சனி, 5 அக்டோபர், 2024

வள்ளலாரின் உடலை கற்பூரத்தை கொட்டி எரித்து விட்டார்கள்! தினவர்த்தமானி

May be an image of temple and text
May be an image of 1 person
May be an image of text

ராதா மனோகர்  : வள்ளலார் வடலூர் இராமலிங்க ஸ்வாமிகளின் பிறந்த நாள்  அக்டோபர் 5, 1823
காணாமல் போன நாள் சனவரி 30, 1874
உண்மையில் வள்ளலாருக்கு என்னதான் நடந்திருக்கும்?
கற்பூரத்தை கொட்டி அவ்வுடலை எரித்து விட்டார்கள் என்று  தினவர்த்தமானி பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது!
இந்த செய்தியை திரு வாலாசா வல்லவன் அவர்கள் ஒரு மேடையில் உறுதிப்படுத்தி இருந்தார்.
இதை கேட்ட சிலர் அவரை மேற்கொண்டு பேசவிடாமல் தகராறு செய்து இடை நிறுத்தி விட்டனர்.
திரு  பீட்டர் பெர்ஸவில் பாதிரியார் அவர்கள் இந்த  தினவர்தமானி பத்திரிகையை  தமிழிலும் தெலுங்கிலும் பதிப்பித்து வெளியிட்டவர்!
இவர்தான் திரு ஆறுமுக நாவலரோடு சேர்ந்து பைபிளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவராகும்.
தமிழுக்கும் தமிழர்களின் கல்விக்கும் திரு பெர்சிவல் பாதிரியார் அவர்கள் ஆற்றிய  பணி அளப்பெரியது.



வள்ளலார் பற்றி வேறு எவர் கூறுவதையும் விட திரு பீட்டர் பெர்சிவல் பாதிரியார் அவர்கள் கூறுவதைதான் நாம் ஒரு அதிகார பூர்வ செய்தியாக கருத முடியும்!
இவர்  வாழ்நாள் முழுவதும் சேவை ஒன்றே தன் வாழ்வியலாக  கொண்டு வாழ்ந்த ஒரு பெருமகன்!
.
இவர் யாழ் மத்திய கல்ல்லூரியின் அதிபராக இருந்த காலத்தில்தான் திரு ஆறுமுக நாவலர் அங்கு மாணவனாக இருந்தார்  

வடலூர் இராமலிங்க வள்ளலாரின் உயிரிழப்பு பற்றி பொதுவெளியில் அறிந்த கதை இதுதான் :
பூட்டிய அறைக்குள் சென்று கதவை உள்ளிருந்து பூட்டி கொண்டார்.
பின்பு திறந்து பார்த்தபோது அவர் இருந்த அடையாளமே அங்கிருக்கவில்லை.
அவர் உடலோடு அப்படியே மறைந்து போய்விட்டார்
அதாவது சமாதி அடைந்து விட்டார்
இந்த காணாமல் போதல் என்பது சனாதனத்தை கேள்விக்கு உள்ளாக்கிய எல்லோருக்கும் நிகழ்வதுதான்

யாழ்ப்பாண மத்திய கல்லூரி அதிபராக இருந்து பைபிளை தமிழில் மொழி பெயர்ப்பு செய்தவர்  திரு பீட்டர் பெர்சிவல் பாதிரியார் அவர்கள்!

தினவர்த்தமானி  வார இதழ். 1855 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் வெளியானது
ஆரம்பத்தில் திரு பீட்டர் பெர்சிவல் பாதிரியார் இதன் ஆசிரியராக இருந்தார்
பின்பு சி.வை. தாமோதரம் பிள்ளையும் அவரை தொடர்ந்து திரு  கரோல் விசுவநாதபிள்ளையும் முறையே ஆசிரியர்களாக பணியாற்றினார் இவ்விதழ்  திராவிடன் அச்சகத்தில்அச்சிடப்பட்டது.

அந்த பத்திரிகையில்,
 வள்ளலாரின் பூட்டிய அறையில் சென்று பார்த்தபோது அவரது இறந்த உடல் மிக மோசமாக நாற்றமடித்தது . எனவே சென்று பார்த்தவர்கள் கற்பூரத்தை கொட்டி அவ்வுடலை எரித்து விட்டார்கள்!
 
திரு பீட்டர் பெர்சிவல் பாதிரியாரின்  தினவர்த்தமானி பத்திரிகையின் பிரதிகள் தற்போதும் நிச்சயமாக பாதுகாப்பாக இருக்கும்  என்று எண்ணுகிறேன்.
இனியாவது இந்த உண்மையை ஆதாரத்தோடு வெளிக்கொணரவேண்டும் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்!.
இது பற்றிய மேலதிகமான சில கருத்துக்களை எனது முந்தைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்
அவை  :
வள்ளலாரின் மர்ம மறைவும் நாவலரின் சந்தேக மௌனமும்!
வடலூர் ராமலிங்க சுவாமிகள்  காணாமல் போய் அல்லது மர்மமாக இறந்து  ஐந்து வருடங்களுக்கு பின்பாகத்தான் ஆறுமுக நாவலர் காலமானார்.
வடலூர் ராமலிங்க வள்ளலாரை கடுமையாக எதிர்த்து அவர் மீது பொய் வழக்கு போட்டு தோற்றுப்போனவர் ஆறுமுக நாவலர்!
நாவலரின் பின்பலமாக நின்றவர்கள் வைதீகர்கள் .
இராமலிங்க வள்ளலார் மீது நிகழ்த்தப்பட்ட கொடிய தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி இதுவரை ஒருவரும் கேள்விகள் எழுப்பியதில்லை.
எந்த ஆத்மீகவாதிகளும் சரி எந்த வைதீக பெருமான்களும் சரி வள்ளலாரின் மறைவு பற்றி வாயே திறக்கவில்லை என்று தெரிகிறது .
எனவே இவர்கள் சந்தேகத்திற்கு உரியவர்கள்தான்.
தமிழ்நாடு முழுவதும் அறிந்த ஒரு மாபெரும் ஆத்மீகவாதியின் மர்ம மரணம் பற்றி ஒரு ஆத்மீக பெருந்தகைகளும் சந்தேக கேள்வி எழுப்பாமை அவர்களும் கூட்டு குற்றவாளிகள்தானோ  என்ற சந்தேகத்திற்கு இடம் அளிக்கிறது.
வடலூர்  ராமலிங்க சுவாமிகள் மர்ம மரணம் சனவரி 30, 1874
ஆறுமுக நாவலர் இறப்பு : திசம்பர் 5, 1879.

 Peter Percival (24 July 1803 – 11 July 1882) was a British born missionary and educator who opened religious schools in Sri Lanka and South India during the British colonial era.

Dinavartamani began in 1855 as bilingual in Tamil and Telugu with a separate edition of Telugu started in 1856. Dinavartamani was a weekly edited by Peter Percival and issued from Madras. Its Telugu edition in 1856 had a circulation of 700 copies. The journal covered routine news, science, tales and a few essays on topics of general interest

 

கருத்துகள் இல்லை: