சனி, 8 செப்டம்பர், 2018

ஹர்திக் படேல் 20 கிலோ எடை குறைந்த சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில்

ஹர்திக் படேல்ஹர்திக் படேல்vikatan.com/-sathya-gopalan" : படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீடுகாக உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட ஹர்திக் படேலின் உடல்நிலை திடீரென மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தாருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு கோரி பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதியின் (Patidar Anamat Andolan Samiti) தலைவர் ஹர்திக் படேல் கடந்த 2015-ம் ஆண்டு மிகப் பெரிய போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டத்தின் இறுதியில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். போராட்டத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி அதே கோரிக்கையை வலியுறுத்தி அகமதாபாத்தில் உள்ள தன் பண்ணைவீட்டில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் ஹர்திக் படேல் . இன்று இவரின் போராட்டம் 15-வது நாளை எட்டியுள்ளது. கடந்த 15 நாள்களாக தண்ணீர் கூட அருந்தாமல் ஹர்திக் போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் போராட்ட நாள்களில் பல்வேறு அரசியல் தலைவர்களும் நேரில் வந்து ஹர்திக்கின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று திடீரென ஹர்திக்கின் உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து பேசிய பி.ஏ.ஏ.எஸ் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் மனோஜ் பனாரா, “ நேற்று படிடார் அமைப்பின் மூத்த நிர்வாகிகளான கோதால் தாம் மற்றும் நரேஷ் படேல் ஆகியோர் ஹர்த்திகை சந்தித்துவிட்டுச் சென்றனர். அதன் பின்னர் பிற்பகலில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமானது. மூச்சுவிட முடியாமல் சுயநினைவை இழந்து மிகவும் கஷ்டப்பட்டார். உடனடியாக மருத்துவர்கள் அவருக்கு சில அவசர சிகிச்சையளித்தனர். அது பலனளிக்காததால் உடனடியாக ஹர்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 15 நாள்களாக உண்ணாவிரதம் இருந்ததால் ஹர்திக்கின் உடல் எடை 20 கிலோ குறைந்துள்ளது. மேலும் அவரின் சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியவை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 12 மருத்துவர்கள் கொண்டு குழு ஹர்த்திக்கின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்துவருகிறது. தற்போது அவரது உடல்நிலை தேறி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இவரைத் தொடர்ந்து பேசிய படிடார் அமைப்பின் மூத்த நிர்வாகி நரேஷ் படேல், “ நாங்கள் ஹர்திக் பட்டேலின் உடல்நிலை குறித்து மிகவும் கவலையடைந்துள்ளோம். இந்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடகோரி அவருக்கு நான் வலியுறுத்தியுள்ளேன். அதைப் பற்றி விரைவில் ஹர்திக் அறிவிப்பார் என நினைக்கிறேன். இவரின் போராட்டத்தை கருத்தில் கொண்டு குஜராத் அரசு படேல் சமூகத்தினருக்கான இடஒதிக்கீட்டை விரைவில் வழங்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: