அழுத்தம் திருத்தமாக ஆப்பு அடிக்கவேண்டும் என்று....
: கலைஞர் பேச்சுதிருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கலைவாணன் கைதை கண்டித்து திருவாரூரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் கலைஞர் தலைமையேற்று இக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர்,’’பொய்வழக்குகளை கண்டிக்கிறோம் என்று இங்கு பேசினார்கள். பொய் வழக்குகள் மட்டுமல்ல; இன்று அராஜக வழக்குகளாக இன்றைக்கு தொடங்கப்படுகின்றன.
கலைவாணன் மீது முதலில் இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.; இந்த வழக்குகளில் எங்கே ஜாமீன் வாங்கிவிட்டு வந்துவிடுவாரோ என்றுதான், அழுத்தம் திருத்தமாக ஆப்பு அடிக்கவேண்டும் என்று மூன்றாவது முறையாக என்ன வழக்கு போடலாம் என்று யோசித்து பார்த்து, தங்களையே ஒரு முறைகண்ணாடியில் பார்த்துக்கொண்டு குண்டர் சட்டம் என்ற ஒரு சட்டத்தை இன்றைக்கு தம்பி கலைவாணன் மீது ஏவியிருக்கிறார்கள்.
ஏறக்குறைய மரண தண்டைக்கு ஒப்பானதுதான்,தூக்கு தண்டனைக்கு ஒப்பானதுதான் குண்டர் சட்டம்.கலைவாணனை பார்த்தால் அவர் குண்டர் இல்லை. நாட்டுலே உள்ள குண்டர்களையெல்லாம் விட்டுவிட்டு கலைவாணன் மீது குண்டர் சட்டமா?<
ஒரு கலைவாணனை அடக்கிவிட்டால். இன்னொரு கலைவாணன் கிடைப்பது சுலபமல்ல; கலைவாணன் சிந்துகின்ற ஒரு துளி ரத்தம்;அதிலே ஆயிரக்கணக்கான கலைவாணன்கள் தமிழகத்திலே முளைப்பார்கள்.
திமுகவை அடியோடு வீழ்த்திவிட வேண்டும் என்று ஒரு கூட்டம் துடிக்கிறது. திமுகவை அழித்துவிட்டால், தாராளமாக ஆட்சி நடத்தலாம். எவனையும் வாடா போடா என்று பேசலாம் என்றூ நினைக்கிறார்கள்.
நான் எவ்வளவு நாளைக்கு இருப்பேனோ என்று தெரியாது. நான் இருக்கும் வரைக்கும் சரி, எனக்குப்பின்னும் யாராலும் திமுகவை அழிக்க முடியாது.
;யார் யாரோ தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால் ஒரு அம்மையார் உயர் ஜாதியிலே பிறந்துவிட்டதால் அவருடைய வழக்கு கிட்டத்தட்ட 14 வருடங்களாக நடைபெற்று வருகின்றன’’ என்று பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக