திருக்கிறோம்.
சும்மா 100 பேர் வைத்திருக்கிறவன்தான் வெளியே வந்து கத்திக்கிட்டு இருக்கிறான். ஈழம் ஈழம் அது ஒன்றே எங்கள் தாகம் தாகம். அவன் பேனர் வைத்திருக்கிற கட்சி. அது கட்சிக்கூட கிடையாது குழு.
தமிழ்நாட்டிலே இன்றைக்கு வெளிப்படையாக தமிழ் ஈழமே தீர்வு. அது ஒன்றுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் வேட்கை என்று வெளிப்படையாக ஆதரிக்கிற கட்சிகள் இணைந்து கைகோர்த்து நிற்கிற கட்சிகள் பாமக விடுதலைச் சிறுத்தைகள்.
இந்த நிலையில் தமிழ் ஈழத்தைப் பற்றி பேசுகிறவர், யாரை சீண்டலாம், யாரை இடிக்கலாம். யாரை குற்றம் சொல்லலாம். யார் மீது பழி போடலாம் என்று ஒரு கும்பல் திரியுது. அவன் ஒரு நாளாது ஒரு தீப்பெட்டி அனுப்பியிருக்க மாட்டான். ஒரு மண்ணெண்ணெய் அனுப்பி இருக்க மாட்டான். சர்க்கரை அனுப்பி இருக்க மாட்டான். மருந்து அனுப்பி இருக்க மாட்டான். இங்கிருந்து ஈழத்துக்கு எந்த பொருளையுமே அனுப்பி வைச்சிருக்க வாய்ப்பே கிடையாது. சும்மா சினிமாவிலே ஆடியிருப்பான். பாடியிருப்பான். கூத்தடிச்சுருப்பான்.
திருமாவளவன் துரோகம் இழைத்துவிட்டார். திமுக கூட்டணியில் இருந்ததால் பாமக துரோகம் இழைத்துவிட்டது. பாமக நடத்தாத மாநாடுகளா. விடுதலைச் சிறுத்தைகள் நடத்தாத போராட்டங்களா. இந்த கட்சிகள் களம் அமைத்து போராடாமல் இருந்திருந்தால், இத்தனை காலமும் இந்த அரசியலை அடைகாத்து இங்கு கொண்டு வந்திருக்க முடியுமா.
தேர்தல் அரசியலில் தவிர்க்க முடியாத நிலைப்பாடுகளை எடுக்க நேரிடுகிறது. கொள்கை அடிப்படையில்தான் கூட்டணி அரசியல் வைக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் இந்தியாவில் எந்த கட்சியும் எந்த கட்சியோடும் கூட்டணி வைக்க முடியாது. பாஜகவோடு காங்கிரஸ் வைத்துக்கொள்ள முடியாது. காங்கிரசோடு பாஜக வைத்துக்கொள்ள முடியாது. திமுகவோடு அதிமுக வைத்துக்கொள்ள முடியாது. அதிமுகவோடு திமுக வைத்துக்கொள்ள முடியாது. அவ்வளவுதான். அதுதான் தவிர்க்க முடியாது. மற்றப்படி எல்லா கட்சிகளும் மாறி மாறிதான் வந்தாக வேண்டும் வேறு வழியில்லை. இது அரசியல் அதிகார பகிர்வுக்கான ஒரு தற்காலிக, இடைக்கால ஒப்பந்தம் அவ்வளவுதான். ஒரு தம்பி சொன்னான். என்னை சந்தித்த ஈழத் தம்பி, எங்கே குத்தினால் என்ன நெல்லு அரியாக வேண்டும் அவ்வளவுதானே. நீங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் உங்கள் ஆதரவு எங்களுக்குத்தான். அதுபோதும் அண்ணா என்று சொன்னான். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக