புதன், 23 ஜூலை, 2014

சுற்றுச்சூழலைக் காக்க விருப்பமா? சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறுங்கள்'

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் புவி வெப்பமாதலைத் தடுக்க, உங்களால் முடிந்ததைச் செய்ய விருப்பமா? அப்படியென்றால் சைவ உணவுப் பிரியராக மாறிவிடுங்கள்' என்று சொல்ல வைக்கிறது பருவகால மாற்றம் குறித்து அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட ஆய்வின் முடிவுகள்.
இத்தாலியிலுள்ள சியேனா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் டேரியோ காரோ மற்றும் கார்னஜி மெலன் பல்கலைக்கழகத்தின் கென் கால்டெய்ரா ஆகியோர், 237 நாடுகளில் சுமார் 50 ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் காற்று மாசுபாடு குறித்து ஆய்வு நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, அவர்கள் சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புவியின் வெப்பம் அதிகரித்து வருவதற்கு வளிமண்டலத்திலுள்ள கரியமில வாயுதான் காரணம் எனக் கூறப்பட்டாலும், மீத்தேன், நைட்ரஸ் ஆக்ûஸடு ஆகிய வாயுக்களும் புவி வெப்பமயமாதலில் 28 சதவீதம் பங்கு வகிக்கின்றன.
கால்நடைப் பண்ணைகளிலிருந்து இந்த வாயுக்கள் கணிசமான அளவு வெளியாகின்றன.
கால்நடைகளின் உணவு செரிமானத்தின்போது இயற்கையில் நடைபெறும் வேதி மாற்றத்தின் விளைவாக மீத்தேன் வாயுவும், அவற்றின் கழிவுகள் மக்குவதால் நைட்ரஸ் ஆக்ûஸடும் உருவாகி காற்றில் கலக்கின்றன.
புவி வெப்பமாதலை ஏற்படுத்தும், கரியமில வாயு அல்லாத காற்று மாசுபாட்டில் நான்கில் ஒரு பகுதி, கால்நடைகள் மூலமாக ஏற்படுகிறது.
கடந்த 50 ஆண்டுகளில் கால்நடைகள் மூலமாக ஏற்படும் காற்று மாசுபாடு, வளரும் நாடுகளில் அதிகரித்தும், வளர்ச்சியடைந்த நாடுகளில் குறைந்தும் வருகிறது. dinamani.com

கருத்துகள் இல்லை: